Friday, June 17, 2005

அம்மாக்களுக்கு டிப்ஸ்.....

உங்கள் பெண் குழந்தைக்கு விவரம் தெரிய ஆரம்பிக்கிறபோதே எளிய மொழியில் பாலியல் பலாத்காரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
உடலின் ஒவ்வொரு உறுப்பைப் பற்றியும், அவற்றின் பயன்கள் பற்றியும் சொல்லிக் கொடுங்கள்.

நல்ல ஸ்பரிசத்துக்கும், கெட்ட எண்ணத்துடனான ஸ்பரிசத்துக்கும் உள்ள வித்தியாசத்தை மகளுக்கு உணர்த்துங்கள்.

யாரும் அவளது அந்தரங்க உறுப்புகளைத் தீண்ட அனுமதிக்கக் கூடாது என்பதைக் கண்டிப்புடன் சொல்லிக் கொடுங்கள்.

எந்த ஆணாவது அவளைத் தீண்டும் முறையோ, பேசும் முறையோ தவறாகத் தெரிந்தால் உடனடியாக உங்களிடம் தெரியப்படுத்தச் சொல்லுங்கள். அந்த மாதிரி நேரங்களில் அவளைக் குற்றம் சொல்லாமல், அவளுக்கு நீங்கள் துணை இருப்பீர்கள் என்ற தைரியத்தை உண்டாக்குங்கள்.

ஆண் வேலைக்காரர், டிரைவர், நெருங்கிய நண்பர், உறவினர் என எந்த ஆணுடனும் மகளைத் தனிமையில் விட்டுச் செல்லாதீர்கள்.

எங்கேயாவது வழி தவறிக் காணாமல் போனாலும், கண்களில் தென்படுகிறவர்களிடம் உதவி கேட்காமல், போலீஸ்காரரிடமோ, பெண்களிடமோ விசாரிக்கச் சொல்லுங்கள்.

படுக்கையில் சிறுநீர் கழித்தல், அளவுக்கதிமாக உடல் வியர்த்தல், மனச்சோர்வு, பசியின்மை, பயம், தூக்கமின்மை, படிப்பில் கவனமின்மை போன்ற அறிகுறிகள் உங்கள் மகளிடம் தென்பட்டால் அலட்சியம் செய்யாதீர்கள். அவள் பாலியல் ரிதியான தாக்குதலுக்கு உட்பட்டிருந் தாலும்கூட இந்த அறிகுறிகள் இருக்கக் கூடும்.

தவிர்க்க முடியாமல் உங்கள் மகள் அப்படி ஏதேனும் பாலியல் பலாத்காரத்துக்கு பலியாகி இருந்தாலும், அவளைத் திட்டாதீர்கள். என்ன நடந்தது, எப்படி நடந்தது எனப் பொறுமையாக விசாரியுங்கள். அடுத்து அவளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். எதிர்காலத்தில் விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்துங்கள்.

Thursday, June 16, 2005

செக்ஸில் ஆர்வமின்மையா..?

உணவு, உறக்கம் என எதையும் மறக்கச் செய்து எதிர்பார்த்து ஏங்க வைக்கிற உணர்வுதான் செக்ஸ். ஆனால் அது எத்தனை பேருக்கு இன்ப அனுபவமாக அமைகிறது? தினசரி இரவு எத்தனையோ பெண்களுக்கு திகில் இரவுகளாகவே கழிகிறது. செக்ஸை வெறுத்து ஒதுங்கச் செய்கிறது. செக்ஸின் மீதான எதிர்பார்ப்பு, ஏமாற்றமாக அமைய என்னவெல்லாம் காரணங்கள்....?

தொற்றுக் கிருமிகளின் தாக்குதல்:-

செக்ஸ் உறவு இன்பமாக அமையாமல் போக முதல் காரணம் தொற்றுக் கிருமிகளின் தாக்குதல். இந்தத் தொற்றில் பல வகைகள் உண்டு. அரிப்பும், வெள்ளைப் படுதலும் இருந்தால், உறவின் போது வலி மற்றும் செக்ஸுக்குப் பிறகு உடலிலிருந்து வெளிப்படும் ஒரு வித மீன்வாடை இருந்தால் அது பாக்டீரியா தொற்றின் விளைவாக இருக்கலாம். இதற்கு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். இடுப்பெலும்பு தொடர்பான பிரச்சினைகள் இருந்தாலும் செக்ஸ் இன்பம் பாதிக்கப்படும். தொற்று சினைக் குழாய்கள் வரை இருக்கும் என்பதால் செக்ஸ் வலி மிகுந்ததாக அமையும்.


என்டோமெட்ரியாஸிஸ்:-

கர்ப்பப்பை லைனிங்கின் துண்டுப் பகுதிகள் கர்ப்பப்பைக்கு வெளியே, சினைப்பை மற்றும் சினைப்பை குழாய்கள் அல்லது இடுப்பெலும்பு என எங்கேயாவது வளரலாம். இதன் விளைவாக மாதவிடாயின் போது வெளியேற வேண்டிய இரத்தம் வெளியேறாமல், சின்னச் சின்ன வளரும் நிலையிலான கட்டிகளாக மாறலாம். இது செக்ஸின் போது உயிர் போகும்படியான வலியை ஏற்படுத்தும். இந்தப் பிரச்சினைக்கான தீர்வு அறுவை சிகிச்சை அல்லது ஹார்மோன் சிகிச்சை.


பிறப்புறுப்பு வறட்சி:-

பிறப்புறுப்பில் இயல்பிலேயே சுரக்கக் கூடிய கசிவு இல்லாத போது செக்ஸ் வலி மிக்கதாகவும், பல சமயங் களில் செக்ஸ் உறவே சாத்தியப் படாமலும் போகச் செய்து விடும். மெனோபாஸ் காலத்துக்குப் பிறகுதான் இப்பிரச்சினை அதிகரிக்கிறது. கே.ஒய். ஜெல்லி எனப்படும் வழுவழுப்புத் திரவம் இப்பிரச்சினையை சரியாக்கும். ஹார்மோன் ரிப்ளேஸ்மென்ட் தெரபியும் கை கொடுக்கும். செக்ஸ் உறவின் போது உணர்ச்சிகள் தூண்டப் படாமலிருந்தால், இந்த பிறப்புறுப்பு வறட்சிப் பிரச்சினை எந்த வயதினருக்கும் வரலாம்.


தசைப்பிடிப்பு:-

உறவுக்கு ஒத்துழைக்காமல் பிறப்புறுப்பு மக்கர் செய்கிற இந்தப் பிரச்சினைக்கு வாஜினிஸ்மஸ் எனப் பெயர். உறவைப் பற்றிய பயமே இதற்கான பிரதான காரணம். கற்பழிப்பு, பாலியல் பலாத்காரம் மாதிரியான சம்பவங்களால் இப்பிரச்சினை உருவாகிறது. கவுன்சிலிங்குடன் கூடிய சிகிச்சை இதற்குப் பலனளிக்கும். உறவு கொள்ள முடியும் என்றாலும், பிறப்புறுப்பு செக்ஸை அனுமதிக்காமல் இறுகிக் கொள்ளும். வீட்டிலேயே பின்பற்றக் கூடிய பிரத்யேக சிகிச்சைகளும் இந்தப் பிரச்சினைக்குப் பரிந்துரைக்கப் படுகிறது.


பிரசவத்துக்குப் பிறகான உறவு:-

பிரசவத்துக்குப் பிறகான உடலுறவு பெரும்பாலும் வலிமிக்கதாகவே அமைகிறது. காரணம் பிரசவத்தின் போது பிறப்புறுப்பில் போடப்படுகிற தையல். சிக்கலான பிரசவங்களின் போது ஆயுதங்கள் உபயோகிக்கப் பட்டிருக்கக் கூடும். இதனால் ஏற்பட்ட காயம் ஆற குறைந்த பட்சம் ஆறு வாரங்களாவது ஆகலாம். கூடவே பிறப்புறுப்புத் தொற்றும் இருக்குமானால், இந்தக் காயங்கள் ஆற இன்னும் தாமதமாகும். செக்ஸ் மேலும் துன்பமாக அமையும். பிரசவத்தைத் தொடர்ந்து உடனடியாக செக்ஸ் வைத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டிய பொறுப்பு தம்பதியர் இருவருக்குமே உண்டு. சிசேரியன் செய்து கொண்ட பெண்களுக்கு அதைத் தொடர்ந்த உறவு கூடுதல் வலியைத் தரும். பிரசவத்துக்குப் பிறகு இயல்பான உறவு சாத்தியப்பட காலம் ஒன்றே மருந்து. உடல், மனம் இரண்டும் சகஜ நிலைக்குத் திரும்பிய பிறகே அது சாத்தியம்.


By Dr.ஷர்மிளா

டீன் ஏஜ்...

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் புரியாத புதிரான காலக்கட்டம் அவர்களது டீன் ஏஜ் பருவம். விடை தெரியாத பல கேள்விகள் மனதைக் குடைந்தெடுக்கும் பருவம்.

டீன் ஏஜில் அடியெடுத்து வைத்திருப்போருக்குத் தோன்றக் கூடிய சில பொதுவான கேள்விகளும், அவற்றுக்கான விளக்கங்களும் இங்கே.....

பெண்கள் சுய இன்பம் காண்பது தவறா?

மனத்தளவிலும், உடலளவிலும் தன்னை பிஸியாக வைத்திருக்கும் பெண்களுக்கு இப்படிப்பட்ட எண்ணமே வருவதில்லை. தனிமையில் இருப்போருக்கே இப்பழக்கம் அதிகமிருக்கிறது. பருவ வயதில் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த சுய இன்பம் காண்பதில் தவறில்லை. ஆனால் அது தினசரிப் பழக்கமாகவோ, அது இல்லாமல் எந்த வேலையும் சாத்தியமில்லை என்கிற அளவிலோ இருக்கக் கூடாது. சுய இன்பம் காண்கிற பெண்கள் அதற்கு ஆபத்தான கருவிகளை உபயோகிக்கிறார்கள். அப்படி உபயோகிக்கும் பொருட்கள், பிறப்புறுப்பினுள் போய் சிக்கிக்கொண்டு, உயிருக்கே ஆபத்தாக முடியலாம். ஸ்டைல் என்ற பெயரில் ரொம்பவும் டைட்டான ஜின்ஸ் அணிகிற பெண்களுக்கு சுய இன்பம் காண வேண்டும் என்கிற உணர்வு வருவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. தளர்வான ஆடைகள் இப்பிரச்சினையைத் தவிர்க்கும்.


லெஸ்பியன் என்பவர்கள் யார்?

பெண் ஓரினச் சேர்க்கைப் பிரியர்களுக்கு லெஸ்பியன் என்று பெயர். இவர்களுக்கு ஆணின் மீதான ஈர்ப்பு இன்றி, பெண்ணிடம் ஈர்ப்பு அதிகமிருக்கும். உடலளவிலும் இவர்களது நெருக்கம் அதிகமிருக்கும். பரஸ்பரம் ஒருவரை ஒருவர் தொட்டுக் கொள்வதிலும், உணர்ச்சிகளைத் தூண்டிக் கொள்வதிலும் இன்பம் காண்பார்கள். இவர்கள் விஷயத்தில் முழுமையான செக்ஸ் உறவு இருக்காது. சராசரி செக்ஸ் உறவை வைத்துக் கொண்டு, இம்மாதிரி லெஸ்பியன் உறவில் இருக்கிற பெண்களும் உண்டு. அப்படிப் பட்டவர்களுக்கு எய்ட்ஸ் உள்ளிட்ட பால்வினை நோய்கள் அதிகம் தாக்க வாய்ப்புகள் உண்டு.


டீன் ஏஜ் பெண்களுக்கேற்ற சரியான கருத்தடை முறை எது? கருத்தடை மாத்திரைகள் பாதுகாப்பானவையா?

டீன் ஏஜில் செக்ஸ் என்பதே ஆபத்தானது. அதற்குப் பாதுகாப்பு முறை வேறா?கருத்தடை மாத்திரைகள் என்பவை ஹார்மோன் மாத்திரைகள். கர்ப்பத்தைத் தவிர்க்க நினைக்கிற பெண்கள், இதை மாதவிலக்கான குறிப்பிட்ட நாள் முதல் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். உடலுக்குள் நிகழ்கிற ஹார்மோன் மாற்றம், கர்ப்பம் நிகழாமல் தடுக்கும்.

வாந்தி, தலைசுற்றல், பசியின்மை, திடீர் இரத்தப் போக்கு, எடை அதிகரிப்பு என கருத்தடை மாத்திரைகள் ஏற்படுத்தும் பயங்கர விளைவுகளைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். வருடக் கணக்கில் சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய்கூட வரும் என்கிறார்கள்.

டீன் ஏஜில், திருமணத்துக்கு முன்பு செக்ஸ் உறவைத் தவிர்ப்பதே நல்லது. தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் ஆணுறை உபயோகிப்பது நல்லது. அது பால்வினை நோய்களையும் தவிர்க்கும்.

உயரத்தை அதிகரிக்கச் செய்ய ஹார்மோன் சிகிச்சை உண்டாமே?

லைசின் மாதிரியான அமினோ அமிலங்கள்தான் இளம் வயதில் உயரத்தை அதிகரிக்கச் செய்ய உதவுகின்றன. அதுவும் கூட குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு பலன் தராது. அமினோ அமிலம் கலந்த புரோட்டீன் அதிகமுள்ள உணவுகளை உட்கொண்டால் எடைக் கேற்ற உயரம் கிடைக்கும். ஹார்மோன் சிகிச்சைகள் பல பக்க விளைவுகளைக் கொண்டவை. மிக மிக எச்சரிக்கையாக செய்யப்படாத பட்சத்தில் இத்தகைய சிகிச்சைகள் பேராபத் துக்களை வரவழைக்கும்.


மார்பகங்கள் குறித்து டீன் ஏஜ் பெண்களுக்கு ஏகப்பட்ட சந்தேகங்கள்.... அவை பற்றி...?

டீன் ஏஜைத் தொடுகிற வரை பிரா அணிய வேண்டாம். மார்பக வளர்ச்சி ஆரம்பித்ததும் சரியான அளவுள்ள பிரா அவசியம். குளிக்கும்போது மார்பகங்களை நன்றாக சுத்தப்படுத்த வேண்டும். மார்பகங்களின் அடிப்பகுதியில் வியர்வை தங்கி, தொற்று நோய் வரலாம்.

மார்பகங்களின் நடுவே காம்புகள் இருக்கும். பெண் முழு உடல் வளர்ச்சி அடைகிற போது, இதுவும் முழுமையான வளர்ச்சியைப் பெற்றிருக்கும். சில பெண்களுக்கு மார்பகக் காம்புகள் சற்றே உள்ளடங்கி இருக்கலாம். அது கர்ப்பம் தரிக்கிற சமயத்தில் தானாகச் சரியாகிவிடும்.

மார்பகக் காம்புகளின் நிறமும், அளவும் பெண்ணுக்குப் பெண் வேறுபடலாம். சில பெண்களுக்கு அந்த இடத்தில் ஒன்றிரண்டு ரோமங்கள் தென்படலாம். அதுவும் சகஜமான விஷயமே.

பேஷன் என்ற பெயரில் சில டீன் ஏஜ் பெண்கள் பிரா அணிவதில்லை. மார்பக வளர்ச்சி முழு வீச்சில் இருக்கிற டீன் ஏஜ் பருவத்தில் அவற்றின் வளர்ச்சிக்கேற்ற சப்போர்ட் தருவது பிரா. அதைத் தவிர்ப்பதால் மார்பகங்களின் ஷேப் மாறவும், தொய்வடையவும் வாய்ப்புகள் அதிகம்.


உடலை ஸ்லிம்மாக வைத் திருக்க உடல் இளைக்க வைக்கிற மாத்திரைகள் சாப்பிடலாமா?

உடலை இளைக்க வைக்கிற மாத்திரைகள் மூளையின் ஹைப்போதலாமஸ் உடன் தொடர்பு கொண்டு, பசியின்மையை உண்டு பண்ணக்கூடியவை. இதன் விளைவாக, தூக்கமின்மை, மனச்சோர்வு, இரத்த அழுத்தம் போன்றவை ஏற்படலாம். சிலவகை உடல் இளைக்கச் செய்கிற மருந்துகள், நாளடைவில் அவற்றுக்கு அடிமையாகிற உணர்வை ஏற்படுத்துமாம். இளம் தலைமுறைக்குப் பொறுமை ரொம்பக் குறைவு. உடல் இளைக்க வேண்டுமென நினைத்தால் அதற்கு முக்கியத் தேவை பொறுமை. உணவுக் கட்டுப்பாடு, சரியான சம விகித உணவை உட்கொள்வது, உடற்பயிற்சி போன்றவை மட்டுமே அழகான உடலுக்குத் தீர்வு.

By Dr.ஷர்மிளா

பிள்ளைகளிடம் அதை பேசுங்கள்....

குழந்தைக்கு ஓரளவு விவரம் தெரிய ஆரம்பிக்கிற போதே, அதன் உடல் பாகங்களைப் பற்றியும், அவற்றின் வேலைகளைப் பற்றியும் அந்த வயதுக்குத் தேவையான அளவுக்குக் கற்றுக் கொடுங்கள்.


குளிக்கும் போது அந்தரங்க உறுப்புகளை சுத்தப் படுத்தக் கற்றுக் கொடுங்கள். அந்த இடங்களைத் தொடுவதோ, பார்ப்பதோ அசிங்கம் என்ற மனப்பான்மையை விதைக்காதீர்கள்.

குழந்தை தன் அந்தரங்க உறுப்புகளைத் தொட்டு விளையாடுகிற போது அதைக் கிண்டல் செய்யவோ, திட்டவோ வேண்டாம். அது அதில் ஏதோ விஷயம் இருக்கிறது என்ற எண்ணத்தைக் குழந்தைக்கு உண்டாக்கும்.

குழந்தைக்கு எடுத்த எடுப்பிலேயே கருத்தரித்தல், பிள்ளை பிறப்பு போன்றவற்றைக் கற்றுக் கொடுக்க முடியாது. கதைப் புத்தகங்கள், பூக்கள், விலங்குகள் படங்கள் போட்ட கலர் புத்தகங்களை வைத்துக் கொண்டு, விதையிலிருந்து பூ எப்படி உருவாகிறது என்றும், இது அம்மா கரடி, இது அப்பா கரடி, இது அவங்களோட குட்டி என்றும், குழந்தைக்குப் பாலூட்டும் அம்மாவைக் காட்டியும் மேற்சொன்ன விஷயங்களைப் புரிய வைக்கலாம்.


என் பொண்ணோட டிரெஸ் எனக்கும் சரியா இருக்கும். ரெண்டு பேரும் மாத்தி மாத்திப் போட்டுப்போம். நாங்க அம்மா- பொண்ணு கிடையாது. ப்ரெண்ட்ஸ் மாதிரி என்று சொல்லிக் கொள்வதில் பெருமை இல்லை. செக்ஸ் சம்பந்தப்பட்ட சந்தேகங்களை அம்மாவாகிய உங்களைத் தவிர வேறு யாராலும் குழந்தைக்கு மிகச் சரியாக விளக்க முடியாது. நீங்கள் மறுக்கிற பட்சத்தில், அது அதற்கான விளக்கத்தை வேறு தவறான நபர்களிடமிருந்து பெறக் கூடும்.

ஸ்பரிசத்தில் உள்ள வித்தியாசத்தைப் பெண் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள். நல்ல எண்ணத்துடன் தொடுவதற்கும், கெட்ட எண்ணத்துடன் தொடுவதற்கும் உள்ள வித்தியாசத்தை அது உணர வேண்டும். கெட்ட ஸ்பரிசத்தை உடனடியாக எதிர்க்கவும் கற்றுக் கொடுங்கள்.

சின்னத்திரையின் ஆக்கிரமிப்பு இன்று ரொம்பவே அதிகம். சானிட்டரி நாப்கின், ஆணுறை, கருத்தடை மாத்திரைகள் என எல்லாவற்றுக்கும் விளம்பரங்கள் வருகிற போது அது என்ன என்று தெரிந்து கொள்கிற ஆர்வம் குழந்தைக்கு வரலாம். உங்கள் குழந்தையின் வயதைப் பொறுத்து, அந்தப் பொருட்கள் பற்றிய அடிப்படை விவரங்களை நாசுக்காக நீங்கள் விளக்கலாம்.

இந்தக் காலத்துப் பெண் குழந்தைகள் எட்டு, ஒன்பது வயதிலேயே பூப்பெய்துகிறார்கள். எனவே அவர்களுக்கு முன்கூட்டியே மாதவிலக்கு என்றால் என்ன, அது வந்ததும் என்ன செய்ய வேண்டும், அது பயப்படுகிற விஷயமல்ல என்பதையெல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

பருவ வயதை எட்டும் போது ஏற்படுகிற இனக் கவர்ச்சி பற்றியும், அது இயல்பான ஒன்றே என்றும் சொல்லிக் கொடுங்கள். அதை ஒரு சீரியஸான விஷயமாக நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை என்பதை விளக்குங்கள்.
பருவ வயதை எட்டியதும் உங்கள் மகளுக்கு ஆண்-பெண் உறவு பற்றி விளக்கலாம். அதில் அசிங்கப்படவோ, தயங்கவோ வேண்டியதில்லை. ஆபத்தான சூழ்நிலைகளிலிருந்து அவள் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அந்த அறிவுரை அவளுக்கு முக்கியம்.

திருமணத்துக்கு முன்பான செக்ஸ் ஏன் தவறானது என்றும், அது எந்தளவுக்குப் பெண்களை பாதிக்கும் என்றும், அதன் பின் விளைவுகள் என்னவென்றும் உங்கள் மகளுக்கு எச்சரிக்க வேண்டும். அதைத் தவிர்த்து ஏன் கூடாது என்பதற்கான விளக்கம் சொல்லி விட்டால் அதுவே அவர்களுக்கு விழிப் புணர்வைத் தரும்.


By Dr.ஷர்மிளா

வயசுக்கு வந்தாச்சா.... ?

உடல் மாற்றங்கள்:-


பெண் வயதுக்கு வருகிற வயது தலைமுறைக்குத் தலை முறை மாறிக் கொண்டே வருகிறது. 13 முதல் 16 வயது பூப்பெய்தும் காலம் என்றாலும், பரம்பரைத் தன்மை, உணவுப் பழக்கம் போன்ற விஷயங்களைப் பொறுத்து அந்த வயது கூடவோ, குறையவோ செய்யலாம். ரொம்பவும் வெப்பமான சூழலில் வாழும் பெண்கள் தாமதமாகவே பூப்பெய்துகிறார்கள் என்று தெரிகிறது.

பெண்ணின் 13-வது வயதில் சினைப் பையில் சினைமுட்டைகள் வளரத் தோன்றும். இது ஆணின் உயிரணுவுடன் சேர்ந்து கரு முட்டையானால், கரு தங்கி வளர்வதற்கு ஏற்ற வகையில் தயாராக இருக்கும். அப்படி இணையாமல் போகிற போது கருப்பையினுள் கருத்தரிப்பிற்காக செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் கலையத் தொடங்கும். அப்படிக் கலைகிற போது ரத்த நாளங்களில் இருந்து இரத்தம் கசியும். இத்துடன் சேர்ந்து கருப்பையின் உள்வரிச் சவ்வுப் பகுதியும், சிதைந்த சினை முட்டையும், கருப்பையின் முகப்பின் வழியே வடிந்து, பெண்ணின் பிறப்புறுப்பின் வழியே வெளியேறும். இதையே மாதவிலக்கு என்கிறோம்.

மாதவிலக்கு சுழற்சியானது நான்கு வாரங்களுக்கு ஒரு முறையோ, 28, 29 நாட்களுக் கொரு முறையோ, மாதம் ஒரு முறையோ வரும். ஒரு பெண்ணின் வாழ் நாளில் சுமார் 400 முறைகள் மாத விடாய் வரும். மாத விலக்கின் போது வெளியேறும் இரத்தத்தின் அளவும், மாதவிடாய் நீடிக்கும் நாட்களின் எண்ணிக்கையும் பெண்ணுக்குப் பெண் வேறுபடும்.

பூப்பெய்தும் காலத்து முதல் அறிகுறியாக பெண்ணின் உடலில் சில பகுதிகள் உருண்டு, திரண்டு காணப்படும். மார்பகங்கள், இடுப்பு மற்றும் தொடைகள் லேசாகப் பருக்கும். அக்குள், பிறப்புறுப்பு பகுதிகளில் ரோம வளர்ச்சி தெரிய ஆரம்பிக்கும். மேலுதடு, மார்பகங்களைச் சுற்றி, வயிற்றில் கூட சில பெண்களுக்கு மெல்லிய ரோம வளர்ச்சி தெரியும்.

ஆண்ட்ரோஜென் என்கிற ஹார்மோன், சீபம் சுரக்கும் சுரப்பியையும், வியர்வை சுரப்பியையும் தூண்டுவதன் விளைவால் பூப்பெய்தும் பருவத்துப் பெண்களின் முகத்தில் வலியுடன் கூடிய பருக்கள் தோன்றலாம். அதைக் கிள்ளாமல், அழுத்தாமல் அப்படியே விடுவதே பாதுகாப்பானது. இல்லா விட்டால் அவை முகத்தில் நிரந்தரக் கரும்புள்ளிகளையும், தழும்புகளையும் ஏற்படுத்தி விடும்.
இந்தப் பருவத்தில் பெண்கள் சிலருக்கு அக்குள் மற்றும் தொடை இடுக்குகளிலிருந்து ஒரு வித நாற்றம் வரலாம். அந்தரங்க உறுப்புகள் உட்பட உடல் முழுவதையும் சுத்தமாக வைத்துக் கொள்வது ஒன்றே இதற்கான தீர்வு.

மனமாற்றங்கள்:-

செக்ஸ் தொடர்பான சந்தேகங்கள், குழப்பங்கள் உருவாகும். அவற்றுக்கு விடை தேடும் ஆர்வம் அதிகரிக்கும்.

எல்லோரும் தன்னையே கவனிக்கிற உணர்வு ஏற்படும்.

தன் உடலில் ஏற்படுகிற மாற்றங்களையும், ஆண்களைப் பற்றி எழும் சந்தேகங்களையும் யாரிடமாவது பகிர்ந்து கொள்ளத் தோன்றும்.

பூப்பெய்துதல் என்பது பெண்களுக்கு இயற்கையாக ஏற்படக் கூடிய ஒரு நிகழ்வு. ஆனால் சில பெண்கள் அதை செக்ஸ் உறவில் ஈடுபடுவதற்கான அங்கீகாரமாக நினைத்து வழிதவறிப் போவதுண்டு. வயதுக்கு வந்தது முதல் திருமணம் வரைத் தன்னைக் கட்டுப் பாடாக வைத்திருக்க வேண்டியது அவளது கடமை.



பெற்றோருக்கு...

உங்கள் மகள் இந்த வயதில்தான் பூப்பெய்துவாள் என்று நிச்சயமாக சொல்வதற்கில்லை. அவளது உடல், மன உணர்வுகளைப் பொறுத்து ஒன்பது, பத்து வயதில்கூட பூப்பெய்தலாம். எனவே அதற்கு முன்பே அவளுக்கு மாதவிலக்கு என்றால் என்ன என்பதைப் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்குங்கள்.

பள்ளியிலோ, வீட்டிலோ நீங்கள் இல்லாத சமயத்தில் உங்கள் மகள் பூப்பெய்தினால், இரத்தப் போக்கைக் கண்டு பயப்படாமலிருக்கவும், அதற்கு என்ன செய்யவேண்டும் என்றும் சொல்லிக் கொடுங்கள். நாப்கின் உபயோகிக்கக் கற்றுக்கொடுங்கள்.

மாத விடாய் பற்றி அவளாகக் கேட்கும் கேள்விகளுக்கு மழுப்பாமல் உண்மையான பதில்களைச் சொல்லுங்கள். இதில் தயக்கத்துக்கோ, கூச்சத்துக்கோ அவசியமே இல்லை.

ஆண்களின் தவறான ஸ்பரிசத்தை உணரவும், அதற்கு இடம் கொடுக்காத தைரியத்தையும் கற்றுக் கொடுங்கள்.

By Dr.ஷர்மிளா

சிறிய மார்பகமா..?

தாய்மைக்கு உதவும் பெண்ணின் மார்பகங்கள், ஆண்களின் பார்வையில் காம உறுப்பு. ஆண்களுக்கு ஆண் குறியின் அளவைப் பற்றிய வேதனை இருப்பதை மாதிரியே, பெரும்பாலான பெண்களுக்குத் தமது மார்பகங்கள் பற்றிய கவலை இருக்கிறது.

சிறிய மார்பகங்களால் விவாகரத்து வரை போன திருமண உறவுகளும் உண்டு. உண்மையில் உடல் உறவில் இன்பம் அடைய, பெண்ணின் மார்பகங்களுக்கும், ஆணுறுப்பின் நீளத்துக்கும் நேரடியான தொடர்பே இல்லை.

பல ஆராய்ச்சிகளில் பெண்ணின் மார்புகள் சிறியதாக இருந்தால் அவை மிகவும் உணர்ச்சியுடையவை, அதிகக் கிளர்ச்சியைக் கொடுக்கக் கூடியவை என நிரூபிக்கப் பட்டுள்ளன. மற்ற விலங்குகள் எவ்வாறு பால் கொடுக்கும் மார்பகங்கள் பற்றிக் கவலைப்படுவதில்லையோ, அதே போல் பழங்கால மனிதர்களும் அதைப் பற்றிக் கவலைப்பட்டதில்லை. இன்றும்கூட பழங்குடியினர் மார்புகளை ஒரு செக்ஸ் உறுப்பாகக் கருதுவதில்லை.

சிறிய மார்பகங்களில் நரம்புகளின் அடர்த்தி அதிகமாக இருக்கும் என்பதால் உறவின் போதான கிளர்ச்சி அதிகமாக இருக்கும். பெரிய மார்பகங்களில் நரம்புகளின் அடர்த்தி குறைவாக இருக்கும்.

பெண் கர்ப்பமடைகிற போது மார்பகங்கள் பெரியதாக மாறும். இதனாலேயே பல விளம்பர மாடல்கள் கர்ப்பமாகி, மார்புகளைப் பெரிதாக்கிக் கொள்கிறார்கள். ஆண்களைப் பொறுத்தவரை பெரிய அளவிலான மார்பகங்களைத்தான் கவர்ச்சியானதாக நினைக்கிறார்கள். மேலும் இன்றைய பத்திரிகைகள், இணையம், தொலைக்காட்சி மூலமாக இக்கருத்து மக்களிடையே ஆழமாகப் பதிந்து விட்டது.

கர்ப்பம் தரிக்கும் போதும், தாய்ப்பால் கொடுக்கும் போதும் பெருத்துப் போகும் மார்பகங்கள், அதன் பிறகு மீண்டும் அதன் பழைய அளவுக்கே திரும்பும். இதைச் சரியாகப் புரிந்து கொள்ளாத பெண்கள், தனது மார்பகங்கள் பிரசவத்துக்குப் பிறகும், தாய்ப்பாலை நிறுத்திய பிறகும் சிறுத்து விட்டதாக நினைத்துப் புலம்புவார்கள். உண்மையில் அவை அளவில் சுருங்குவதில்லை. பால் சுரப்பின் காரணமாக பெருத்திருந்தவை, அதை நிறுத்திய பிறகு சகஜ நிலைக்கு வருகின்றன. அவ்வளவு தான்.

மார்பகங்களை மூன்று முறைகளில் பெரிதாக்கிக் கொள்ளலாம்.
  • வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட எர்டிக்ட் என்ற மாத்திரையைக் குறிப்பிட்ட மாதங்கள் வரை உட்கொண்டால் அளவு பெரிதாகும்.
  • மார்பின் அடியில் உள்ள தசைகளைத் தூண்டி, வலுப்படுத்தும் பயிற்சிகள் உள்ளன. மருத்துவரின் ஆலோசனை மற்றும் சில கருவிகளின் உதவியோடு இதைச் செய்யலாம்.
  • அறுவை சிகிச்சை செய்து சிலிக்கன் பைகளை உள்ளே நுழைக்கலாம். முதலிரண்டு முறைகளையும் சேர்த்துச் செய்தால் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.

By Dr.ஷர்மிளா

கர்ப்ப காலத்தில் உறவு கொள்ளலாமா..?

கர்ப்ப காலத்தில் உறவு கொள்ளலாமா என்பதில் பல தம்பதியருக்கும் சந்தேகம்.

கர்ப்ப காலத்தில் உறவு கொண்டால் பிறக்கும் குழந்தைக்கு ஆபத்து வரும் என்ற அச்சமே இதற்குக் காரணம். கர்ப்ப காலத்தில் உறவு கொள்ள விரும்புவோர் கீழ்க் கண்ட விஷயங்களை நினைவில் கொள்வது நலம்.
மனைவி ஆரோக்கியமான உடல் நிலையில், கருப்பை தொடர்பான கோளாறுகள் ஏதுமின்றி, உறவு கொள்வதில் விருப்பமும் உள்ளவளாக இருந்தால், கடைசி மாதம் வரைகூட உறவு கொள்ளலாம்.

எட்டு மாதங்கள் வரை தாராளமாக உறவு கொள்ளும் தம்பதியர் அதற்குப் பிறகு அதை நிறுத்திவிட்டால் நல்லது. தவிர்க்க முடியாத பட்சத்தில் ஒன்பதாவது மாதத்துக்குப் பிறகாவது அதைத் தவிர்ப்பது நல்லது.
கர்ப்ப காலம் முழுவதும் உறவே இல்லாமல் இருந்தாலும் நல்லதுதான்.

பெரும்பாலும் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் மன உளைச்சல் மிக அதிகமாக இருக்கும். அந்நாட்களில் பெரும்பாலும் அவர்களுக்கு உறவில் வேட்கை இருக்காது. அப்படிப்பட்ட நிலையில் அவளைக் கட்டாயப் படுத்தி கணவன் உறவுக்கு சம்மதிக்க வைக்கக் கூடாது. அதனால் அந்தப் பெண் உடலளவில் மட்டுமின்றி, மனத்தளவிலும் பெரிதும் பாதிக்கப்படுவாள். குழந்தையின் மன வளர்ச்சியிலும் பாதிப்பு இருக்கலாம்.

கர்ப்ப காலத்தில் உறவு கொள்ளலாமா என்பதை மாதிரியே பிரசவ காலத்துக்குப் பிறகு எத்தனை நாட்கள் கழித்து உறவு கொள்வது என்பதிலும் பலருக்கும் சந்தேகம்.

குழந்தை பிறந்த ஒரு சில நாட்களிலேயே உறவு கொள்வதை எந்த தம்பதியரும் அனுமதிக்கக் கூடாது.

பிரசவம் எப்படி அமைந்தது என்பது முதலில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். இயல்பான பிரசவம் என்றால் மனைவியின் உடல் சீக்கிரமே சகஜ நிலையை அடையும். பிரசவத்துக்குப் பிறகு ஒரு மாதம் கழித்து உறவில் படலாம்.

சிக்கலான பிரசவமாகவோ, சிசேரியனாகவோ இருந்தால் மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே அவர் குறிப்பிடும் நாட்களுக்குப் பிறகே தாம்பத்திய உறவு கொள்ள வேண்டும்.

குழந்தைப் பிறப்பால் பெண்ணின் உறுப்பில் காயங்கள் இருக்கும். அது ஆறி விட்டதா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்வதோடு, கணவனுக்கு தொற்று நோய் ஏதும் இருக்கக் கூடாது.

கர்ப்ப காலத்திலும், அதற்குப் பிறகும் உடல் உறவு கொள்ளும் போது சுத்தம் என்பது மிக முக்கியம். ஒவ்வொரு முறை உறவுக்குப் பிறகும் பெண்ணுறுப்பை முறையாக சுத்தம் செய்ய வேண்டியது முக்கியம்.

கருச்சிதைவுக்குள்ளானவர்களும், குறை மாதப் பிரசவத்துக்கு ஆளானவர்களும் உறவுக்கு முன்பு மருத்துவர் ஆலோசனையைப் பெற வேண்டியது முக்கியம்.

By Dr.ஷர்மிளா

படுக்கை அறை.....

அதில் ஆர்வமில்லையா?


கணவன் மேல் உயிரையே வைத்திருப்பாள். ஆனாலும் செக்ஸ் என்றாலே வாந்தி வரும் அளவுக்கு அதை வெறுப்பாள். இந்த உணர்வுடன் நாளுக்கு நாள் ஊதும் உடல், முறையற்ற மாதவிடாய், தூக்கமின்மை, சோம்பேறித் தனம், எதிலும் விட்டேத்தியான மனோபாவம் ஆகியவையும் உங்களிடம் இருக்கா? உங்களை பாதித்திருப்பது சாட்சாத் தைராய்ட் பிரச்சினையே தான்.

தீர்வு :- உடனடியாக மருத்துவரை சந்தித்து தைராய்டு சோதனை மேற்கொள்ளுங்கள். மன உளைச்சல் இருந்தால், அதற்கும் சிகிச்சை அவசியம். சரியாக சாப்பிடுவது, இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, மிதமான உடற்பயிற்சி போன்றவையெல்லாம் உங்கள் மூடை மாற்றும். பிறகென்ன.... நேத்து ராத்திரியம்மா.... தான் தினம் தினம்.


கனவாய் தொடரும் உச்சக் கட்டம்.....

பத்திரிகைகளில் படித்தது, மற்றவர்கள் சொல்லக் கேட்டதோடு சரி, மற்றபடி உச்சக் கட்டம் என்பது இன்னும் உங்களுக்கு எட்டாமலேயே இருக்கிறதா?

தீர்வு:- சர்க்கரை நோய் இருக்கலாம் உங்களுக்கு. உடனே சோதித்துப்பாருங்கள். சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு இடுப்பெலும்பு மற்றும் ஜனன உறுப்புகளுக்குச் செல்கிற இரத்த ஓட்டம் குறைவாக இருக்குமாம். அதனாலேயே அவர்களுக்கு உறவு விரக்தியில் முடிகிறதாம். சர்க்கரையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது ஒன்றுதான். முழுதானிய உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்வது இன்சுலின் சுரப்பை முறைப்படுத்தி, உறவின் போதான உச்சக் கட்டத்துக்கு உதவியும் செய்யுமாம்.



உறுப்பின் வறட்சி....

இந்தப் பிரச்சினை எந்த வயதினருக்கும் வரலாம் என்றாலும் மெனோபாஸ் ஸ்டேஜில் இருக்கிற பெண்களுக்கு மிக சகஜம். காரணம் ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைவது. இதுவரை மெனோ பாஸுக்கான அறிகுறியே பிறப்புறுப்பு வறட்சி என்று சொல்லப் பட்டது. இப்போது, உயர் இரத்த அழுத்தத்தாலும் ஏற்படலாம் என்று நிரூபிக்கப் பட்டுள்ளது.

தீர்வு:- வாசனையான சோப், பிறப்புறுப்பை சுத்தம் செய்கிற வாசனைத் திரவியங்கள், டைட்டான உள்ளாடை மற்றும் ஜீன்ஸ் பேண்ட் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். மருத்துவரின் ஆலோசனையின் பேரில் கிரிம், வழுவழுப்புத் திரவம் போன்றவற்றையும் உபயோகிக்கலாம். மெனோபாஸ் வயதில் இருந்தால் ஹார்மோன் ரிப்ளேஸ்மென்ட் தெரபி எடுத்துக் கொள்வதைப் பற்றி மருத்துவரிடம் பேசலாம்.



உறவுக்குப் பின் உதிரப் போக்கு....

உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய பிரச்சினை இது. சில சமயங்களில் இது புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறியாகவும் இருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். இளம் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் கர்ப்பத் தடை மாத்திரைகள் உட்கொள்கிறவர்களிடம் இது அதிகம் காணப்படுகிறதாம். வேறு அறிகுறிகள் இல்லாததாலும், அனேகமாகப் பெண்களால் புறக்கணிக்கப் படுவதாலும், இந்தப் பிரச்சினை, பிற்காலத்தில் மலட்டுத் தன்மைக்கும் வழி வகுக்கலாம். ரொம்பவும் இளம் வயதுப் பெண்களிடம் காணப்படுகிற பட்சத்தில் அது ப்ரி மெனோபாஸுக்கான அறிகுறியாகவும் இருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

தீர்வு:- புற்றுநோய்க்கான சோதனை செய்து பார்ப்பது பாதுகாப்பானது. தொற்றுக் கிருமிகளின் தாக்குதலாக இருக்கும் என்கிற பட்சத்தில் ஆண்டிபயாடிக் உதவியால் சரி செய்யலாம்.



வலி தரும் உறவு.....

சந்தோஷத்தைத் தர வேண்டிய செக்ஸ் வலியையும், வேதனையையும் தருகிறதா?

பெரும்பாலும் இது மனம் சம்பந்தப்பட்ட பிரச்சினையே. அப்படியில்லை என உறுதியானால் மட்டுமே பிற சோதனைகள் அவசியம். பிறப் புறுப்பின் லைனிங் பகுதி மிக மிக மென்மையானது. அது மிகச் சுலபமாக பாக்டீரியா மற்றும் பால்வினை நோய்த் தொற்றுக்களால் பாதிக்கப் படக்கூடும். அதன் விளைவாக உறவின்போது எரிச்சல், வலி, கசிவு போன்றவை இருக்கலாம். என்டோமெட்ரியாசிஸ் என்கிற நோயின் விளைவாகவும் உறவின் போதான வலி இருக்கலாம். மிக அபூர்வமாக சிலருக்கு சினைப்பை கட்டியின் காரணமாகவும் இந்த வலி இருக்கலாம். வயிற்று வலி, கொஞ்சம் சாப்பிட்டதுமே வயிறு நிறைந்து விட்ட உணர்வு, மலச்சிக்கல் மாதிரியான நினைத்துப் பார்க்க முடியாத காரணங்களாலும் இந்த வலி இருக்கலாம் என்கிறார்கள்.

தீர்வு:- பெரும்பாலும் ஆண்டிபயாடிக் மருந்துகளே இதற்கு குணம் தரும். வேறு கோளாறுகள் இருக்குமென சந்தேகப் பட்டால் லேப்ராஸ் கோப்பி மூலம் சோதனை செய்வார்கள். பிறப்புறுப்புத் தொற்று என்றால் அதற்கான கிரிம் மூலமே சரிசெய்து விடலாம்.

by Dr.ஷர்மிளா

நாப்கின் வாங்கப் போறீங்களா..?

பெண்களை தர்ம சங்கடத்துக்குள்ளாக்குபவை அந்த மூன்று நாட்கள்.

எப்பேர்ப்பட்ட தைரியப் பெண்களையும் சற்றே தடுமாற வைக்கிற நாட்கள் அவை. உதிரப் போக்கு அதிகமாகுமோ, அதனால் உடைகள் கறை படியுமோ என்கிற பயமே காரணம். மாதவிலக்கின் போது சானிட்டரி நாப்கின்கள் உபயோகிக்க வேண்டிய அவசியம் படித்த பெண்களுக்கே அதிகம் தெரிவதில்லை. துணிக் கலாச்சாரத்தை விட்டு வெளியே வர விரும்பாதவர்கள் இன்னும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். உபயோகிக்கிற சிலருக்கும் தனக்கேற்ற சரியான நாப்கின் எது, அதை எப்படி உபயோகிப்பது, எப்படி அப்புறப் படுத்துவது என்கிற விவரங்கள் தெரிவதில்லை. சானிட்டாரி நாப்கின்களைப் பற்றிய விழிப்புணர்வை விளக்கவே இந்தக் கட்டுரை.....

நல்ல நாப்கின் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு பி.ஐ.எஸ்ஸின் பரிந்துரை
  • 15.2 மி.மீ. அடர்த்தி இருக்க வேண்டும்.
  • நாப்கினின் நீளம் 200 - 20 மி.மீ (ரெகுலர்),
  • 240 - 20 மி.மீ (லார்ஜ்),
  • 280 - 20 மி.மீ (எக்ஸ்ட்ரா லார்ஜ்) இருக்க வேண்டும்.
  • அகலம் 60 முதல் 75 மி.மீ. இருக்க வேண்டும்.
  • 30 மி.லி. திரவத்தை உறிஞ்சும் சக்தி கொண்டதாக இருக்க வேண்டும்.
  • முழுவதும் உறிஞ்சிக் கொண்ட பிறகு நாப்கினின் அடியிலோ, பக்க வாட்டிலோ கசிவு ஏதும் இருக்கக் கூடாது.

நாப்கின்களால் பாதிப்பு ஏதும் உண்டா?

அதிக உறிஞ்சும் தன்மை வேண்டும் என்பதற்காக, இப்போது ஜெல் கலந்த சானிட்டரி நாப்கின்கள் அதிகம் வரவேற்கப்படுகின்றன. சிந்தெடிக் இழைகளால் செய்யப்பட்ட நாப்கின்களுக்கே பெண்கள் மத்தியில் வரவேற்பு அதிகமிருக்கிறது. சிந்தெடிக் நாப்கின்கள் அதிக உறிஞ்சும் தன்மை கொண்டதாக இருந்தாலும், அவை சருமத்தை பாதிக்கக் கூடியவை என்பது சரும மருத்துவர்களின் அபிப்ராயம்.

நாப்கின்கள் குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒரு முறை மாற்றப்பட வேண்டும். ஈரமாகி, முழுவதும் நனைந்த பிறகும் அது மாற்றப் படாமல் நீண்ட நேரத்துக்கு இருந்தால், தொற்றுக் கிருமிகளின் தாக்குதலுக்குள்ளாக நேரிடும். ரொம்பவும் சென்சிட்டிவான சருமம் கொண்டவர்களுக்கு காட்டன் நாப்கின்களே சிறந்தவை என்கிறார்கள் சரும மருத்துவர்கள். மாதவிலக்கின் முதல் இரண்டு, மூன்று நாட்ளுக்கு அதிக இரத்தப் போக்கு இருந்தால், ஜெல் கலந்த சிந்தெடிக் நாப்கின்களையும், குறைவாக உள்ள நாட்களில் காட்டன் நாப்கின் களையும் உபயோகிக்கச் சொல்கிறார்கள் மகப்பேறு மருத்துவர்கள்.

சானிட்டரி நாப்கின்களின் விலை அதிகம் என்பதால் எல்லா பெண்களாலும் அதை உபயோகிக்க முடிவதில்லை. அவர்கள் துணி உபயோகிப்பதில் தவறில்லை. ஆனால் ஒவ்வொரு முறை உபயோகத்துக்குப் பிறகும் அந்தத் துணி நன்றாக அலசி, டெட்டால் கலந்த தண்ணீரால் அலசப்பட்டிருக்க வேண்டியது முக்கியம்.

எது தரமான நாப்கின்?
  • நல்ல உறிஞ்சும் தன்மை இருக்க வேண்டும்.
  • கசிவு இருக்கக் கூடாது.
  • பக்கவாட்டில் விங்ஸ் இருக்க வேண்டும்.
  • மென்மையாக இருக்க வேண்டும். அணிய வசதியாக இருக்க வேண்டும்.
  • எத்தனை மணி நேரத்துக்கொரு முறை மாற்றவேண்டும் என்கிற விவரமும், அதற்கான அறிகுறிகளையும் குறிப்பிட வேண்டும்.

எப்படி அப்புறப்படுத்துவது?

சானிட்டரி நாப்கின்களை எப்போதும் கழிவறைக்குள் பிளஷ் செய்யக் கூடாது. கழிவறை அடைத்துக் கொள்ளும்.

உபயோகித்த நாப்கின்களை நன்றாக அலசிச் சுற்றி, அப்புறப்படுத்த வேண்டும். அப்புறப்படுத்தும் நாப்கின்களை நாய், மாடு போன்றவற்றால் குதறப்படாமலிருக்கும்படி ஜாக்கிரதையாக அப்புறப்படுத்த வேண்டும். ஏனெனில் அப்புறப்படுத்தப்படும் அந்த நாப்கின்களால் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய அளவுக்குத் தொற்று நோய்கள் பரவும் வாய்ப்புகள் அதிகமாம்.

மருத்துவரை எப்போது பார்க்க வேண்டும்?

கீழ்க்கண்ட அறிகுறிகள் உங்களிடம் காணப்பட்டால் உங்களுக்கு மருத்துவப் பரிசோதனை முக்கியம்.
  • இரத்தப் போக்கு அளவுக்கதிமாக இருந்தாலோ,
  • அது உங்கள் சராசரி வாழ்க்கையை பாதித்தாலோ.
  • கட்டிக் கட்டியாக இரத்தம் வெளியேறினால்.
  • மாதவிடாய் நாட்களில் மயக்கமாக உணர்ந்தால்.
  • அடுத்த மாதவிலக்கு சுழற்சிக்கு முன்பாகவே திடீரென உதிரப் போக்கு தென்பட்டால்.
  • நீண்ட நாட்களுக்கு உதிரப் போக்கு தொடர்ந்தால்.

by Dr.ஷர்மிளா

பருவே போ....போ....

பரு என்றால் முகத்தில்தான் வரும் என பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள். முகத்தில் மட்டுமின்றி கழுத்து, முதுகு, மார்புகள் ஆகிய இடங்களிலும் இது வரும். பருக்களிலிருந்து சீழ் வடிவதுண்டு. வடுக்கள் தோன்றுவதும் உண்டு. பருக்கள் ஏன் வருகின்றன? அதன் அடிப்படைக் காரணங்கள் என்ன என தெரிந்துகொள்ளுங்களேன்.

நமது முகப்பகுதி சருமம் மூன்று முக்கிய அடுக்குகளால் ஆனது. மேலடுக்கின் கீழ்ப்பகுதியில் செபேஷியஸ் கிளாண்ட் என்ற எண்ணெய்ச் சுரப்பிகள் உள்ளன. இந்த எண்ணெய்ச் சுரப்பி களிலிருந்து சுரக்கும் சீபம், முகத்தை வறண்டு போகாமல் பாது காப்பாக வைத்துக் கொள்ளும். ஆனால் சில காரணங்களால் அதிகமாக சுரக்கும் போது பருக்கள் வந்துவிடுகின்றன. உதாரணமாக, எண்ணெய்ப் பசையுள்ள சரும அமைப்பு உள்ளவர்களுக்கும், எண்ணெய்ப் பசை மற்றும் வறண்ட சரும அமைப்பு கலந்த அமைப்பு உள்ள வர்களுக்கும் முகத்தில் பருக்கள் அதிகளவில் வரும். எண்ணெய் சுரந்து சருமத்தின் மேற் புறத்திற்கு வரும்போது சருமத்துவாரங்கள் அழுக்கு மற்றும் புறக்காரணிகளால் அடைபட்டுப் போனால், மேலே கசிய முடியாமல் உள்ளேயே தங்க ஆரம்பித்து விடும். இதனோடு பாக்டீரியாக்கள், இறந்த செல்கள் ஆகியவை சேர்ந்து அழற்சியை உண்டாக்கி சீழ்பிடிக்கச் செய்து பருவாக திரளும். எண்ணெய்ப் பசையின் மீது அழுக்கு படியும் போது அது உலர்ந்து கரும்புள்ளியாக மாறிவிடுகிறது. எண்ணெய்ப் பசை அதிகரிப்பு பரம்பரையினாலும், ஹார்மோன் மாற்றங்களாலும் வருகிறது. பெற்றோர் இருவருக்குமே இப்பிரச்சினை இருந்தால் பிள்ளைகளுக்கு வரும். இளம் பெண்களுக்கு பதினோறு வயதிலும், பையன்களுக்கு பதிமூன்று வயது வாக்கிலும் ஆன்ட் ரோஜென் என்ற ஹார்மோனால் தூண்டப்பட்டு பருக்கள் வருகின்றன. பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கு பத்து மடங்கு அதிகமாக பருக்கள் வருகின்றன. கோரின் பாக்டீரியம் அக்னீஸ் என்ற பாக்டீரியாக்கள் தங்கள் பங்குக்கு தோலில் உள்ள கொழுப்பை சிதைத்து அழற்சி உண்டாக்கும் ரசாயனங்களாக மாற்றிவிடுகின்றன. இவையும் பருக்களாக மாறி வெளிவரும்.

வலிப்பு, டி.பி. நோய்க்காக சாப்பிடும் சில மாத்திரைகள், அலர்ஜpயை உணடாக்கும் மேக்அப் சாதனங்கள், வாய் வழி சாப்பிடும் மருந்துகள் ஆகியவை முகப்பருக்களை உண்டாக்குகின்றன. கொழுப்புப்பொருட்கள், சாக்லேட், குளிர் பானங்கள் ஆகியவையும் பருக்களை உண்டாக்குகின்றன. பருக்கள் இருந்தால் கண்டிப்பாக பொடுகுத் தொல்லை வரும். தடுப்பு முகத்தை தினமும் நான்கு முறையாவது கழுவ வேண்டும். மசாஜ் செய்வது போல கையை உருட்டித் தேய்க்க வேண்டுமே தவிர, நகத்தால் கிள்ளி தேய்க்கக் கூடாது. இவ்வாறு தேய்த்தால் எண்ணெய்ச் சுரப்பி தூண்டப்பட்டு பருத் தொல்லை அதிகமாகும். பருக்களை தூண்டும் உணவுப் பொருட்கள் மற்றும் அழகு சாதனங்களை தவிர்க்க வேண்டும். பருக்களைக் கிள்ளக்கூடாது. இதனால் பருத்தொல்லை அதிகாpக்குமே தவிர குறையாது.

By Dr.ஷர்மிளா

உள்ளாடை வாங்கப் போறீங்களா.. ?

உள்ளே அணிகிற ஆடை தானே என மட்டரகத் துணிகளை வாங்காதீர்கள். உடம்போடு நேரடித் தொடர்புடையது என்பதால் உள்ளாடைக்குத் தான் அதிக முக்கியத்துவம் அவசியம்.

உங்களின் பிரா அளவு தெரியவில்லையா? உங்களை மாதிரியே உடல் அளவுள்ள பெண்ணின் அளவுதான் உங்களுக்கும் என நினைத்து அதை வாங்காதீர்கள். மார்பக அளவு என்பது ஆளுக்கு ஆள் வேறுபடும்.

அழகுக்காக பிரா வாங்காதீர்கள். உங்கள் மார்பக ஷேப்பை அது சரியாகக் காட்ட வேண்டும். சரியான பிரா என்பது உங்கள் மார்பகம் முழுவதையும் கவர் செய்ய வேண்டும். கைகளுக்கிடையில் சதை தெரியாமல் இருக்க வேண்டியது முக்கியம். அப்படியில்லாத பட்சத்தில் கைகளுக்கிடையே வழிகிற சதையானது, கைகளுடன் உரசி, மசாஜ் செய்த மாதிரி ஆகி, கைகள் பெருத்துப் போகும்.

பிரா அணியாமலிருப்பதை பேஷன் என சில இளம் பெண்கள் அதைத் தவிர்ப்பதுண்டு. மார்பகங்கள் தொய்வடைய வயது எப்படி ஒரு காரணமோ, அதே மாதிரி புவி ஈர்ப்பு சக்தியும் ஒரு காரணம். அடிக்கடி பிரா அணிவதைத் தவிர்ப்பதன் மூலம் அவை சீக்கிரமே தொய்வடையும் வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக இரவில் நைட்டி அணிகிற போது பிராவைத் தவிர்க்க வேண்டாம்.

டீன் ஏஜில் அடியெடுத்து வைக்கும் பெண்களுக்கு இப்போது டீன் பிரா எனத் தனியே கிடைக்கின்றன. திடீரென பிரா அணிகிற போது ஏற்படுகிற ஒருவித உறுத்தலை இந்த வகை பிராக்கள் சரி செய்யும்.


சில பெண்கள் மாதவிலக்கு நாட்களில் அணியவென்றே பழைய, கிழிந்து போன பேண்டீஸ்களை வைத்திருப்பார்கள். இது தவறு. நாப்கின் களை வைத்துக் கொள்ளவென்றே இப்போது பிரத்யேக பேண்டீஸ்கள் கிடைக்கின்றன. மாதவிலக்கு நாட்களில் அவற்றை உபயோகிக்கலாம்.

உள்ளாடைகள் பெரும்பாலும் காட்டன் துணிகளில் இருப்பது தான் நல்லது. நைலான் மாதிரியானவை தவிர்க்கப்பட வேண்டும்.

மணப்பெண்களுக்கான பிரத்யேக உள்ளாடைகள் இப்போது பிரபலம். சாட்டின் துணிகளில், லேஸ் செய்யப்பட்ட பிரா மற்றும் பேண்டீஸ்கள் கிடைக்கின்றன. கல்யாணத்துக்குப் புடவை மற்றும் நகை வாங்குகிற மாதிரி இப்போது இவையும் தவிர்க்க முடியாத விஷயங்களாகி வருகின்றன.

மார்பகங்கள் அழகாகட்டும்....

ஆயிரக் கணக்கில் கொட்டிக் கொடுத்து பட்டாகவும், பகட்டாகவம் உடை வாங்கும் பெண்களில் எத்தனையோ பேர் உள்ளாடை வாங்கும் போது மட்டும் கஞ்சத்தனம் காட்டுகிறார்கள். வெளியே தெரியவா போகிறது, அதற்கு எதற்கு அதிகம் செலவழிக்க வேண்டும் என்ற மனப்பான்மைதான் பெரும்பாலான பெண்களுக்கு. உண்மையில் உள்ளாடைதான் உடைகளில் முக்கியம் என்பது பலருக்கும் தெரிவதில்லை. உள்ளாடை என்பது உடல் பாகங்களை மறைக்க மட்டுமில்லை, உடலின் ஷேப்பைக் கட்டுக் கோப்பாக வைக்கவும்தான்.

டீன் ஏஜ் பெண்களுக்காக, வயதானவர்களுக்காக, மார்பகப் புற்றுநோய் வந்து மார்பகங்களை அகற்றியவர்களுக்காக என்றெல்லாம் மார்க்கெட்டில் விதம் விதமான பிராக்கள் உள்ளன. இவற்றில் லேட்டஸ்ட் மார்பகங்களைத் தொய்வடையச் செய்யாமல் காக்கிற, சிறிய மார்பகங்களைப் பெரிதாக்குகிற, எக்கச்சக்கமாகப் பெருத்த மார்பகங்களை சரியான அளவுக்குக் கொண்டு வருகிற பிராக்கள். அதே மாதிரி குறுக்குப் பெருத்துப் போன பெண்களுக்கான ஸ்பெஷல் பேண்டீஸ். பிரசவத்துக்குப் பிறகு பெருத்துப் போன வயிற்றையும், இடுப்பையும் மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு வருமாம் இந்த பேண்டீஸ். இவற்றைத் தயாரிப்பது க்ரோனி பியூட்டி இன்டர்நேஷனல் என்கிற நிறுவனம். சைனா, ஆஸ்திரேலியா, மலேஷியா, இந்தோனேஷியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் பிரபலமான இந்த நிறுவனம், அடுத்ததாக இந்தியாவுக்குள் காலடி எடுத்து வைக்கிறது.

இந்த நிறுவனத்தின் இந்தியன் பிசினஸ் டெவலப்மென்ட் மேனேஜர் உமா, இந்தப் பிரத்யேக உள்ளாடைகளின் சிறப்புகளை விளக்குகிறார்.

இந்த உள்ளாடைகள் ஆக்சிஜன் கலந்த நூலிழைகளால செய்யப்படுது. பிரா, இடுப்புப் பகுதிக்கு ஒரு சென்டர் பீஸ், முழங்கால் வரையிலான பேண்ட்ஸ்னு மூணு பீஸ் கிடைக்குது. தினம் எட்டு மணி நேரம், தொடர்ந்து மூணு மாசத்துக்குப் போட்டுக் கிட்டா, தொங்கிப்போன மார்பகங்கள் நல்ல ஷேப்புக்கு வரும். மார்பகங்களே இல்லாம இருக்கிறவங்களுக்கும் இதுல ஸ்பெஷல் பிரா இருக்கு. லிக்விட் பிரானு சொல்ற அது, இயற்கையாவே மார்பகங்களை நல்லா ஷேப் பண்ணும். பெரிசாக்கும். அதே மாதிரி ரொம்பப் பெரிய மார்பகங்கள் இருக்கிறவங்களுக்கான பிரா, சரியான அளவுக்கு அழகா மாத்தும்.

தென்னிந்தியப் பெண்களுக்கு இயற்கையாவே இடுப்பு பெரிசு. பிரசவத்துக்குப் பிறகு இன்னும் பெருத்துடும். வயித்தைக் கட்டற தெல்லாம் இப்ப நடைமுறைல இல்லை. அப்படிப்பட்டவங்களுக்கு இந்த பேண்டீஸ் உதவும். சுகப்பிரசவமானவங்களா இருந்தா, இருபது நாட்களுக்குப் பிறகும், சிசேரியன் ஆனவங்க, இரண்டு மாசத்துக்குப் பிறகும் போட்டுக்கிட்டா, மூணே மாசத்துல நல்ல மாற்றங்களைப் பார்க்கலாம். பின் பக்க சதையும் குறையும். பிட்டப் பகுதில சதையே இல்லாம இருக்கிற பெண்களுக்கும், பூசின மாதிரி மாத்த இதுல பிரத்யேக பேண்டீஸ் இருக்கு. முக்கியமா கர்ப்பப்பையை மேலே தூக்கும். அதனால அது இறங்க வாய்ப்பே இல்லை. இந்த உள்ளாடைகளோட முக்கியமான ஸ்பெஷாலிட்டி என்னன்னா, இது ஐந்து முறை மீள் தன்மை கொண்டது. எடை குறைஞ்ச பிறகும்கூட அதே அளவைப் போடலாம். சிம்ரன் மாதிரி உங்க உடம்புக்கு அழகான வளைவைக் கொடுக்கும் என்கிறார்.
உள்ளாடைகள் அணியும்போது கவனிக்க வேண்டிய முக்கிய மான விஷயங்களைப் பட்டியலிடுகிறார் உமா.

பிராவின் கப் அளவு ஒவ்வொருவருக்கும் மாறும். அது தெரிந்து வாங்கினால்தான் மார்பகங்கள் சரியான ஷேப்பில் இருக்கும்.

கப் அளவு பெரியதாக இருக்கிறபோது மார்பகங்களின் இருக்கும் ஷேப்பும் கெடுகிறது. சிறியதாக இருக்கும் போது, பிராவைத் தாண்டி, அக்குள் பகுதிகளில் மார்பகத் தசைகள் பிதுங்கி வழிகின்றன. இதை டபுள் பிரெஸ்ட் என்கிறோம். அந்தச் சதையோடு, அக்குள் பகுதி உரசிக் கொண்டே இருக்கிறது. நாளடைவில் ஜிம் போய் உடற்பயிற்சி செய்த மாதிரி ஆண்களுக்கு இணையாக உங்கள் கைகள் குண்டாகின்றன. பெண்களின் கைகள் குண்டாக இருக்க முக்கிய காரணம் இதுதான். இதைத் தவிர்க்க பக்கவாட்டில் மார்பகத் தசைகள் வழியாதபடி உள்ளே தள்ளும் சரியான பிரா அணிய வேண்டும். அதே மாதிரி ஸ்டைல் என்ற பெயராலல் குறுகலான பேண்டீஸ் அணிகிறார்கள். இதிலும் பக்க வாட்டில் உள்ள சதைகள் தொடைக்குத் தள்ளப் படுகின்றன. தொடைகள் பெருத்துப் போகின்றன. சரியான அளவு அணிகிற போது இடுப்பு பெருத்துப் போவதில்லை.

வயதாக, ஆக மார்பகங்கள் தொய்வடைய ஆரம்பிப்பது சகஜம். தவிர புவி ஈர்ப்பு விசையின் காரணமாகவும் அதில் ஒரு தொய்வு ஏற்படுகிறது. நிறைய பெண்கள் பேஷன் கருதியும், நைட்டி போடுகிற போதும் பிரா அணிவதைத் தவிர்க்கிறார்கள். இது நல்லதல்ல.

உங்கள் மார்பகங்கள் தொய்வடையாமல் சரியான ஷேப்பில் இருப்பதைத் தெரிந்து கொள்ள ஒரு டெஸ்ட்.

தொண்டைக் குழியிலிருந்து, மார்பகங்களின் நிப்பிள் வரை அளந்து பாருங்கள். 18 செ.மீ. இருக்க வேண்டும்.

இரண்டு மார்பகங்களின் அடியிலும் ஒரு பென்சிலை வைத்துப் பாருங்கள். பென்சில் சட்டெனக் கீழே விழ வேண்டும். இல்லாவிட்டால் மார்பங்கள் தொய்ந்திருப்பதாக அர்த்தம்.

சிரிக்க முடியலையா....?

மனித பிறவியின் உயர்ந்த அம்சமாக கருதப்படுகின்ற பெண்மைக்குத்தான் அடுக்கடுக்காக எவ்வளவு சோதனைகள்?

பெண்களின் உடல் சார்ந்த சில பாதிப்புகள் அவர்களின் அன்றாட பணிகளைகூட சரியாக செய்ய முடியாத, மற்றவர்களோடு தொடர்ந்து பணியாற்ற இயலாத பிரச்சினையைகூட உண்டு பண்ணிவிடலாம். ஏன்... மற்றவர்கள் மாதிரி கல கலவென்று சிரிக்க முடியாத, தும்மல் வந்தால் தும்மி வைக்க..., இருமல் வந்தால் இரும முடியாத நிலைமையை உண்டாக்கலாம். ஆம் சில பெண்கள் சிரித்தால், இருமினால் அவர்களுக்கு சிறுநீர் அடக்க முடியாமல் உடையிலேயே கசிந்து விடலாம். இது பெண்களுக்கு மட்டுமே வரும் உடனடியாக கவனிக்க வேண்டிய நோய் பாதிப்பாகும். ஏறத்தாழ 50 சதவீதம் பெண்களுக்கு சிறுநீர் தொடர்பான பாதிப்பு ஏதேனும் ஒன்றாவது இருக்கும். முப்பது வயது கடந்த உடனேயே பெண்களுக்கு இதுபோன்ற பாதிப்புகள் ஆரம்பமாகி விடுகின்றன.

சிறுநீர்க்கசிவை கட்டுப்படுத்தும் சக்தியானது குறைந்து போவதனால்தான் இந்த பாதிப்பு ஏற்படுகின்றது. பொதுவாக சிறு நீர்ப்பை ஒரு ஊஞ்சல் போன்ற தசைகளினால் தாங்கப்பட்டுள்ளது. இந்த தசைகள் பிரசவத்திற்கு பின்னர் சில பெண்களுக்கு சேதமடைந்து விடலாம். மெனோபாஸ் நேரத்தில் மேலும் தளர்ச்சி அடைந்து விடும். சுருங்கி விரியும் தன்மை கொண்ட தசைகள் தான் சிறுநீர்க் குழாயை இறுக மூடி வைத்திருக்கும். சிறுநீர் பிரியும் நேரம் வரையிலும் இறுக பிடித்து வைத்திருக்கும். சாதாரணமாக சிறுநீர் கழிக்க போகும் போது இந்த தசைகள் தளர்ந்து சிறுநீர் பிரியும். ஆனால் பிரச்சினை காரணமாக நிரந்தர மாக தளர்ச்சிக்கு உள்ளானவர்கள் தும்மினால், வேகமாக அதிர்ந்து நடந்தால், படிகள் இறங்கினால், சிரித்தால் சிறுநீர் கசிவு ஏற்படும். அதிகம் குழந்தை பெற்ற பெண்மணிகளுக்கும் இந்தப் பிரச்சினை வரலாம். பிரசவத்திற்குப் பிறகு ஜpகமகஇநி போன்ற உடற்பயிற்சி செய்து தளர்ந்த தசைகளை பலப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் பெண்கள் எவருமே பிரசவத்திற்கு பிறகு உடற்பயிற்சிகளை மேற் கொள்வதில்லை. உடல் பருமன் ஆனவர்களுக்கும் இத்தகைய பாதிப்பு வரலாம்.

சரி... இத்தகைய பிரச்சினைக்கு என்ன செய்யலாம்? இந்த பிரச்சினைகளுக்கு என்றே பிரத்தியேக மருந்துகள் உள்ளன. அவற்றை உட்கொள்ளலாம். மகப்பேறு மருத்துவராக இருப்பதுடன் சிறுநீர், சிறுநீரகம் பற்றி நிபுணத்துவம் பெற்ற மருத்துவரால்தான் இப்பிரச்சினைக்கு ஆலோசனை தரமுடியும். மருந்துகளால் குணமடையாதபோது அறுவை சிகிச்சைதான் நிரந்தர தீர்வாகும்.

by Dr.ஷர்மிளா

செக்ஸ் அடிமையா நீங்கள்....

அடிமைகள் பல விதம். அதிலொரு பிரிவு செக்ஸ் அடிமை. பெண்களில் 72 சதவிகி தத்தினர் செக்ஸ் அடிமைகள் என்கிறது ஒரு ஆராய்ச்சித் தகவல். அதில் நீங்களும் ஒருவரா?

செக்ஸ் அடிமைத் தனத்தை எப்படிக் கண்டு பிடிப்பது, அதிலிருந்து வெளியே வருவது எப்படி? இனிவரும் தகவல்கள் உங்களுக்காக....

உங்களுடைய செக்ஸ் நடவடிக்கைகள் சாதாரண மானவையாக இல்லை என உணர்கிறீர்கள். ஆனாலும் அது செக்ஸ் அடிமைத்தனமா என்பதில் சந்தேகமா? கீழ்க்கண்ட கேள்விகளை உங்களுக்கு நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

1. செக்ஸ் தொடர்பான புத்தகங்கள், நாவல்கள் போன்றவற்றை அடிக்கடி வாங்கிப் படிப்பவரா?

2. பகல் கனவு, அதிலும் சதா செக்ஸ் பற்றிய கனவே காண்பவரா நீங்கள்?

3. உங்களது அசாதாரண செக்ஸ் நடவடிக்கைகள் உங்கள் குடும்பத்தினர், நெருங்கிய தோழிகள் போன்றவர்களுக்கு சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறதா?

4. செக்ஸ் பற்றிப் பேசுவதில் அதிகக் கிளர்ச்சியடைபவரா?

5. சாதாரணத் தலைவலியாகட்டும், தலையே போகிற பெரிய பிரச்சினையாகட்டும், அதற்கான உடனடி வடிகால் உங்களுக்கு செக்ஸா?

6. மாமூலான மற்ற வேலைகளைச் செய்ய விடாமல் தடுக்கும் அளவுக்கு உங்களது செக்ஸ் ஆர்வம் விஸ்வரூபம் எடுக்கிறதா?

7. அளவுக்கதிக செக்ஸ் ஆர்வத்திலிருந்து விடுபட நீங்கள் ஏதேனும் முயற்சி மேற்கொண்டு, அது தோல்வியடைந்திருக்கிறதா?

மேற்சொன்ன கேள்விகளில் ஒன்றுக்கு உங்களது பதில் ஆமாம் என்றிருந்தாலும் நீங்கள் செக்ஸ் அடிமை என்பதில் சந்தேகமே இல்லை.

செக்ஸ் அடிமைப் பெண்களிடம் எப்படிப் பட்ட அறிகுறிகள் காணப்படும்?

எதிலும் ஒரு நிதானம் இருக்காது. குடும்பம், வேலை, குழந்தைகள், நட்பு என எல்லாவற்றிலும் விட்டேத்தியான ஒட்டு தலுடன் இருப்பார்கள். பொழுதுபோக்கு, கலை என மிகப்பிடித்த பல விஷயங்களிலிருந்து விலகியே இருப்பார்கள்.

அடிக்கடி படபடப்பு, சோர்வு, மன உளைச்சல், டென்ஷன், பொறுமையின்மை போன்றவை ஏற்படும்.

செக்ஸ் அடிமையாகக் காரணம் என்ன?

சிறு வயதில் பாலியல் பலாத்காரங்களுக்கு உட்படுத்தப்படும் பெண்களே பெரும்பாலும் இப்படி ஆகிறார்கள் என்கிறது ஒரு ஆராய்ச்சித் தகவல். அப்படி ஏற்படுகிற அனுபவத்தை உடனடியாக வெளியே சொல்லி, குடும்பத்தாரால் அரவணைத்து, ஊக்கப் படுத்தப்பட்டு வளர்க்கப்படுகிற பெண்கள் சில நாட்களில் சகஜமாகி விடுகிறார்கள். மற்றவரிடம் சொல்ல பயந்து, அதைத் தனக் குள்ளேயே ரகசியமாகப் பாதுகாக்கிற பெண்கள், பின்னாளில் அதீத செக்ஸ் ஆர்வமுள்ளவர்களாக மாறு கிறார்கள் என்கிறது அந்த ஆராய்ச்சி. முள்ளை முள்ளால் எடுக்கிற டெக்னிக் மாதிரிதான் இதுவும்.

அதீத செக்ஸ் ஆர்வமுள்ள பெண்கள் அதற்கு வடிகாலாகத் தேர்ந்தெடுக்கும் முதல் ஆயுதம் சுயஇன்பம். ஆபாசப் படங்களைப் பார்ப்பது, புகைப் படங்களை ரசிப்பது என ஆண்கள் நாடும் விஷயங்கள் இவர்களை ஈர்ப்பதில்லை. 60 சதவிகிதப் பெண்களுக்கு வாரத்துக்கு இரண்டு முதல் நான்கு முறை சுய இன்பம் காண்கிற பழக்கம் இருப்பதாகவும் மேற் சொன்ன ஆராய்ச்சி தெரிவிக்கிறது. ஆபத்தில்லாத, செலவில்லாத வடிகால் இது என்றாலும், இது அளவை மிஞ்சும் போது வேறு விதங்களில் தன் விளைவுகளைக் காட்டுகிறது.


தீர்வுகள்:-

போதை, குடி மாதிரியான எல்லா அடிமைத் தனங்களுக்கும் அடிப்படை மனசு. எனவே முதலில் சிகிச்சை தர வேண்டியது மனதுக்கு. செக்ஸ் ஆர்வம் உங்களைக் கட்டுப்பாட்டை இழக்கச் செய்வதாக உணர்கிறீர்களா? மனநல மருத்துவரை அணுகுங்கள். அவர் சொல்கிற மனப் பயிற்சிகள் உங்களை மாற்றும். யோகா, தியானம் போன்றவை கட்டாயம் பலன் தரும்.

கடவுள் நம்பிக்கை உள்ளவரானால், ஆன்மீக விஷயங்களில் அதிக நாட்டம் செலுத்துங்கள்.

மனசு கொஞ்சம் மாறுகிற வரை ஆண்-பெண் சந்திப்புகள் அதிகம் இருக்கிற இடங்களுக்குச் செல்வதைத் தவிருங்கள்.

இன்டர்நெட் உபயோகிக்கிற, பிரவுஸ் செய்கிற பழக்கமிருந்தால், தற்காலிகமாக நிறுத்துங்கள்.

உடற்பயிற்சி செய்யுங்கள். ஜாகிங் இப்பிரச்சினைக்கான மிக அருமையான பயிற்சி என்கிறார்கள் அனுபவஸ்தர்கள்.

செக்ஸ் ஆர்வம் தலைதூக்கும் போதும், சுய இன்பம் செய்ய நினைக்கிற போதும் சட்டென மனத்தை உங்களுக்குப் பிடித்த வேறு விஷயத்தில் திருப்புங்கள்.

சிகரெட் பிடிப்பதை நிறுத்த வேண்டும் என உண்மையிலேயே நினைப் பவர்களுக்கு அந்த முடிவெடுக்க ஒரு நிமிடம் போதும். ஆனால் அதில் உறுதியில்லாதவர்கள்தான் பலமுறை அப்பழக்கத்தை விட்டவர்களாக இருப்பார்கள். அது மாதிரிதான் அதீத செக்ஸ் ஆர்வமும். முடிவில் உறுதியிருந்தால் இப்பழக்கத்திலிருந்து வெளியே வருவது சுலபம். முடிந்தவரை உங்களை பிஸியாக வைத்திருங்கள். மனசுக்கு வேலையில்லாமல் போகிற போதுதான் இப்படிப்பட்ட விஷயங்களைப் பற்றி சிந்திக்கிறது.

By Dr.ஷர்மிளா

மார்பகமே ...மார்பகமே...

இந்தியாவில் பத்தில் எட்டு பெண்களுக்கு மார்பகம் தொடர்பான பிரச்சினைகள் உண்டு. அதாவது மார்பகங்கள் தொய்வடைந்து போதல், சரியான ஷேப்பில் இல்லாதது என ஆளாளுக்கு ஓர் கவலை. எல்லாவற்றுக்கும் அடிப்படை அவர்கள் அணிகிற மிகத் தவறான பிரா என்கிறது ஒரு ஆராய்ச்சி. ஆயிரக் கணக்கில்கொட்டிக் கொடுத்து சுடிதாரும், சேலையுமாக வாங்கும் பெண்கள் பலருக்கு, பிராவுக்குப் போய் நிறைய செலவு பண்ணுவானேன் என்கிற நினைப்பு. விளைவு மேற் சொன்ன பிரச்சினைகள்.

சரியான பிரா என்பது உங்கள் மார்பகங்களில் கச்சிதமாகப் பொருந்த வேண்டும். மார்பகச் சதைகள், மேலேயோ, பக்க வாட்டிலோ வழியவோ, பிதுங்கவோ கூடாது. பிராவின் அடிப்பட்டைகள் மிகச்சரியாக மார்பகங்களுக்கு அடியில் நிற்க வேண்டும். அகலமான பட்டைகள் வைத்த பிரா சிறந்தது. பிரா அணிகிற போது அதன் பட்டைகள் தோள்பட்டையில் பதிந்து, கோடு கோடாக தெரிய வைக்கக் கூடாது.

கண்கள் அழகாக, உதடுகள் அழகாக, கன்னங்கள் பளபளக்க என பார்த்துப் பார்த்து சாப்பிடுகிறோம். மார்பக அழகுக்கும் உணவு உண்டு தெரியுமா?
தினசரி உணவில் கேரட், கீரை, சோயா பீன்ஸ், ஆலிவ் ஆயில் சேர்த்துக் கொள்கிறவர்களுக்கு மார்பக அழகு கியாரண்டியாம். மார்பகப் புற்று நோயும் இதனால் தவிர்க்கப் படுமாம்.

நீங்கள் இளமைக்குக் குட்பை சொல்லப் போகிறீர்கள் என்பதன் ஆரம்ப அறிகுறி எங்கே தெரியும் என்று அறிவீர்களா? கழுத்து மற்றும் மார்பகங்களில் தான். அவற்றைச் சுற்றியுள்ள தசைகள் ரொம்பவும் மென்மையானவை. எளிதில் சுருக்கங்கள் விழக்கூடியவை. தவிர்க்க என்ன செய்யலாம்? முகத்துக்கு தினமும் செய்கிற கிளென்சிங், டோனிங் மற்றும் மாயிச்சரைசிங்கை மார்பகங்களுக்கும் செய்ய வேண்டும். அதாவது முதலில் கிளென்சிங் மில்க்கில் பஞ்சை நனைத்து மார்பகங்களைத் துடைத்து எடுக்க வேண்டும். அதன் மேல் டோனரில் நனைத்த பஞ்சை ஒற்றி எடுக்க வேண்டும். சில நிமிடங்கள் கழித்து மாயிச்சரைசர் தடவிக் கொள்ள வேண்டும்.

வாரம் இரண்டு அல்லது மூன்று முறைகள் நீங்கள் உங்கள் மார்பகங்களுக்கான அழகு சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியதும் முக்கியம். அதாவது ஓட்மீல் அல்லது கோதுமைத் தவிடு கொண்டு மார்பகங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிக மிக மென்மையாகத் தேய்த்துத் தடவிக் கழுவ வேண்டும்.

மார்பகங்கள் தொய்வடைந்து காணப்பட்டால் வேப்பிலை மற்றும் கேரட் விழுது கலந்து பேக் மாதிரிப் போடலாம். முதலில் பாதாம் கலந்த கிரிமால் மார்பக ஏரியாவை நன்றாக கீழிருந்து மேலாக வட்ட வடிவத்தில் மசாஜ் செய்து விட்டு, அதன் பிறகு இந்தப் பேக்கைப் போடவும். ஒரு முறை போட்டதுமே பலனை எதிர்பார்க்காதீர்கள். தொடர்ந்து பல முறைகள் முயற்சித்தால் பலன் நிச்சயம்.

மாதுளம் பழத்தின் தோலைக் காய வைத்தப் பொடித்துக் கொள்ளவும். அத்துடன் கடுகெண்ணெய் கலந்து மார்பகங்களில் தடவி சிறிது நேரம் ஊறிக் குளித்து வந்தாலும் மார்பகங்கள் நல்ல வடிவமும், அழகும் பெறும். வயதுக்கேற்ற மார்பக வளர்ச்சி இல்லாத டீன் ஏஜ் பெண்களுக்கு இந்த சிகிச்சை நல்ல பலன் தருகிறதாம்.

மார்பகங்களுக்கான பயிற்சிகள்:-

சுவற்றின் முன்னால் நின்று கொள்ளவும். உள்ளங்கைகள் சுவற்றில் பதியும்படி நிற்கவும். உடலை, இடுப்பை நகர்த்தாமல், உங்கள் மார்பகப் பகுதி மட்டும் முன்னும், பின்னுமாகப் போய் வரும்படி செய்யவும்.

கால்களை அகட்டி, கைகள் இரண்டையும் பின் பக்கம் கட்டிக் கொண்டு, அதே நிலையில் பத்து எண்ணியபடி நிற்கவும். இதே மாதிரி நான்கு முறைகள் செய்யவும்.

இது மார்பகங்கள் தொய்வடைந்து போன பெண்கள் மற்றும் தாய்ப்பால் ஊட்டும் பெண்களுக்கு.

நேராக நின்று கொண்டு, கைகளைத் தலைக்கு மேல் தூக்கி, இரண்டு உள்ளங்கைகளையும் சேர்க்கவும். அதை அப்படியே இறக்கி, தோள்பட்டைகளுக்கு நேரே வைத்துக் கொண்டு வணக்கம் சொல்கிற மாதிரி வைத்துக் கொள்ளவும். உள்ளங்கைகள் இரண்டும் அழுந்த வேண்டும். பத்து எண்ணியபடி அதே நிலையில் இருக்கவும். எப்போதெல்லாம் முடியுமோ, அப்போதெல்லாம் இதைச் செய்யலாம்.


By Dr.ஷர்மிளா

முன்னழகு ரகசியம்...

நடிகைகளுக்கும், விளம்பர மாடல்களுக்கும் சாத்தியப்படுகிற முன்னழகு சாமானியப் பெண்களுக்கு மட்டும் முடியாத விஷயமா என்ன?

இதோ உங்களுக்கு சில ஆலோசனைகள்...

திடீரென உடல் இளைப்பதும், திடீரென பருப்பதும் முன்னழகுக்கு பாதகம் விளைவிக்கிற சமாச்சாரம். உடல் இளைத்து, பருப்பதால் மார்பகத் தசைகள்தான் முதலில் பாதிக்கப்படும். விரிந்து, சுருங்கி, அவ்விடங்களில் சுருக்கங்கள் விழுந்து விடும்.

மார்பகங்களில் சில பெண்களுக்கு கோடுகளும், தழும்புகளும் இருக்கும். இதை ரொம்ப சுலபமாக சரியாக்கலாம். அழகு சாதன விற்பனைக் கடைகள் மற்றும் பியூட்டி பார்லர்களில் ஆல்ஃபா ஹைட் ராக்சி கிரிம் கிடைக்கும். இத்துடன் வைட்டமின், கோக்கோ பட்டர், கற்றாழை ஜெல், கொலாஜன் கிரிம் ஆகியவை சேர்த்து தழும்புகள் மற்றும் கோடுகளின் மேல் மசாஜ் செய்ய அவை மறைந்து, மார்பகங்களும் எடுப்பாகும்.

மார்பக அழகுக்கு முக்கிய தேவை புரோட்டீன். புரோட்டீனில் மார்பகம் சரியான ஷேப்பிலும், பூசினாற் போலவும் காட்சியளிக்கத் தேவையான கொலாஜனும் இருக்கிறது. எனவே உங்கள் ஒவ்வொரு வேளை சாப்பாட்டிலும் புரோட்டீன் நிறைய இருக்கிற ஐட்டங்களை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு ஒத்துக் கொள்கிற பட்சத்தில் மார்பகங்களுக்கு மட்டும் ஐஸ் வாட்டர் குளியல் நடத்தலாம்.

வெந்நீரிலேயே குளித்துப் பழக்கப் பட்ட பெண்கள் மார்பக அழகு பறிபோவதை நினைத்துக் கவலைப்படக் கூடாது. வெந்நீர் குளியல் மார்பகத் தசைகளை தொய்வடையச் செய்யும் என்கிறது ஒரு ஆராய்ச்சி. அப்படியே வெந்நீரில்தான் குளித்தாக வேண்டும் என்கிற பட்சத்தில், மார்பகங்களின் மேல் வெந்நீர் படாமல் குளிக்க வேண்டியது முக்கியமாம்.

By Dr.ஷர்மிளா

மயக்கமா..? தயக்கமா..?

செக்ஸ் உறவுக்கு என் உடம்பு தகுதியானதா, தயாரா என்பதை எப்படி அறிவது?

ஒவ்வொரு பெண்ணுக்கும் முதலில் அவளது உடலின் மீது, அழகின் மீது நம்பிக்கை வரவேண்டும். எல்லாரிடமும் பிளஸ்சும் இருக்கும். மைனசும் இருக்கும். பிளஸ்சான விஷயங்களை ஹைலைட் செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும். கண்ணாடி முன் நின்று கொண்டு உடல் முழுவதையும் ஆராயவும். அப்போது உங்கள் உடலில் சில பகுதிகளை உங்களுக்குப் பிடிக்கும். சிலது பிடிக்காமல் போகும். பிடிக்காததற்கான காரணங்களைப் பாருங்கள். அந்த இடத்தையும் அழகாக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள். செக்ஸ் உறவுக்கு உங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ள, தயார்படுத்திக் கொள்ள இதுதான் அடிப்படை.


நான் கன்னித் தன்மை உடையவள்தான் என்பதை என் கணவருக்கு எப்படி நிரூபிப்பது?

மனத்தளவில் நேர்மையாக இருக்கிற பட்சத்தில் நீங்கள் இதை நிரூபிக்க வேண்டிய தில்லை. முதல் முறை செக்ஸ் உறவின் போது பெண்ணின் பிறப்புறுப்பின் வாயிலான கன்னிச் சவ்வு கிழிந்து இரத்தப் போக்கு இருக்கும். ஆனால் விளையாட்டு, நட னம், உடற்பயிற்சி போன்றவற்றில் தீவிரமாக ஈடுபட்ட பெண்களுக்கு அவற்றின் மூலமும் ஏற்கனவே கன்னி சவ்வு தளர்ந்திருக்கும். முதல் முறை உறவின் போது, கணவரிடம் அவரது செக்ஸ் அனுபவங்களைக் கேளுங்கள். அப்படி அவருக்கு எதுவும் இல்லாத பட்சத்தில் இருவருக்கும் பிரச்சினை இல்லை. அவருக்கு அந்த விஷயத்தில் அனுபவம் இருப்பதாகத் தெரிந்தால், பயமின்றி, திருமணத்துக்கு முன்பு நீங்கள் ஈடுபட்டிருந்த மேற்சொன்ன விஷயங்களைப் பற்றிச் சொல்லி அவரைத் தெளிவுப்படுத்துங்கள்.


முதல் முறை உறவு என்பது மரண வலியாக இருக்குமாமே?

முந்தைய பதிலில் சொன்னபடி கன்னி சவ்வு கிழிவதால் ஏற்படுகிற வலியே அது. ஆனால் அதுவும் பலரும் நினைத்து பயப்படுகிற அளவுக்கு மரண வலியெல்லாம் கிடையாது. அடுத்தடுத்த உறவுகளில் தானாக சரியாகி விடும். முதல் உறவு என்பது தம்பதியர் இருவருக்குமே மனத்தளவில் நிறைய இறுக்கத்தையும், டென்ஷனையும், பயத்தையும் தரக் கூடியது. அந்தச் சூழ்நிலை தவிர்க்கப்பட வேண்டும்.


உறவில் உச்சக் கட்டம் அடைய நான் என்ன செய்ய வேண்டும்?

முதல் வேலையாக அதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பதைத் தவிர்க்க வேண்டும். பொதுவாகப் பெண்களுக்கு உறவின் போதான 20 முதல் 60 நிமிடங்களில்தான் உச்சக்கட்டம் உண்டாவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. பல பெண்களுக்கு அதற்குள் உறவே முடிவுக்கு வந்து விடுவதால் உச்சக் கட்டம் என்பதையே அறியாமலிருக்கிறார்கள். உறவுக்கு முன்பான விளையாட்டுக்களில் கணவரை அதிக நேரம் செலவிடச் சொல்ல வேண்டும். உங்களை எந்த மாதிரியான ஸ்பரிசம், எந்த விஷயம் கிளு கிளுப்படைய வைக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு கணவரிடம் அதைத் தெரிவிக்க வேண்டும்.


உறவு முடிந்ததும் ஆண்கள் உடனடியாகத் தூங்கி விடுவது ஏன்?

உறவின் போதான உச்சக் கட்டத்தில் ஆண், பெண் இருவரது உடலிலிருந்தும் ஆக்சிடாக்சின் என்கிற ஹார்மோன் வெளியேறுகிறது. தாய்ப்பால் ஊட்டும் போது வெளியேறும் அதே ரசாயனம்தான் இது. அதனால்தான் தாய்ப்பால் குடித்த குழந்தை உடனே தூங்கி விடுகிறது. இந்த ஆக்சிடாக்சின் அம்மா- பிள்ளை இடையே பிணைப்பை உண்டாக்கக் கூடியது. அதே மாதிரிதான் செக்ஸ் உறவுக்குப் பின், பெண், ஆணைக்கட்டிக் கொண்டிருப்பதை விரும்புகிறாள். உறவுக்குப் பிறகான உறக்கத்துக்கு இதுதான் காரணம்.


செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள கால இடைவெளி ஏதும் அவசியமா?

திருமணமான புதிதில் அப்படியிருப்பதில்லை. போகப் போக அந்த நாட்டம் சற்றே குறைவது சகஜம். அளவுக்கதிகமான செக்ஸில் உடலுக்கு ஆபத்து ஏதும் இல்லை என்றாலும், சீக்கிரமே சலிப்பை உண்டாக்கும் அது. நினைத்தவுடன் அடைகிற விஷயத்தை விட, காத்திருந்து கைகளில் கிடைக்கிற விஷயத்துக்குத் தனி மதிப்பும், மவுசும் உண்டல்லவா? அதே மாதிரிதான் இதுவும்.


By Dr.ஷர்மிளா

வயிற்றுக்குள் சுருக்... சுருக்...

பெண்களுக்கு ஏற்படுகின்ற மாதாந்திர பிரச்சினைகளில் முக்கியமானவை:-

ஒழுங்கற்ற மாத விலக்கு, வலியோடு கூடிய மாதவிலக்கு, தடைப்பட்ட மாதவிலக்கு, வெள்ளைப்படுதல் போன்றவற்றை குறிப்பிடலாம். ஒரு மாதத்திற்குள் இரண்டு தடவை மாத விலக்கு வருவதும், சரியான நேரத்தில் வராமல் ஒரு மாதத்திற்கு மேலும் 10-15 நாட்கள் கழித்து மாதவிலக்கு வருவதற்கு ஒழுங்கற்ற மாத விலக்கு என்று பெயர். ஒரே மாதத்தில் இரண்டு தடவை மாதவிலக்கு வருவதற்கு உடம்பில் வெப்பம் ஏற்படுதல், உஷணமான உணவுகளை உண்பது, சில மாத்திரைகளின் ரசாயனங்கள், கல்லீரல் பாதையில் ஏற்படுகின்ற தடைகள், சத்தற்ற ஆகாரம் போன்றவை தான் காரணங்களாகும்.

இது போலவே நீண்ட நாட்கள் கழித்து மாத விலக்கு வருவதற்கு உடம்பில் ரத்தம் குறைவு, ரத்தத்தில் குளிர்;ச்சி மற்றும் உயிர் சத்து ஓட்டத்தில் தடை ஏற்படுவதும்தான் காரணமாகும். வலியோடு ஏற்படும் மாதவிலக்கிற்கு உயிர் சத்தும், ரத்தமும் எளிதாக கர்ப்பப்பையைக் கடந்து செல்லாததுதான் காரணம். இது தவிர அளவிற்கு அதிகமாக குளிர்ச்சியான உணவுகளை உண்பது, உடம்பில் வெப்பதத்தை தேக்கி வைத்துக் கொள்வது போன்ற காரணங்களும் இந்த பாதிப்பினை தோற்றுவிக்கலாம். தடைப்பட்ட மாதவிலக்கு மற்றும் மாதக் கணக்கில் மாதவிலக்கு வராமல் இருப்பதற்கும் காரணங்கள் உள்ளன. ரத்தக் குறைவினால் அல்லது மாதவிலக்கு வரும் பாதையில் வேறு சில வியாதியால் தடை ஏற்படுவது போன்றவை தான் இதற்கு காரணமாகும். ரத்தம் தடை படுவதினால் பல மாதங்களுக்கு மாதவிலக்கு வராது. சில நேரங்களில் அடி வயிற்றில் பந்து போல கட்டியாக தென்படலாம். வயிற்றில் சுருக்... சுருக்... என்று அடிக்கடி வலிக்க லாம். மார்பகத்தில் கூட இதனால் வலி இருக்கலாம். அதிக ரத்தப் போக்கினால் அதன் பின்விளைவாகவும் மாத விலக்கு நீண்ட நாட்களுக்கு வராமல் போகலாம்.

அடுத்து இன்றைய பெண்களில் பலருக்கு இருக்கின்ற பிரச்சினை வெள்ளைப் படுதலாகும். இவ்வாறு பெண்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு அலோபதி, சித்தா, யுனானி, ஹேhமியோ என்று பல சிகிச்சை முறைகள் இருப்பது உண்மைதான். பெண்களின் மாதவிலக்கு மற்றும் வெள்ளைப்படுதல் பிரச்சினைகளுக்கு அந்தந்த பிரச்சினைகளுக்கு காரணமான மெரிடினியன்களை (புள்ளிகளை) கண்டறிந்து அகுபங்க்சர் ஊசி மூலம் சிகிச்சை செய்தால் பூரண குணமடையலாம்.


by Dr.ஷர்மிளா

அந்த நாளும் இனிய நாளே.....

அந்த மூன்று நாட்கள் உங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை என்று தானே மாதா மாதம் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? ஆனால் உங்கள் கவனக்குறைவும், அந்த நாட்களில் உங்களிடமிருந்து வீசும் வாடையும் நீங்கள் சொல்லாமலே மற்றவர்களுக்கு அந்த நாட்களைத் தெரியப்படுத்தும் என்பது தெரியுமா? கேட்கவே தர்மசங்கடமாக இருக்கிறதா? இதோ இந்த யோசனைகள் உங்களுக்குத் தான்....

மற்ற நாட்களில் நீங்கள் எப்படியோ? ஆனால் மாதவிலக்கு நாட்களில் அதிக பட்ச சுத்தமாக இருக்க வேண்டியது மிக முக்கியம். இரண்டு வேளைக் குளியல், குறிப்பிட்ட நேரத்துக்கொரு முறை நாப்கின் மாற்றுதல் போன்றவை உங்களைப் புத்துணர்வோடு வைக்கும்.

மாதவிலக்கு நாட்களில் உபயோகிக்கிற நாப்கின்களில்தான் எத்தனை எத்தனை வகை? சிறியது, பெரியது, பக்கவாட்டில் அகலமானது, குண்டான பெண்களுக்கானது என ஏகப்பட்ட ரகங்கள்.... உங்களுடைய மாதவிலக்கு சுழற்சியையும், மாதவிலக்கின் போதான இரத்தப் போக்கின் அளவையும் பொறுத்துத் தீர்மானிக்கப்படுகிற விஷயம் இது. உதிரப் போக்கானது பெண்ணுக்குப் பெண் வேறுபடும். நாப்கின்கள் உபயோகிக்க எளிதானவை. கசக்கித் துவைத்து, காய வைக்க வேண்டிய அறுவறுப்பான வேலைகள் இல்லாதவை. எனவே உங்கள் வசதிக்கேற்ற அளவில் நல்ல நாப்கின்களை அணிவதை பூப்பெய்தும் நாள் முதலே பழக்கப் படுத்திக் கொள்ளுங்கள்.

அடுத்து டாம்பூன் எனப்படும் உறிஞ்சு குழல். இதைப் பற்றி நிறைய சர்ச்சைகள் உள்ளன. நீச்சல் மாதிரியான வேலைகளின் போதும் அணிய வசதியானது என்பதால் பல பெண்கள் டாம்பூன்களை விரும்புகின்றனர். பிறப்புறுப்பினுள் நுழைத்துக் கொள்ள வேண்டியதால், திருமணமாகாத பெண்களுக்கு இது உகந்ததல்ல என்றும் சொல்லப்படுகிறது. மற்றபடி இதை உபயோகிப்பது சிரமம் என்பதெல்லாம் சும்மா.

நாப்கினோ, டாம்பூனோ நீங்கள் எதை அணிகிறீர்கள் என்பது முக்கியமில்லை. உதிரப் போக்கு அதிகமிருக்கிறதோ, இல்லையோ, நான்கைந்து மணி நேரத்துக்கொரு முறை அவற்றை மாற்ற வேண்டியது அவசியம். இரத்தப் போக்கு இல்லாவிட்டாலும், உடலிலிருந்து வெளிப்படும் வியர்வை, கசிவு போன்றவற்றின் விளைவாக அவற்றிலிருந்து ஒருவித வாடை வீசும்.
உபயோகித்த நாப்கின்களை எக்காரணம் கொண்டும் கழிவறைக்குள் ப்பிளஷ் செய்யாதீர்கள்.

அடுத்து மாதவிலக்கு நாட்களின் போதான உள்ளாடை. பேண்டீஸ் அணிந்தே பழக்கமில்லாத பெண்கள்கூட மாதவிலக்கு நாட்களில் மட்டும் அணிவதுண்டு. அதுவும் மாதவிலக்கு நாட்களுக்கென்றே கிழிந்து போன, சாயம் போன, பழைய பேண்டீஸ்களை பத்திரப் படுத்தி வைக்கும் பெண்களும் உண்டு. இது மிகவும் தவறு. மாதவிலக்கு நாட்களில் அணிவதற்கென்றே, இப்போது பிரத்யேக பேண்டீஸ்கள் உள்ளன. உடைகளில் கறை படிவதையும் இவை தவிர்க்கும்.

நீங்கள் எதிர்பாராத நேரத்தில் மாதவிடாய் வந்து, உங்கள் உள்ளாடை மற்றும் உடையைக் கறைப் படுத்தி உங்களைத் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி விட்டதா? எப்போதும் கைவசம் கொஞ்சம் உப்பு வைத்துக் கொள்ளுங்கள். கறை பட்ட இடத்தை உப்பும், குளிர்ந்த தண்ணீரும் கலந்து அலசிட, உடனடியாக மறையும். வீட்டுக்கு வந்த பிறகு டிடெர்ஜென்ட் போட்டு அலசிக் கொள்ளலாம்.

மாதவிலக்கின் போது உபயோகிக்கப் படுகிற உள்ளாடைகளை டெட்டால் கலந்த தண்ணீரில் அலசிக் காய வைக்க வேண்டியது முக்கியம்.

மாதவிலக்கின் போதான உடல் நாற்றம் பல பெண்களின் பிரச்சினை. அவர்களை விட அது மற்றவர்களை அதிகம் முகம் சுளிக்க வைப்பதுதான் வேடிக்கை. மாதவிலக்கின் போதான ஹார்மோன் மாற்றங்களால்தான் இப்படிப்பட்ட துர்நாற்றம் வருகிறது. கர்ப்பப் பையின் உட்புறத் திசுக்கள் இரத்தத்தோடு சேர்ந்து வெளியேறுவதன் விளைவான நாற்றம் இது.

இதைத் தவிர்க்க மாதவிடாய் நாட்களில் காட்டன் உள்ளாடையையே அணிய வேண்டும். காற்றோட்டமானதாக இருக்க வேண்டியது முக்கியம். ஒவ்வொரு முறை நாப்கின் மாற்றும் போதும் முன் பக்கத்திலிருந்து, பின் பக்கம் வரை பிறப்புறுப்பு நன்றாக சுத்தப் படுத்தப்பட வேண்டும். நாற்றத்தை மறைக்க, அதிக வாசனையுள்ள சோப் உபயோகிப்பதைத் தவிர்க்கவும். அவையெல்லாம் பிறப்புறுப்பின் மிக மென்மையான திசுக்களை அழற்சிக்குள்ளாக்கும்.

மாதவிடாய் நாட்களில் உபயோகிக்க வென்றே பெமினைன் வாஷ் கிடைக்கிறது. அதையும் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் உபயோகிக்கலாம்.

By Dr.ஷர்மிளா

சின்ன வயசில் பெரிய மனுஷி....

சின்னஞ்சிறு மொட்டாக இருக்கிற ஒரு பூ மலர்வதற்கு என்று இயற்கை ஒரு காலத்தை நிர்ணயித்திருக்கிறது. அதுபோன்றே... ஒரு பெண்ணும் பெரிய மனுஷியாக ஒரு குறிப்பிட்ட காலத்தை இயற்கை நிர்ணயித்திருக்கிறது. அதனால் தான் பொருத்தமாக அந்த மலரும் பருவத்தை பருவகாலம் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். ஆனால் இயற்கைக்குமாறாக சில பெண் குழந்தைகள் மிக மிக இளம் வயதிலேயே பெரிய மனுஷியாகி விடுவதும் உண்டு. இருபதாண்டுகளுக்கு முன்பு வரை பெண்கள் பருவம் எய்துவது 14 வயதிற்கு மேல்தான் நிகழ்ந்தது. ஆனால் இன்றைய விஞ்ஞான யுகத்தில் பெண்களின் வளர்ச்சி அபரிமிதமாக போய்விட்டது. இதன் காரணமாக பல பெண்கள் 11, 12 வயதிலேயே பூப்பெய்தி விடுகிறார்கள். இதற்கு இன்றைய காலக்கட்ட நவ நாகரீக உணவுப்பழக்கம், சமூகத்தில் பெண்களுக்கான சுதந்திரம், சத்துக்கள் இல்லாத ரசாயண மயமாகிவிட்ட உணவும், நொறுக்குத் தீனிகளும்தான் காரணம் என்றாலும் சில குறிப்பிட்ட மருத்துவ காரணமும் இதனைத் தூண்டுகிறது.


மனித மூளையானது விசித்திரமானது. ஹார்மோன்களின் கட்டுப்பாட்டில் வளர்ச்சி மாற்றத்தை, பாலுறுப்புகளின் வளர்ச்சி நிலையை மூளை அடக்கியே வைத்திருக்கும். பத்து வயதிற்கு மேல் ஹார்மோன்களின் திருவிளையாடலால் பெண் குழந்தைகள் பருவத்தை எய்துவார்கள். ஆனால் சில பெண் குழந்தைகளுக்கு என்ன காரணம் என்று கண்டறிய முடியாமலே ஹார்மோன்களின் ஆக்கிரமிப்பு அதிகமாகி பத்து வயதிற்குள் பூப்பெய்தி விட நேரிடலாம். பிட்யூட்டரி சுரப்பி கோளாறினாலும், தைராய்டு குறைபாடுகளினாலும்கூட இப்படி நிகழலாம்.


இப்படி மிக இளம் வயதில் பூப்பெய்தி விடுவதற்கு மக்யூன் ஆல்பிரைட் சின்ட்ரோம் என்கின்ற ஒரு வகை பாதிப்புத்தான் காரணம் என்று அண்மைக் கால மருத்துவ அறிவியல் கண்டுபிடித்துள்ளது. இது நோயா? இல்லை முன் கூட்டியே ஹார்மோன்கள் தங்கள் செயல்களை ஆரம்பித்துவிடுவதுதான் காரணமா? என தீவிரமாக மருத்துவ உலகம் ஆராய்ந்து வருகின்றது. மரபணுக்களின் பாதிப்பினால் கூட இப்படி நிகழலாம் என்கின்ற ஒரு கருத்தும் நிலவுகிறது.


சரி... கொஞ்சம் காலம் தள்ளி பெரிய மனுஷியாக ஆக வேண்டியவள் முன்கூட்டியே பருவம் எய்தி விட்டாள்... அவ்வளவுதான் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்தானே, இதற்கு போய் ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும் என்று சிலர் கேட்கலாம்.


இப்படி இயற்கைக்கு மாறாக மிக இளம் வயதிலேயே வயதுக்கு வரும் பெண்களுக்கு எலும்பில் உள்ள கால்சியத்தில் குறைபாடு ஏற்படலாம். இதனால் இவர்கள் பல இயற்கை உபத்திரவங்களுக்கு உள்ளாக நேரிடும். இத்தகைய பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு, அதிக ரத்தப்போக்கு, பிரசவ சமயத்தில் குறைபாடுகள், அரிதாக சில பெண்களுக்கு பாலியல் உறவில் கூட சிக்கல்கள் ஏற்படலாம். இவ்வாறு இளம் வயதில் பூப்பெய்துவிடுகிற பெண்கள் ஹார்மோன் மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்வது நல்லது. சுண்ணாம்பு சத்து நிறைந்த பால், முட்டை, மற்றும் காய்கறிகள், கனிகள், தானியங்கள் போன்றவற்றை இவர்கள் பருவ வயதில் நிறைய உட்கொள்ள வேண்டும். தாய் மிக இளம் வயதில் பூப்பெய்தி இருந்தால் அவர்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு பருவ வயதிற்கு முன்பாக மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.


by Dr.ஷர்மிளா

அழகு சிகிச்சை குறிப்புகள்...

கண் இமைகளுக்கு மஸ்காரா போடுவது இமைகளை அடர்த்தியாக்குமா?

சரிதான். மஸ்காரா என்பது இமைகளை அழகாக்கும்தான். ஆனால் அன்றன்று அதை அகற்றி விட வேண்டும். அப்படியே விட்டால் இமை முடிகள் உடைந்து, உதிர்ந்து போகும். தினசரி மஸ்காரா உபயோகிப்பதைத் தவிர்த்து, எப்போதேனும் அரிதாக, பார்ட்டி மற்றும் விசேஷங்களுக்குச் செல்கிற போது போடுவது நல்லது.


பவுண்டேஷன் அதிகம் உபயோகித்தால், முகத்திலுள்ள சுருக்கங்களை, கோடுகளை மறைக்கலாம்?

இரண்டு கோட் அதிகம் போட்டால் இப்படித்தான் முகச் சுருக்கங்களை மறைக்கலாம் என்று பலரும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு அதிகமாக பவுண்டேஷன் உபயோகிக்கிறீர்களோ, அத்தனையும் முகச் சுருக்கங்களின் உள்ளே போய் செட்டிலாகும். முகத்தில் நீங்கள் காட்டுகிற ஒவ்வொரு அசைவையும் அந்தக் கோடுகள் பிரதிபலிக்கும். வயதாக, ஆக மிக லைட்டான, கனமில்லாத பவுண்டேஷனையே உபயோகிக்க வேண்டும். அதுதான் கோடுகளை மறைத்துக் காட்டும்.

கண்களுக்குள் மை தீட்டிக் கொள்வது கண்களைப் பெரிதாகக் காட்டும்?

உண்மையில் கண்களைப் பெரிதாகக் காட்ட நினைப்பவர்கள் கண்களுக்குள் இப்படி மை தீட்டவே கூடாது. கண்ணின் கீழ்ப்பகுதியில் வெண்மையாக உள்ள இடத்தில் கருப்பு நிறத்தில் மை தீட்டினால் கண்களின் அளவு இன்னும் சிறுத்துதான் தெரியும். எனவே கண்களைப் பெரிதாகக் காட்டிக் கொள்ள விரும்புவோர் கண்களுக்கடியில் வெள்ளை நிறப் பென்சிலால் வரைந்து கொள்வதே சரி.

கன்னங்களில் அதிக பிளஷர் உபயோகிப்பது முகத்துக்குக் கூடுதல் அழகு?

பிளஷர் தடவிக் கொள்ளவென ஒரு கணக்கு உண்டு தெரியுமா? அதாவது கண்ணாடிக்கும், நீங்கள் நிற்கிற இடத்துக்கும் குறைந்தது 1.5 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டுமாம். ஆனால் பெரும்பாலான பெண்கள் கண்களைப் பறிக்கும் வெளிச்சத்தின் அடியில் கண்ணாடிக்கு அருகில் நின்றபடி தடவிக் கொள்வார்கள். அப்போது அது அசிங்கமாகத் தெரியாது. வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு பார்த்தால் கோமாளி மாதிரியே இருப்பார்கள். கல்யாண மேக்கப் மாதிரி ரொம்பவும் முக்கியமான மேக்கப்புகளில் தான் பிளஷர் அவசியம். மற்றபடி அது தேவையே இல்லை அப்படியே தேவைப்பட்டாலும் போதிய இடைவெளியில் நின்று கொண்டு, மிதமாகத் தடவிக் கொள்ள வேண்டும்.

உதடுகளுக்கு ஒரு நிறத்தில் அவுட்லைனும், வேறு நிறத்தில் லிப்ஸ்டிக்கும் உபயோகிப்பது உதடுகளைப் பெரிதாகக் காட்டும்?

உதடுகளைப் பெரிதாகக் காட்ட இது சரியான வழியில்லை. இப்படிச் செய்தால் உதடுகள் செயற்கையாகத் தெரியும். லிப்ஸ்டிக்கும், லிப்லைனரும் ஒரே நிறத்தில் இருந்தால்தான் உதடு களைப் பெரிதாகக் காட்டச் செய்ய முடியும்.

கண்களுக்கான ஐ ஷேடோவும் சரி, உதடுகளுக்கான லிப்ஸ்டிக்கும் சரி- பிங்க் நிறம்தான் அழகு?

ரோஜாப்பூ நிற சருமம் கொண்டவர்களுக்கு பிங்க் நிற ஐ ஷேடோவும், லிப்ஸ்டிக்கும் கொள்ளை அழகுதான். ஆனால் மாநிறமான, சுமாரான நிறம் கொண்டவர்களுக்கு அது செயற்கையாகவே தெரியும்.

மாலை நேரத்துக்கு டார்க் நிற பவுண்டேஷனே சிறந்தது?

பொதுவாகவே மேக்கப் செய்து கொள்கிற போது பலரும் முகத்துக்கு மட்டும் செய்வார்கள். கழுத்து, காதுகளைக் கூடக் கவனத்தில் கொள்ள மாட்டார்கள். அதுவும் மாலை நேர மேக்கப் என்று வரும் போது செயற்கை வெளிச்சத்தில் நன்றாகத் தெரிய வேண்டுமே என்ற எண்ணத்தில் கொஞ்சம் கூடுதலாகவும், டார்க் நிறத்திலும் பவுண்டேஷன் உபயோகிப்பார்கள். செயற்கை வெளிச்சத்தில் கழுத்திலிருந்து முகம் வரை ஒரு நிறத்திலும், அதற்குப் பிறகான சரும நிறம் வேறு நிறத்திலுமாக அசிங்கமாகத் தெரியும். இதைத் தவிர்க்க, தாடைப் பகுதியில் பவுண்டேஷனைத் தடவிப் பார்த்து விட்டு வெளிச்சத்தில் பார்த்து மிதமாகவே உபயோகிக்கலாம்.

30 வயதுக்கு மேலான பெண்கள், மேட் பினிஷ் ஐ ஷேடோவையே உபயோகிக்க வேண்டும்?

மேட் பினிஷ ஐட்டங்கள் பார்ப்பதற்கு ஒரு மாதிரி வறண்ட, உலர்ந்த தோற்றத்தைத் தரும். சுருக்கங்களும், கோடுகளும் ஆரம்பிக்கிற இந்த வயதில், இம்மாதிரி மேட் பினிஷ ஐ ஷேடோவும், லிப்ஸ்டிக்கும் செயற்கையாகத் தெரியும். லேசாக பளபளப்பு கொண்ட ஐட்டங்கள் இந்த வயதினருக்கு அழகாக இருக்கும்.

கருப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ்

கருப்பான பெண்களை நிறமாக்க பியூட்டி பார்லரில் செய்யப்படுகிற லேட்டஸ்ட் சிகிச்சைகள் என்னென்ன என்பதையும், அவர்கள் எப்படி மேக்கப் போட வேண்டும் என்பதையும் பற்றிச் சொல்கிறார் …தி விசிபிள் டிஃபரன்ஸ் பியூட்டி கிளினிக்கின் உரிமையாளர் வசுந்தரா.
  • அதிமதுரம் கலந்து தயாரிக்கப்படும் …ஸ்கின் லைட்டனிங் ஜெல் இப்போது கிடைக்கிறது. அதை முகத்தில் தடவி, அதற்கு மேல் கால்வானிக் சிகிச்சை தருகிறோம். நான்கைந்து முறைகள் செய்தாலே வியப்பான மாற்றத்தைக் காண முடிகிறது.

  • கருப்பான பெண்களுக்கான வரப்பிரசாதம் என்றே …ஒயிட்டனிங் பேஷியல்களைச் சொல்லலாம். பட்டுக்காகப் பயன்படும் மல்பரி, கோஜிக் அமிலம் என சருமத்தை நிறமாக்கக் கூடிய இயற்கைப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறவற்றால் இந்த பேஷியல் செய்யப்படுகிறது. கிளென்சிங்கில் தொடங்கி, மசாஜ், ஸ்கரப், பேக் என ஒவ்வொரு கட்டத்திலும் நிறத்தை அதிகரிக்கச் செய்கிற பொருட்கள் இதில் உண்டு.
    ‰ கிவி பழம், ஸ்ட்ராபெர்ரி மற்றும் ஆரஞ்சுப் பழங்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிற பொருட்களால் செய்யப்படுகிற …ஸ்கின் மிராக்கிள் சிகிச்சை கருப்பான பெண்களுக்கு ரொம்பவே லேட்டஸ்ட்.
    இவர்கள் எப்படி மேக்கப் போடலாம்?


  • கருப்பான பெண்கள் பளிச்செனக் காட்சியளித்தால் போதும் என நினைக்க வேண்டுமே தவிர, வெள்ளையாகத் தெரிய வேண்டும் என நினைக்கக் கூடாது.

  • அவர்களது சருமம் மஞ்சள், பிரவுன் அல்லது பிங்க் என எந்த மாதிரியான ஸ்கின் டோன் கொண்டது எனப் பார்த்து அதற்கேற்ற பவுண்டேஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பவுண்டேஷனை மணிக்கட்டில் தடவிப் பார்த்து அது சரியாகப் பொருந்துகிறதா எனத் தெரிந்து உபயோகிக்கலாம்.


  • ஐ ஷேடோ, லிப்ஸ்டிக் போன்றவை ரொம்பவும் வெளிர் நிறமாகவும் இல்லாமல், ரொம்பவும் டார்க் நிறமாகவும் இல்லாமல் மீடியம் ஷேடில் இருக்கட்டும். லிப்ஸ்டிக் போடுகிற நிறத்திலேயே ஐ ஷேடோவும் இருக்கட்டும்.


  • கருப்பான பெண்கள் வெள்ளை நிறப்பவுடர் உபயோகிப்பதைத் தவிர்த்து, லூஸ் பவுடர் உபயோகிக்கலாம்.


  • உடை அணிகிற விஷயத்தில் இவர்கள் அதிக அக்கறை காட்ட வேண்டும். பளீர் நிற உடைகள் அப்படியே முகத்தில் பிரதிபலிக்கும். அதே சமயம் டார்க் நிற உடைகளும் அப்படியே உடலின் நிறத்தோடு ஒன்றிப் போய் இன்னும் கருப்பாகக் காட்டும். வெள்ளை மற்றும் ரொம்பவும் வெளிர் நிறங்களைத் தவிர்த்து கிரீம், டார்க் பிங்க், ஆரஞ்சு, நீலம், பச்சை, மெஜந்தா பிங்க் போன்ற நிறங்களில் உடை அணியலாம்.


  • கருப்பாக இருக்கிறோமே என சோர்ந்து போயிருக்கும் பெண்களுக்கு ஒரு விஷயம். ஆரோக்கியமான சருமம் என்றால் அது கருத்த சருமம்தான். அதில் முதுமையும், சருமப் பிரச்சினைகளும் அத்தனை சீக்கிரம் வருவதில்லை.

கருப்பான பெண்ணா நீங்கள்..?

கருத்த சருமம் கொண்ட எல்லா பெண்களுக்கும் உள்ளூர ஒருவித தாழ்வு மனப்பான்மை கட்டாயம் இருக்கும். அவர்கள் பேரழகியாகவே இருந்தால் கூட அது இரண்டாம் பட்சம்தான். கருப்பான பெண்கள் நிறமாக மாற, அப்படிக் காட்டிக் கொள்ள என்னவெல்லாம் அழகு சிகிச்கைகள் உள்ளன....?


பியூட்டி பார்லர் போகாமல் வீட்டிலேயே இவர்கள் செய்து கொள்ளக்கூடிய சிகிச்சைகள் பற்றி விளக்குகிறார் …இந்தியன் இன்ஸ்டிட்யூஷன் ஆஃப் பியூட்டி தெரபியின் இயக்குனர் ஹசீனா சையத்.


பழ பேஷியல்

முகத்தை முதலில் காய்ச்சாத பாலால் துடைக்கவும். சிறிதளவு வெள்ளரிச்சாறு அல்லது ஸ்ட்ராபெர்ரி சாறு எடுத்து சில நிமிடங்கள் ப்ரீசரில் வைத்து, அதில் பஞ்சை நனைத்து முகத்தில் ஒற்றியெடுக்கவும். நன்கு கனிந்த பப்பாளியை மசித்து எடுத்துக் கொள்ளவும். அதை வைத்து முகத்துக்கு மென்மையாக மசாஜ் கொடுக்கவும். மசாஜ் செய்கிறபோது கைகளை ஆரஞ்சு சாற்றில் நனைத்துக் கொள்ளவும். கொஞ்சம் பப்பாளிக் கூழ், இரண்டு துளிகள் தேன், கொஞ்சம் பால் எல்லாம் சேர்த்து கடைசியாக முகத்துக்குப் பேக் போடவும்.

காய்கறி பேஷியல்

முதலில் சொன்ன மாதிரி பச்சைப் பாலால் முகத்தைத் துடைக்கவும். முட்டைக் கோஸை பச்சையாக மசித்து வைத்துக் கொள்ளவும். இது தவிர அதில் கொஞ்சம் சாறும் எடுத்து வைத்துக் கொள்ளவும். முட்டைக் கோஸ் மசித்ததைக் கொண்டு முகத்துக்கு மசாஜ் கொடுக்கவும். இடையிடையே முட்டைக்கோஸ் சாறை விரல்களில் தொட்டுக் கொள்ளவும். பதினைந்து நிமிடங்கள் கழித்து ஈரமான பஞ்சால் முகத்தைத் துடைத்து விட்டு, முட்டைக்கோஸ் விழுது, பால் மற்றும் தேன் கலந்த பேக் போடவும்.

மேற்சொன்ன இரண்டு பேஷியல்களையும் பதினைந்து நாட்கள் இடைவெளியில் செய்து கொள்ளலாம். பருக்கள் இல்லாதவர்கள் என்றால் பத்து நாட்களுக்கொரு முறையும் செய்து கொள்ளலாம்.

சிறிதளவு தேன், சிறிதளவு பாலேடு, சிறிது வெள்ளரிச்சாறு, கொஞ்சம் கடலை மாவு எல்லாவற்றையும் நன்றாகக் குழைத்து முகத்தில் தடவி பதினைந்து நிமிடங்கள் அப்படியே விட்டு பிறகு கழுவலாம்.

நன்கு அடித்த பூவன் வாழைப் பழத்துடன் தேன், ஆரஞ்சு சாறு, பயத்தம் மாவு கலந்து முகத்தில் தடவி, ஊற விட்டுக் கழுவி வர, நிறம் கூடுவதைக் காணலாம்.

குங்குமப் பூ சாப்பிட்டால் நிறம் கூடுமா என்பது பலரது சந்தேகம். அதை அப்படியே பாலில் கலந்து குடிப்பது பலன் தராது. சூடான பாலில் குங்குமப் பூவைப் போட்டு கால் மணி நேரம் அப்படியே ஊறவிட வேண்டும். அது வெதுவெதுப்பாக மாறி, மஞ்சள் நிறத்துக்கு வரும் போது குடிப்பது தான் பலன் தரும்.

ஆயுர்வேதக் கடைகளில் சுத்தமான குங்குமாதி தைலம் கிடைக்கும். அதை வாங்கி கொஞ்சம் பாலுடன் கலந்து வாரம் ஒரு முறை முகத்துக்கு மசாஜ் செய்து வந்தால் நிறம் நிச்சயம் கூடும். மசாஜுக்குப் பிறகு அரைத்த சந்தனத்தில் பால் கலந்து பேக் போட வேண்டியது முக்கியம்.
வெயிலில் செல்கிறபோது எஸ்.பி.எஃப் 20 முதல் 30 வரை உள்ள சன் ஸ்கிரீன் உபயோகிப்பது, டூ வீலரில் செல்கிற போது கைகளுக்கு கிளவுஸ் அணிவது, நிறைய பச்சைக் காய்கறிகள், பழங்கள், இளநீர், பால், தயிர் சாப்பிடுவது போன்றவையும் நிறத்தை மேம்படுத்த நினைப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.

குழந்தை இப்போ வேண்டாமா..?

குழந்தை இப்போ வேண்டாமா..?

கர்ப்பத்தைத் தடை செய்வதாகச் சொல்லப்படுகிற மாத்திரைகள் ஈஸ்ட்ரோஜென் மற்றும் பிராஜஸ்ட்ரோன் என இரண்டு விதமான பெண் ஹார்மோன்களை உள்ளடக்கியது. இவை இரண்டும் வேறு வேறு விகிதங்களில் கலக்கப்பட்டு, வெவ்வேறு பெயர்களில் கருத்தடை மாத்திரைகளாக விற்கப்படுகின்றன.

இந்த ஹார்மோன்கள் என்ன செய்யும்?

உங்கள் உடலில் மாதந்தோறும் உருவாகும் சினை முட்டையை சினைக்க விடாமல் தடுக்கும். அதன் விளைவாக உங்களின் கர்ப்பம் தடைப்படும். இந்த மாத்திரை கருத்தரிப்பதிலிருந்துதான் உங்களைக் காப்பாற்றுமே தவிர, பால் வினை நோய்களிலிருந்து ஒரு சதவிகிதம் கூடக் காப்பாற்றாது. இம்மாத்திரைகளை நாள் தவறாமல் எடுத்துக் கொள்பவர்களுக்குக் கட்டாயம் நூறு சதவிகிதம் பலன் நிச்சயம். ஆனால் நாள் தவறி எடுத்துக் கொண்டாலோ, ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு நேரத்தில் உட்கொண்டாலோ பலன் கிடைக்காமல் போகலாம். இன்று என்ன தேதி, என்ன கிழமை என்பதையே மறந்து போகிற அளவுக்கு மறதி மன்னியா நீங்கள்? கருத்தடை மாத்திரை சாப்பிட நீங்கள் தினசரி அலாரம் வைத்துக் கொண்டால்தான் அதன் பலனை அனுபவிக்க முடியும்.

பக்க விளைவுகளை உண்டாக்குமா கருத்தடை மாத்திரை?

நீண்ட நாட்களுக்குக் கர்ப்பத்தைத் தள்ளிப்போட நினைக்கிற பெண்களுக்கு இம்மாத்திரைகள் சரியான சாய்ஸ் என்பது மகப்பேறு மருத்துவர்களின் பரவலான அபிப்ராயம். ஆனாலும் இது உண்டாக்குகிற பக்க விளைவுகளும் கருத்தில் கொள்ளப்பட வேண்டுமே?

கருத்தடை மாத்திரை உட்கொள்கிற பெண்கள் தவறான ஆண்களின் தொடர்பில் சிக்க வாய்ப்புகள் அதிகம் என்கிறது ஒரு விசித்திர ஆராய்ச்சி. கருத்தரிக்கப் போவதில்லை என்கிற தைரியத்தில் வாழ்க்கைத் துணை தேவை என்பதை மீறி, செக்ஸ் உறவுக்குத் துணை தேவை என்கிற எண்ணமே பிரதானமாக இருக்கும் என்பதால் மாத்திரை உட்கொள்கிற பெண்களுக்குத் தகாத உறவு உண்டாக வாய்ப்புகள் அதிகமாம். இது எப்படி இருக்கு?

ஏற்கனவே உடலெங்கும் தேவையற்ற ரோம வளர்ச்சியால் பாதிக்கப்பட்டிருப்பவரா நீங்கள்? அப்படியானால் இந்த மாத்திரைகளை உட்கொள்வதால் ரோம வளர்ச்சி மேலும் அதிகரிக்கலாம். எனவே இப்படிப்பட்ட பெண்கள் மருத்துவரின் ஆலோசனைக்கேற்ப வேறு மாத்திரைகளை உட்கொள்ளலாம்.

கருத்தடை மாத்திரைகள் உட்கொள்வதால் வைட்டமின் சி, பி 12 மற்றும் துத்தநாகச் சத்துக்கள் உடலிலிருந்து உறிஞ்சப்பட்டு விடுமாம். அவற்றை ஈடுகட்ட தினசரி உணவில் நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்கொள்ள வேண்டியிருக்கும். அப்படி முடியாதவர்கள், வைட்டமின் மாத்திரைகளையாவது கட்டாயம் உட்கொள்ள வேண்டும்.

செக்ஸ் உறவு வேண்டும். ஆனால் கர்ப்பம் கூடாது என்பதற்காகத்தானே இந்த மாத்திரைகளே* ஆனால் பல பெண்களுக்கு இம்மாத்திரைகள் சாப்பிடுவதால் செக்ஸ் உறவில் நாட்டம் குறைகிறதாம். அப்படி உணர்கிற பெண்கள், ஈஸ்ட்ரோஜென் அதிகமுள்ள மாத்திரையாகப் பார்த்து சாப்பிடுவது நல்லது.
பைசா பெறாத விஷயத்துக்கெல்லாம் எரிச்சல், அர்த்தமில்லாமல் கோபம் போன்றவை கூட இம்மாத்திரைகளின் பக்க விளைவுகளாக இருக்கலாம். கண் பார்வையில் கோளாறு உண்டாவதும் கூட இம் மாத்திரை உட்கொள்கிற சிலர் சந்திக்கிற பிரச்சினையே*

மாத்திரையை எப்படித் தேர்ந்தெடுப்பது?

உங்கள் உடலில் உள்ள கோளாறுகளை மருத்துவரிடம் மறைக்காமல் சொல்ல வேண்டும். அவர் அவற்றுக்கேற்ப சரியான மாத்திரையை உங்களுக்குப் பரிந்துரைப்பார். மாத்திரை உட்கொள்ள ஆரம்பித்த முதல் சில மாதங்களில் சில பக்க விளைவுகள் இருப்பது சகஜம். பிறகு அது மறைய வேண்டும். அவை தொடர்கிற பட்சத்தில் குறைந்த டோஸ் கொண்ட மருந்துகளை உட்கொள்ளலாம்.

கருத்தடை மாத்திரை சாப்பிடுகிறவர்களுக்கு உடல் எடை பெருத்து விடும் என்பது தவறான நம்பிக்கை. இது பசியைத் தூண்டும் என்பதால் கொழுப்பு தவிர்த்து, சரி விகித உணவை உட்கொள்ள வேண்டியது மிக முக்கியம்.
கருத்தடை மாத்திரை உட்கொள்கிற பெண்களுக்கு இடுப்பெலும்பு தொடர்பான தொற்று நோய் வர வாய்ப்பில்லையாம்.

சினைப்பையில் புற்றுநோய் உண்டாவதற்கான அபாயத்தையும் இம்மாத்திரைகள் குறைக்கிறதாம். மாத்திரைகளை நிறுத்திய பிறகும் பல வருடங்கள் இந்தப் பாதுகாப்பு தொடருமாம்.


by Dr.ஷர்மிளா

பெண்ணின் அந்தரங்க உறுப்பு.....

குழந்தை பிறப்பதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பே அது பெண்ணாக இருக்கிற பட்சத்தில் பிறப்புறுப்பு முழு உருவம் பெறுகிறதாம். கருத்தரித்த பத்தாவது வாரத்தில், குழந்தை ஆணா, பெண்ணா என்பது தீர்மானமாகி, ஆணாக இருக்கிற பட்சத்தில் ஆணுறுப்பும், பெண் என்றால் பிறப்புறுப்பும் வளர ஆரம்பிக்குமாம்.

முதல் முறை செக்ஸ் உறவின் போது பிறப்புறுப்பில் உள்ள கன்னித்திரை கிழிய வேண்டுமா, இரத்தப் போக்கு கட்டாயமா என்பது பலருக்கும் மண்டையைக் குடைகிற கேள்வி. பெண்ணின் நடத்தையை சந்தேகிக்க வைக்கிற அளவுக்கு இது தீவிரமானதாகவும் இருக்கிறது. செக்ஸ் உறவின் மூலம் மட்டும்தான் இந்தக் கன்னித்திரை கிழிய வேண்டும் என்பதில்லை. விளையாட்டு, நடனம், நீச்சல், உடற்பயிற்சி எனப் பல விஷயங்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம். அபூர்வமாக சில பெண்கள் இந்த கன்னித்திரை இல்லாமல் பிறப்பதும் உண்டு. இன்னும் சிலருக்கு அந்த சவ்வு மிகவும் தடித்திருக்கும். திருமணத்துக்கு முன்பு அறுவை மூலம் அது அகற்றப்பட்டால் தான் அவர்களால் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியும்.


பிறப்புறுப்புக் கசிவு என்பது சகஜமான விஷயம். செக்ஸ் உறவின் போது இந்தக் கசிவு இருக்கும். சில பெண்களுக்கு இந்த அளவு அதிக மாகவும், சிலருக்குக் குறைவாகவும் இருக்கும். இரண்டுமே சாதாரணமானவைதான்.


பிறப்புறுப்பு என்பது அறுவறுப்பான, அசிங்கமான உறுப்பு என்கிற அபிப்ராயம் உள்ளவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. ஒவ்வொரு பெண்ணின் பிறப்புறுப்பிலும் சுமார் பதினைந்து விதமான பாக்டீரியா கிருமிகள் குடியிருக்குமாம். அத்தனையும் நல்ல பாக்டீரியா. அதனால் கெட்ட கிருமிகள் அத்தனை லேசில் அங்கே நுழைய முடியாதாம்.


உடலின் மற்ற பகுதிகளைப் போலவே பிறப்புறுப்புக்கும் காற்றோட்டம் அவசியம். அப்போதுதான் அந்தப் பகுதி சுவாசிக்க முடியுமாம். அதற்கு இடம் கொடுக்காமல் எப்போதும் இறுக்கமான உள்ளாடை மற்றும் ஜீன்ஸ் அணிகிறவர்களுக்கு அடிக்கடி பிறப்புறுப்புத் தொற்று வர வாய்ப்புண்டாம்.


பல பெண்களையும் தர்ம சங் கடத்துக்கு உள்ளாக்கும் விஷயம் அந்தரங்க உறுப்பில் உண்டாகும் அரிப்பு. அந்த இடத்தின் வறட்சி, இறுக்கமான உடை போன்றவை இதற்குக் காரணமாக இருக்கலாம். அரிப்பு ஒரு நாளைக் கடந்து தொடர்ந்தாலோ, பிறப்புறுப்பின் உள்ளே அரிப்பிருந்தாலோ, அது ஈஸ்ட் தொற்றாகவோ, பால்வினை நோயின் அறிகுறியாகவோ இருக்கக் கூடும்.


மாதம் ஒரு முறை மார்பக சுய பரிசோதனை வலியுறுத்தப்படுகிற மாதிரியே, பிறப்புறுப்பு சுய பரிசோதனையும் அவசியம். அந்த இடத்தில் காணப்படுகிற சிறிய கொப்புளங்கள், பருக்கள் போன்றவை அலட்சியப்படுத்தப்படலாம். ஆனால் வேறு ஏதேனும் வித்தி யாசங்களை உணர்கிற பட்சத்தில் அது உடனடியாக மருத்துவப் பரி சோதனைக்குட்படுத்தப் பட வேண்டும்.


ஒரு பென்சில் நுழையக் கூடிய அளவே உள்ள பிறப்புறுப்பானது, பிரசவத்தின் போது ஒரு குழந்தையையே வெளியேற்றும் அளவுக்குப் பன்மடங்கு பெரிதாக விரிந்து கொடுக்கும். அதற்காகக் கவலை வேண்டாம். குழந்தை பிறந்த ஆறு மாதங்களில் அது மீண்டும் அதன் பழைய அளவுக்கே சுருங்கி விடும்.


பிறப்புறுப்பிலிருந்து வாடை வீசுவது ரொம்பவே சாதாரணமான விஷயம். அந்த உறுப்பு ஆரோக்கியமாக இயங்குகிறது என்பதற்கான அடையாளங்களில் அதுவும் ஒன்று. இது தவிர நீங்கள் உட்கொள்கிற உணவின் தன்மை, அதாவது மசாலா, பூண்டு மாதிரியான உணவுகள், மாத விலக்கு சுழற்சியின் தன்மை, செக்ஸ் உறவுக்குப் பிறகான சுத்தம் போன்றவற்றைப் பொறுத்து அந்த வாடை அதிகரிக்கலாம்.


பிறப்புறுப்பிலிருந்து வீசும் துர்வாடையை மறைக்கப் பல பெண்கள் அங்கே சென்ட் உபயோகிப்பதுண்டு. சென்ட், வாசனை சோப், டிஷ்யூ மாதிரியானவை அந்தப் பகுதியை பாதிக்கும். வெறும் தண்ணீரும், மிதமான சோப்பும் மட்டுமே பிறப்புறுப்பு சுத்தத்துக்குப் போதும்.


குழந்தை பிறந்த பிறகு பிறப்புறுப்பின் இறுக்கம் தளர்ந்துவிட்டதாகவும்,அதன் விளைவாக தம்பதியருக்கிடையேயான நெருக்கம் குறைந்து விட்டதாகவும் பல பெண்கள் புலம்புவதுண்டு, கெகெல் எனப்படும்பிரத்யேகப் பயிற்சியின் மூலம் அந்த இடத்தை மீண்டும் டைட்டாக்கலாம். சிறுநீர் கழிக்கிற போது அதைப் பாதியிலேயே அடக்கிக் கொள்கிற மாதிரியான பயிற்சிதான் இது. மருத்துவரின் ஆலோச னையின் பேரில் சரியாகச் செய்கிற பட்சத்தில் கட்டாயம் பலனளிக்குமாம்.


சினைமுட்டை சினைக்கிற காலக் கட்டத்தில் பெண்களுக்கு அந்தரங்க உறுப்பின் கசிவு சற்றே அதிகமாக இருக்கும். அதாவது ஒன்று முதல் இரண்டு டீஸ்பூன் வரை இருக்கும். இறந்த செல்களின் வெளியேற்றம்தான் இந்தக் கசிவு. மற்ற நாட்களில் இந்தக் கசிவு ஒரு நாளைக்கு அரை டீஸ்பூன் அளவாகக் குறைந்து விடும்.


அபூர்வமாக சில பெண்களுக்கு பிறப்புறுப்பின் வழியே ஏதேனும் பொருட்கள் உள்ளே சென்று விடக் கூடும். அது கர்ப்பப்பையில் சென்று மிதக்காது. வெறுமனே விரல்களை விட்டு அதை எடுக்க முடியுமா எனப்பார்க்க வேண்டும். அது முடியாத பட்சத்தில் மருத்துவரை அணுகுவதே பாதுகாப்பானது.


ஐயாயிரத்தில் ஒரு பெண் குழந்தை வீதம் பிறப்புறுப்பும், கர்ப்பப்பையும் இல்லாமல் பிறப்பதுண்டு. ஆனாலும் செயற்கையாக பிறப்புறுப்பை வைக்கிற அளவுக்கு இன்றைய நவீன மருத்துவத்தில் வசதிகள் பெருகிவிட்டதால் கவலை வேண்டாம். குழந்தை பெற வாய்ப்பில்லாமல் போனாலும், அவர்களது செக்ஸ் வாழ்க்கை பாதிக்கப்படாமலிருக்க இப்படிப்பட்ட சிகிச்சைகள் வரப்பிரசாதம்.

by Dr.ஷர்மிளா

பெண்களின் உடல் ஒரு புதிர்

1 முதல் 5-ம் நாள் வரை

மாதவிலக்கு சுழற்சியின் ஆரம்ப நாட்களான இவற்றில் பெண்ணின் உடலில் ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைவாக இருக்கும். அதன் விளைவாக அவள் அமைதியின்றியும், தூக்கமின்றியும், டென்ஷனுடனும் காணப்படுவாள். இந்த நாட்களில் கருத்தரிக்கும் வாய்ப்பு வெறும் இரண்டே சதவிகிதம்தான் என்பதால் கவலையின்றி உறவு கொள்ளலாம். ஆனாலும் பெரும்பாலும் இந்நாட்களில் பெண் அதற்குத் தயாராக இருப்பதில்லை. செக்ஸுக்கு அவளைக் கட்டாயப்படுத்தாமல், வேறு வேலைகளில் பிசியாக வைத்திருப்பது நல்லது.

6 முதல் 9-ம் நாள் வரை

பெண் உடலளவிலும், மனத்தளவிலும் ரொம்பவே உற்சாகமாக உணரும் நாட்கள் இவை. எதைப் பற்றிப் பேசினாலும் டென்ஷனாக மாட்டாள். அவளது உடல் செக்ஸ் உறவுக்குத் தயாராக இருக்கும்.

10 முதல் 15-ம் நாள் வரை

ஈஸ்ட்ரோஜென் சுரப்பு அதிகமாக இருக்கும் நாட்கள் இவை. எனவே இந்நாட்களில் செக்ஸ் உணர்வுகள் அவளுக்கு அதிகமிருக்கும். மற்ற நாட்களில் செக்ஸ் உறவின் போது தேவைப்படுகிற முன் விளையாட்டுக்கள் இந்நாட்களில் அதிகம் தேவையிருக்காது. கணவனின் கிசுகிசுப்புக் குரலுக்கும், லேசான ஸ்பரிசத்திலுமே அவளது உடல் உடனடியாக ஒத்துழைக்கும்.

15-ம் நாள்

பெண்ணின் செக்ஸ் உணர்வுகள் உச்சத்தில் இருக்கும் நாளாம் இது. இந்த நாள் அவள் கருத்தரிக்கவும் ஏற்ற மிகச் சரியான நாளாம். இந்நாளில் பெரும்பாலும் தன் கணவர் தன்னுடனேயே இருக்க வேண்டும் எனப் பெண் விரும்புவாள். மற்ற நாட்களில் சாத்தியப்படாத உறவின் போதான உச்சக்கட்டம், இந்நாளில் இரண்டு, மூன்று முறை கூடக் கிட்டுமாம்.

16 முதல் 23-ம் நாள் வரை

ஈஸ்ட்ரோஜென் மீண்டும் கொஞ்சம் குறைய ஆரம்பிக்கிற காலமிது. இந்நாட்களில் பெண்ணுக்குள் ஆண்மை உணர்வு கொஞ்சம் தலை தூக்கியிருக்குமாம். கணவனின் வழக்கமான ஆதிக்கத்தை உறவின் போது இந்நாட்களில் பெண் விரும்புவதில்லை என்கின்றன ஆராய்ச்சிகள். பிராஜஸ்டரோன் என்கிற ஹார்மோன் சுரப்பு அதிகமாக இருக்கும். எடுத்ததற் கெல்லாம் எரிச்சலடைவது, படபடப்பாவது என பெண்ணின் மனநிலை வேறுமாதிரி இருக்கும். தன் தோற்றம் எப்படியிருக்கிறது, மற்றவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்கிற கவலை அதிகமிருக்கும். குழந்தைகளிடமும் கோபப்படுவாள். இந்நாட்களில் மனைவியுடன் பிக்னிக் செல்வது, பேட்மின்ட்டன் மாதிரியான விளையாட்டுக்களில் ஈடுபடுவது அல்லது அவளை பிசியாக வைத்திருப்பது போன்றவை ஏற்றதாக இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். செக்ஸ் விஷயத்தைப் பொறுத்தவரை, அது அவளது விருப்பம். இந்நாட்களில் செக்ஸ் ஆர்வம் என்பது பெண்ணுக்குப் பெண் வேறுபடும் என்பதால், அதை அவளது விருப்பத்துக்கே விட்டுவிடுவது நல்லது. கட்டாயப்படுத்துவது கூடாது.

27 மற்றும் 28-ம் நாட்கள்

அடுத்த மாதவிலக்குக்குத் தயாராகும் நாட்கள் இவை. அவளது உடலில் ஈஸ்ட்ரோஜென் மற்றும் பிராஜஸ்ட்ரோன் என இரண்டு ஹார்மோன்களுமே குறைந்து காணப்படும். ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைந்து காணப்படுவதால், சாக்லேட் மாதிரியான கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்ணும் ஆவல் அவளுக்கு அதிகமிருக்கும். இம்மாதிரியான உணவுகள் அவளது மனநிலையை ஓரளவுக்கு சரியாக்கும் என்றாலும் அதன் விளைவாக அவளது உடல் எடை எக்குத்தப்பாக எகிறுவதும் இந்நாட்களில்தான். வெளியிடங்களுக்குச் செல்லவும், வெளியே சாப்பிடவும் இந்நாட்களில் விருப்பம் அதிகமிருக்கும் என்பதால் கணவர்கள் அதற்கு ஆவன செய்யலாம். இதற்குப் பிரதிபலன் பட்டியலின்படி பார்த்தால் பதினைந்தாம் நாள் கணவனுக்குத் திரும்பக் கிடைக்கும்.


by Dr.ஷர்மிளா

Wednesday, June 15, 2005

Dr.ஷர்மிளா-வின் ஆலோசனை நேரம்.

நான் ஒரு கல்லூரி மாணவி. என் மார்புப் பகுதியில் கட்டிகள் மாதிரி இருக்கிறது. காம்புகள் உள் நோக்கி இருக்கின்றன. புற்று நோயாக இருக்குமோ என பயப்படுகிறேன். வீட்டில் சொல்லவும் பயமாக இருக்கிறது. மார்பகப் புற்று நோய்க்கு எங்கே சிகிச்சை அளிக்கிறார்கள்? எவ்வளவு செலவாகும்? - பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.

தாமதிக்காமல் முதலில் மருத்துவரை அணுகுங்கள். அது புற்று நோய்தானா அல்லது வெறும் நீர்க் கட்டிகளா எனப்பாருங்கள். நீர்க் கட்டிகளாக இருந்தால், அவற்றை அகற்றுவது சுலபம். புற்றுநோய் என நீங்கள் சந்தேகப்படும் பட்சத்தில் உடனடியாக வீட்டில் விஷயத்தைச் சொல்லி சிகிச்சை மேற்கொள்ளுங்கள். தாமதித்தால், அது பரவி, மார்பகங்களையே அகற்றும் நிலை ஏற்படலாம். மகப்பேறு மருத்துவரை முதலில் போய் பாருங்கள். எல்லா மருத்துவமனைகளிலும் இன்று இதற்கான சிறப்பு மருத்துவர்கள் இருக்கிறார்கள்.

என் வயது 30. உறவு குறித்து எனக்கு நிறைய சந்தேகங்கள் உள்ளன. என் கணவர் ஆபாச ஆங்கிலப் படங்களை டி.வியில் போட்டுக் காட்டி அதன்படி உறவு கொள்ள என்னையும் வற்புறுத்துகிறார். அதெல்லாம் அறுவருப்பானதில்லையா? உடல்நலத்தைப் பாதிக்காதா? நான் கர்ப்பமாக இருக்கிறேன். கர்ப்ப காலத்தில் எந்தெந்த மாதங்களில் உறவு கொள்ளலாம்? செக்ஸ் உணர்வு அதிகரிக்க எப்படிப்பட்ட உணவுகள் உட்கொள்ள வேண்டும்? - வ. குயிலி, தூத்துக்குடி.

உறவு அலுத்துப் போகாமலும், நெருக்கம் அதிகரிக்கவும் உங்கள் கணவரை மாதிரி செக்ஸில் புதுமைகளைக் கையாள்பவர்கள் உண்டு. அதில் உங்கள் இருவருக்கும் விருப்பம் இருக்கிற பட்சத்தில் தவறேதுமில்லை. உடல்நலம் பாதிக்கப்பட வாய்ப்பில்லை. அதற்கு உடன்படுவதும், மறுப்பதும் உங்கள் தனிப்பட்ட விருப்பம். கர்ப்பம் தரித்த முதல் மூன்று மற்றும் ஏழாவது மாதம் முதல் பிரசவம் வரை உறவைத் தவிர்ப்பது பாதுகாப்பானது. இடைப்பட்ட மாதங்களிலும் பக்க வாட்டு, பின் பக்க நிலைகளில் வயிற்றுக்கு அதிக அழுத்தம் கொடுக்காத போஸ்களில் உறவு கொள்வதே பாதுகாப்பு. உடலுறவு என்பது மனம் சம்பந்தப்பட்ட விஷயம். எப்படிப்பட்ட ஆரோக்கியமான உணவும் ஆரோக்கியமான செக்ஸுக்கு உதவும். அதிகக் கலோரிகள் உள்ளவற்றைத் தவிர்க்கவும். மனம் ஆரோக்கியமாக இருந்தால், உறவும் நன்றாக இருக்கும்.

என் வயது 38. கர்ப்பப்பை அறுவை செய்து மூன்று மாதங்கள் ஆகிறது. லேசாகத் தொட்டாலே வயிறு வலிக்கிறது. வெள்ளையாக சீழ் போலக் கசிகிறது. நான் பஞ்சாலையில் பணிபுரிகிறேன். மீண்டும் வேலைக்குப் போகலாமா? இந்த அறுவைக்குப் பிறகு உடல் பலவீனமாகிவிடும் என்பதும், எடை ஏறும் என்பதும் உண்மையா? - ராஜி, பழனி.

கர்ப்பப்பை அறுவையால் உடல் பலவீனமாகாது. நீங்கள் குறிப்பிட்டிருக்கிற அறிகுறிகளைப் பார்த்தால் தையல் போட்ட இடத்தில் இன்பெக்ஷன் ஆகியிருக்குமோ எனத் தோன்றுகிறது. அதனால்கூட வயிற்று வலி இருக்கலாம். பரிசோதனை மேற்கொண்டு, சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த அறுவை சிகிச்சைக்கும், உடல் எடை ஏறுவதற்கும்கூட எந்தத் தொடர்புமில்லை. அது உங்கள் உடல்வாகைப் பொறுத்தது. நடைப்பயிற்சி நல்ல தீர்வு தரும். நீங்கள் இரும்புச்சத்து அதிகமுள்ள உணவுகள், கீரை, வைட்டமின் அதிகமுள்ள உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு ஆஸ்துமா மாதிரியான சுவாசக் கோளாறுகள் இல்லாத பட்சத்தில் நீங்கள் வேலையைத் தொடர்வதில் பிரச்சினை இருக்காது.

என் வயது 28. மார்பகங்கள் சிறியதாக இருப்பதால் கணவர் வெறுக்கிறார். மற்ற பெண்களுடன் சகவாசம் வைத்திருக்கிறார். மார்பகங்களைப் பெரிதாக்க ஏதேனும் மருந்தோ, சிகிச்சையோ இருந்தால் சொல்லுங்கள். வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொடுங்கள். - நிர்மலா தேவி, ரத்தினபுரி.

மார்பகங்களின் அளவு என்பது பரம்பரை வாகு, உடலமைப்பு போன்ற பல விஷயங்களைப் பொறுத்தது. மார்பகங்கள் என்பவை வியர்வை சுரப்பிகள் மாதிரி ஒரு வகை சுரப்பிகள் என்பதை உங்கள் கணவரிடம் சொல்லுங்கள். சரியான அளவுள்ள பிரா, உடற்பயிற்சி போன்ற சில விஷயங்கள் உங்கள் பிரச்சினைக்கு உதவும். மார்பகங்களைப் பெரிதாக்குவதாகச் சொல்லப்படும் மாத்திரைகள், மருந்துகள் போன்றவை பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். அவையெல்லாம் ஆபத்தானவை. கணவரிடம் பொறுமையாகப் பேசிப் புரிய வையுங்கள்.

என் வயது 25. இன்னும் திருமணமாகவில்லை. பிறந்தது முதல் நான் ஒரு கிட்னியுடன்தான் வாழ்கிறேன். அதனால் மாதவிலக்குப் பிரச்சினைகள், கை, கால் வீக்கம், வெள்ளைப்படுதல் போன்றவை ஏற்படுகின்றன. ஒரு கிட்னியுடன் உள்ள நான் கல்யாணம் பண்ணலாமா? உடலுறவிலோ, கர்ப்பம் தரிப்பதிலோ பாதிப்பிருக்குமா? பிறக்கப்போகும் குழந்தையும் ஒரு கிட்னியுடன் பிறக்க வாய்ப்புண்டா? - எஸ்.பிரியா, திருச்சி.

நீங்கள் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்றில்லை. உங்களை ஏற்றுக் கொள்ளும் நல்ல கணவர் கிடைத்தால் தாராளமாகச் செய்து கொள்ளலாம். ஒரு கிட்னியுடன் இருந்தாலும், ஆரோக்கியமாக இருக்கிறீர்களா என்பது தான் முக்கியம். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மற்ற பிரச்சினைகளுக்கு சரியான சிகிச்சைகளின் மூலம் தீர்வு காணலாம். ஒரு கிட்னியுடன் இருப்பதால் உங்கள் தாம்பத்திய வாழ்க்கையிலோ, கர்ப்பம் தரிப்பதிலோ பாதிப்பிருக்காது. ஆனால் உங்களுக்குப் பிறக்கும் குழந்தையும் ஒரு கிட்னியுடன் பிறக்க ஐம்பது சதவிகிதம் வாய்ப்புகள் உண்டு.

என் வயது 18. பூப்பெய்தி நான்கு வருடங்கள் ஆகிறது. என் மார்பகங்களில் காம்புகள் உள்ளே இழுத்த படி உள்ளன. நாளுக்கு நாள் மார்பகங்கள் சிறுத்துக் கொண்டே போகிறது. தீர்வு சொல்வீர்களா? -சுகன்யா, கோவை.

இது இன்வர்ட்டட் நிப்பிள்ஸ் எனச்சொல்லக் கூடிய பிரச்சினையாக இருக்கலாம். அப்படியிருப்பின் நீங்கள் கல்யாணமாகி, கர்ப்பம் தரிக்கும்போது மார்பகங்கள் பெரிதாகிற சமயத்தில் இந்தப் பிரச்சினை தானாகச் சரியாகும். மற்றபடி மார்பகங்களில் ஏதேனும் வீக்கம் இருக்கின்றனவா எனப் பாருங்கள். கட்டிகள் ஏதேனும் இருக்கின்றனவா எனத்தெரிய வேண்டும். நல்ல மகப்பேறு மருத்து வரை நேரில் கலந்தாலோசியுங்கள். வலி இருந்தாலும் உடனடி மருத்துவப் பரிசோதனை அவசியம். பிரசவத்துக்குப்பிறகு, குழந்தை தாய்ப்பால் குடிக்கிறபோது சரியாகும். கவலை வேண்டாம்.

என் வயது 14. வயதுக்கு வந்து 2 ஆண்டுகளாகிறது. மார்பகங்கள் பெருத்துத் தொங்கிக் காணப்படுகின்றன. என்ன தீர்வு? - பெயர், ஊர் சொல்ல விரும்பாத வாசகி.

உடற்பயிற்சி ஒன்றுதான் ஒரே தீர்வு. மார்பகங்களில் உள்ளவை வெறும் கொழுப்புத் திசுக்கள். மார்பகக் கீழ் தசைகளுக்கான பயிற்சிகளைச் செய்தால் ஓரளவு சரியாகும். சரியான அளவுள்ள, பட்டை வைத்த பிரா அணிவதும் அவசியம். அளவைக் குறைக்கிற சிகிச்சைகள் அறிவுறுத்தத் தக்கவையல்ல.

என் வயது 21. கணவருக்கு 28. திருமணத்தன்றே தலைவலி ஆரம்பித்து விட்டது. பத்து வருடங்களாக சுய இன்பப் பழக்கம் இருந்ததால் என் கணவரால் முதலிரவன்றே உறவில் ஈடுபட முடியவில்லை. இன உறுப்பில் வலி இருக்கிறது என்கிறார். எனக்கோ செக்ஸ் ஆசை அதிகமாக இருக்கிறது. நான் அவரை விவாகரத்து செய்து விடலாமா? அல்லது அவரைக் குணப்படுத்த முடியுமா? - பெயர் வெளியிட விரும்பாத நாகர்கோயில் வாசகி.

கல்யாணச் சடங்குகளாலும், அதனால் ஏற்படுகிற களைப்பாலும் பெரும்பாலான தம்பதியருக்கு முதலிரவு முழுமையான இரவாக அமைவதில்லை. கல்யாணத்தன்றே உடல் சங்கமம் நடந்தாக வேண்டும் என்றில்லை. உடலும், உள்ளமும் சகஜ நிலைக்குத் திரும்பிய பிறகு உறவில் ஈடுபடலாம். உங்கள் விஷயத்திலும் அப்படி நிகழ்ந்திருக்கலாம். கணவரின் சுய இன்பப் பழக்கத்துக்கும், இதற்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை. மனம்தான் காரணம். தன் மனைவியை திருப்திப்படுத்த முடியுமா, ஆண்மையை நிரூபிக்க முடியுமா என்கிற பயத்தால்கூட உங்கள் கணவர் உறவைத் தவிர்க்கலாம். அவருக்குத்தைரியம் சொல்லுங்கள். செக்ஸ் மருத்துவர் அல்லது மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று கவுன்சலிங் செய்யலாம். அவராலும் ஆரோக்கியமான செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபட முடியும் என நம்பிக்கை அளியுங்கள். உறுப்புகளில் வலி இருப்பதாகச் சொல்வதற்கும் மருத்துவரிடம் சரியான சிகிச்சை பெற்று தீர்வு காணலாம்.

என் வயது 22. திருமணமாகவில்லை. மாதவிலக்கின்போது கட்டி, கட்டியாக ரத்தம் வெளியேறுகிறது. இதனால் பாதிப்பு ஏதும் உண்டா? - எம். மனோன்மணி, டி.எம்.பாளையம்.

அளவுக்கதிக இரத்தப் போக்கு இருக்கிறதா என்றும் பாருங்கள். பொதுவாக இது ஒரு பெரிய பிரச்சினையே இல்லை. கழிவுத் திசுக்கள் அதிகமிருந்தால், இப்படி கட்டி, கட்டியாக இரத்தம் வெளிறேலாம். கர்ப்பப்பையில் கட்டி ஏதேனும் இருந்தாலும் இப்படி இருக்கலாம். ஹார்மோன் கோளாறு உள்ளதா என்றும் பார்க்கவும். இது எல்லாமே குணப்படுத்தக் கூடியவையே. இரத்தம் அதிகம் வெளியேறினால் இரத்த சோகை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம், வைட்டமின் ஏ போன்றவை அதிகமுள்ள உணவுகளை நிறைய சேர்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம். பயப்பட வேண்டிய அவசியமில்லை.

என் வயது 43. கணவருக்கு 50. ஏழு மாதங்களுக்கு முன்பு அவருக்கு முதல் முறையாக மாரடைப்பு வந்தது. இந்த வயதிலும் அவருக்கு இல்லற வாழ்க்கை ஈடுபாடு குறையவில்லை. மாரடைப்பு வந்ததால் நான்தான் பயப்படுகிறேன். மாரடைப்பு வந்தவர்கள் இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். குழப்பம் தீர்க்கவும். - தேவி, வளவனூர்.

மாரடைப்புக்கும், இல்லற வாழ்க்கை ஈடுபாட்டுக்கும் நீங்கள் பயப்படுகிற அளவுக்கு தொடர்பில்லை. இன்னும் சொல்லப்போனால் பலரும் இந்த மாதிரி தேவையற்ற பயங்களின் காரணமாக, இயல்பான உணர்வுகளைக் கூட அடக்கி வாழப் பழகுகிறார்கள். அப்படி அடக்கிக் கொள்கிறபோது அது மாரடைப்பில் கொண்டு போய்விட வாய்ப்புகள் அதிகம். ஆண்களுக்காவது இந்த ஆர்வத்துக்கு வடிகாலாக வழிகள் உண்டு. ஆனால் பெண்களுக்கு அப்படியில்லை. இருதயக் கோளாறுகளால் பாதிக்கப்படுகிற பல பெண்களின் வரலாறை ஆராய்கிறபோது இப்படி இயல்பான உணர்வுகளை அடக்குவது காரணமாகக் கண்டறியப்பட்டுள்ளது. கணவன்- மனைவியான உங்களுக்குள் இந்த விஷயத்தில் கட்டுப்பாடு வேண்டாம். கணவரின் உணவு விஷயத்தில் கவனமாக இருங்கள். நெய் மற்றும் எண்ணெயை அறவே தவிர்க்கவும். குறிப்பாக உறையும் தன்மை கொண்ட எண்ணெய்களைத் தொடவே வேண்டாம். நல்லெண்ணெய் அளவோடு சேர்த்துக் கொள்ளலாம். காய்கறி, கீரைகள் நிறைய இருக்கட்டும். பதப்படுத்திய உணவுகளை சாப்பிட வேண்டாம். ருசிக்காக சாப்பிடுவதைத் தவிர்த்து, ஆரோக்கியத்துக்காக சாப்பிடப் பழக வேண்டும். மாரடைப்பு ஒரு முறை வந்தால் மீண்டும் வந்துதானாக வேண்டும் என்றில்லை. மேற்சொன்ன விஷயங்ளில் கவனமாக இருக்கிற பட்சத்தில் அது வருவது தள்ளிப் போகவோ, வராமலே போகவோ கூடும்.

எனக்குத் திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. குடும்பச்சூழல் காரணமாக நாங்கள் குழந்தையே வேண்டாம் என முடிவு செய்திருக்கிறோம். சித்த மருத்துவத்தில் குழந்தையில்லாமல் செய்ய சிகிச்சை ஏதும் உண்டா? - பெயர் வெளியிட விரும்பாத செஞ்சி வாசகி.

நீங்கள் நினைக்கிற மாதிரி குழந்தையே பிறக்காமலிருக்கச் செய்ய சிறப்பு சிகிச்சைகள் ஏதும் கிடையாது. பாதுகாப்பான நாட்கள் என்று சொல்லக் கூடிய நாட்களில் இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவது ஒன்றுதான் இதற்கான வழி. அதாவது மாதவிலக்கான ஒன்பதாம் நாள் முதல் பதினெட்டாம் நாள் வரை தாம்பத்திய உறவைத் தவிர்க்க வேண்டும். கர்ப்பத்தைத் தள்ளிப்போட மாத்திரைகள் உண்டு. அவையெல்லாம் ஒன்றிரண்டு மாதங்கள் சாப்பிடத்தானே தவிர, நீண்ட காலத்துக்கு எடுத்துக் கொள்கிற பட்சத்தில் பக்க விளைவுகளை உண்டாக்கும். கரு உருவாகாமல் பாதுகாப்பாக இருக்கப் பாருங்கள். உண்டான பிறகு அதை அழிக்க நினைக்காதீர்கள். என் மருத்துவ அனுபவத்தில் முதல் குழந்தை வேண்டாம் என அதை அபார்ஷன் செய்தார் ஒரு பெண். அதன் பிறகு அவருக்குக் கருக்குழாய் அடைப்பு ஏற்பட்டு பத்தாண்டுகளாகியும் இன்னும் குழந்தை தங்காமல் சிகிச்சையில் இருக்கிறார். இப்போது குழந்தையே வேண்டாம் என நினைக்கிற நீங்கள் பிற்காலத்தில் மனம் மாறலாம். குழந்தை பெற்றுக் கொள்ளும் தகுதிக்கு இப்போதே முற்றுப்புள்ளி வைத்து விட்டால்? எனவே முடிவை மறு பரிசீலனை செய்யுங்கள். திருமணமான ஒரே வருடத்தில் செய்யக் கூடிய முடிவில்லை இது.

என் வயது 26. ஒரு குழந்தை உண்டு. கடந்த சில நாட்களாக எனக்கு சிறுநீரை அடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு நிமிடம் கூட அடக்க முடியவில்லை. சில சமயங்களில் உடை நனைந்து தர்ம சங்கடத்தை உண்டாக்குகிறது. இதைக் குணப்படுத்த முடியுமா? - விஜிலா, நெல்லை.

திடீரென உங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல், பிரச்சினைகளைக் குறித்த பயம் போன்றவை இதற்குக் காரணமாக இருக்கலாம். சர்ககரை நோய்க்கான சோதனையைச் செய்து பாருங்கள். உங்களுடைய உணவு எப்படிப்பட்டது எனத் தெரியவில்லை. அதில் எல்லா வைட்டமின்கள் மற்றும் புரோட்டீன் மற்றும் தாதுப் பொருட்கள் இருக்கிற மாதிரிப் பார்த்துக் கொள்ளுங்கள். பருப்பும், முட்டையும் தினம் சேர்த்துக் கொள்ளவும். காய்கறி, கீரை, பழம் மூன்றும் தினசரி மெனுவில் இருக்கவேண்டும். பாலில் தண்ணீர் விடாமல் காய்ச்சி அப்படியே குடிக்கவும். ச்யவனபிராஷ் லேகியம் சாப்பிடலாம். மருத்துவரிடம் நேரடிப் பரிசோதனை மேற்கொண்ட பிறகு, அவரது ஆலோசனையின் பேரில் காலையிலும், மாலையிலும் அஷ்வ கந்தா மாத்திரை ஒவ்வொன்று சாப்பிடலாம். மாலை நேரத்தில் கைப்பிடியளவு பொட்டுக் கடலையும், ஒரு ஆப்பிளும் சாப்பிடவும். இந்தப் பிரச்சினைக்கென்றே பிரத்யேக யோகாசனங்கள் உள்ளன. அவற்றையும் மருத்துவர் அல்லது யோகாசன நிபுணரின் ஆலோ சனையின் பேரில் செய்யலாம். மனத்தை ஒரு முகப்படுத்தும் தியானப் பயிற்சி இந்தப் பிரச்சினைக்கு மிக அருமையான சிகிச்சை. முடிந்தால் தினம் வாக்கிங் செல்வதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். மன ஆரோக்கியம்தான் இப்பிரச்சினைக்கான முதல் சிகிச்சை. எந்தப் பிரச்சினைக்கும் டென்ஷன் ஆகாமல், தைரியமாக சந்திக்கப் பழகுங்கள். உணவே மருந்து என வாழப் பழகுங்கள், மருந்தே உணவு என்ற நிலை ஆபத்தானது.

எனக்குத் திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகிறது. வயது 30. எனக்கு முகம், கை, கால் என உடலெங்கும் ரோம வளர்ச்சி மிக அதிகமாக இருக்கிறது. இதனாலேயே எனக்கும், என் கணவருக்கும் ஒத்துப் போகாமல் அவர் என்னை விட்டுப் பிரிந்து சென்று விட்டார். என் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வே கிடையாதா? -பெயர் வெளியிட விரும்பாத நாகப் பட்டிணம் வாசகி.

பரம்பரைத் தன்மை, முறையற்ற மாதவிலக்குக்காக எடுத்துக் கொள்ளும் சிகிச்சைகள், ஹார்மோன் கோளாறு போன்ற ஏதேனும் ஒன்றுதான் இப்படிப்பட்ட ரோம வளர்ச்சிக்குக் காரணம். செயற்கை மணம் மற்றும் குணம் நிறைந்த உணவை அடிக்கடி சாப்பிடுகிறவர்களுக்கும் இப்படி ஹார்மோன் கோளாறு உண்டாகி, ரோம வளர்ச்சி அதிகரிப்பதாக ஒரு ஆராய்ச்சி தெரிவிக்கிறது. தேவையற்ற ரோமங்களை அகற்ற வாக்சிங் செய்து கொள்ளலாம். சர்க்கரை, எலுமிச்சை மற்றும் கிளிசரினின் கலவையே வாக்ஸ். இது சருமத்தை பாதிக்காது. கெமிக்கல் கலந்த கிரீம்களை உபயோகிக்காதீர்கள். குளிப்பதற்கு சோப்புக்குப் பதிலாக பயத்தம் மாவு உபயோகிக்கலாம். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் கஸ்தூரி மஞ்சளையும் அத்துடன் சேர்த்து அரைத்து உபயோகிக்கலாம். இத்துடன் எலுமிச்சை சாறு அல்லது தேன் இரண்டை யும் மாற்றி மாற்றி சேர்த்து புருவங்களில்படாமல் தேய்த்துக் குளிக்கலாம். நாட்டு மருந்துக் கடைகளில் கோரைக் கிழங்கு என்று கிடைக்கும் அதை வாங்கி அரைத்து அப்படியே உடம்புக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், ஆறு மாதங்களில் ரோம வளர்ச்சி நன்கு குறையும். வாரம் ஒரு முறை உப்பில்லாத வெண்ணையை முகத்தில் தடவி, பதினைந்து நிமிடங்கள் ஊறிக் கழுவவும். முகம் பட்டு போலாகும். வீட்டுப் பெரியவர்களிடம் விஷயத்தைச் சொல்லி, கணவரிடம் பேசி சேர்த்து வைக்க ஏற்பாடு செய்யச் சொல்லுங்கள்.

என் வயது 26. மிகவும் ஒல்லியாக இருப்பதால் திருமணம் தள்ளிப் போகிறது. உடல் இளைக்க மாத்திரைகள் இருப்பதைப்போல், குண்டாக்க ஏதேனும் சிகிச்சைகள் இருந்தால் சொல்லுங்களேன். - மாலா, நெற்குன்றம்.

குண்டான உடலைக் குறைப்பதுதான் இப்போது பல பெண்களுக்கும் பிரச்சினையே. குண்டாக விரும்புவோர் உணவின் மூலமே அதை சாத்தியப்படுத்தலாம். அரைக்கிலோ உடைத்த கடலை, கால் கிலோ சர்க்கரை இரண்டையும் பொடி செய்து, அதில் கால் கிலோ நெய் சேர்த்து சின்னச் சின்ன லட்டு களாகப் பிடித்து தினம் ஆறு அல்லது ஏழு சாப்பிடவும். அமுக்கராக் கிழங்கு சூரணம் ஒரு சிட்டிகையை நெய்யில் குழைத்து தினம் மூன்று வேளைகள் சாப்பிடவும். ச்யவன பிராஷ் லேகியம் தினம் மூன்று வேளைகள் சாப்பிடவும். தினம் சிறிது தேங்காயைப் பச்சையாக சாப்பிடவும். உணவிலும் தேங்காய் அதிகம் சேர்த்துக் கொள்ளவும். தினம் இரு வேளை ஐந்து பாதாம், ஒரு முட்டை சாப்பிடவும். தினம் நான்கு டம்ளர் பால் குடிக்கலாம். வாரம் ஒரு முறை ஆட்டிறைச்சி சேர்த்துக் கொள்ளவும். மேற்சொன்ன உணவுகள் செரிக்க தினம் ஒரு கீழா நெல்லி மாத்திரை சாப்பிடவும். காபி, டீயைக் குறைக்கவும். ராத்திரியில் கைப்பிடியளவு கொண்டைக்கடலையை மண் சட்டியில் ஊற வைத்து காலை யில் சாப்பிடலாம். இவற்றையெல்லாம் செய்து பாருங்கள், மூன்றே மாதங்களில் வியப்பான மாற்றம் காண்பீர்கள.

நான் இப்போது கர்ப்பமாக இருக்கிறேன். கர்ப்பம் உறுதியான நாள் முதல் ஆளாளுக்கு ஒரு ஆலோசனை சொல்லி பயமுறுத்துகிறார்கள். ரொம்பவும் ஜாக்கிரதையாக இல்லாவிட்டால் அபார்ஷன் ஆகிவிடும் என்கிறார்கள். அபார்ஷன் எந்தெந்தக் காரணங்களால் ஏற்படும்? - கே.எஸ்., திண்டிவனம்.

அபார்ஷன் எனப்படுகிற கருச்சிதைவுக்கு மூன்று முக்கிய காரணங்கள் உண்டு. கருத்தரிக்கும் ஆற்றல் உள்ள உயிரணுக்கள் குறைந்திருந்து நீங்கள் கருத்தரித்திருந்தால்.- முதல் மூன்று மாதங்களில் அதிக எடையுள்ள பொருட்களைத் தூக்குதல், நீண்ட தூரப் பயணம் மேற்கொள்தல், அளவுக்கதிக டென்ஷன் போன்றவற்றால்.- காரமான உணவுகளை அதிகம் உண்பதால். கோழி, பப்பாளி, அன்னாசி, பலா போன்றவற்றை முதல் 90 நாட்களுக்குத் தவிர்க்க வேண்டும். உணவில் காரத்தையும், புளிப்பையும் குறைத்து செயற்கை மணம் மற்றும் நிறத்தைத் தவிர்த்து உண்ணவும். இயற்கையான பழம், காய்கறிகள், ஜூஸ் சாப்பிடவும். தினம் 3 முதல் 4 டம்ளர் பால் கட்டாயம் குடிக்கவும். கர்ப்பத்தில் எந்தவிதத் தொந்தரவுகளும் இல்லை என்ற பட்சத்தில் அடிக்கடி ஸ்கேன் செய்வது தவிர்க்கப்பட வேண்டும். 14-வது வாரம் ஸ்கேன் செய்தால் போதும். இப்படியெல்லாம் இருந்தாலே உங்களுக்கு நல்லபடியாக பிரசவம் நடக்கும். கவலை வேண்டாம்.

எனக்குப் பதினேழு வயதில் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த நான்கு வருட காலமாக வெள்ளைப்படுதல் அதிகமாக இருக்கிறது. இதனால் எப்போதும் தர்ம சங்கடமாகவே உணர்கிறேன். என்னதான் தீர்வு? - வி. சங்கீதா, சென்னை-30.

அதிக சூடுதான் வெள்ளைப் படுதலுக்குக் காரணம். உணவில் உப்பு, காரம் தவிர்க்கவும். வாரம் ஒரு முறை புளித்த கீரை சேர்த்துக் கொள்ளவும். தினம் ஒரு பெரிய நெல்லிக்காயும், கொஞ்சம் உலர்ந்த திராட்சையும் சாப்பிடவும். அடிக்கடி பொன்னாங்கண்ணிக் கீரை சேர்த்துக் கொள்ளவும். வெள்ளை முள்ளங்கியை வேக வைத்த தண்ணீரைக் குடிக்கவும். வாழைத் தண்டும், பயத்தம் பருப்பும் வேக வைத்து கூட்டு மாதிரி சமைத்து சாப்பிடவும். நீர்மோர் நிறைய குடிக்கவும். ஊறுகாய் பக்கமே போகாதீர்கள். உணவில் காய் கறிகள், பழங்கள், கீரை மூன்றும் அதிக மிருக்கும் படி பார்த்துக் கொள்ளவும். அமுக்கராக் கிழங்கு மாத்திரையை வேளைக்கு ஒன்றாக தினம் மூன்று சாப்பிடவும். மாதுளம் பழத்தின் ஓட்டைக் காய வைத்துப் பொடித்து ஒரு சிட்டிகையை தண்ணீரில் கலந்து மூன்று வேளைகள் குடிக்கவும். அந்தரங்க உறுப்புகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். தினம் இரண்டு வேளைகள் உள்ளாடைகளை மாற்றவும். காட்டன் உள்ளாடையையே அணியவும். மருந்துக் கடைகளில் பொட்டாசியம் பர்மாங்கனேட் என்று கிடைக்கும். அதில் சிட்டிகையை எடுத்து வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து அந்தரங்க உறுப்பை சுத்தம் செய்யவும். போதிய அளவு ஓய்வு, சரிவிகித உணவு என எல்லாம் இருந்தும் தொடர்ச்சியாக வெள்ளைப்படுகிற பட்சத்தில் ஸ்கேன் செய்து பார்க்கலாம.

என் வயது 25. திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிறது. இன்னும் குழந்தை இல்லை. எனக்கு மாதவிலக்கு எப்போதும் பத்து, பனிரெண்டு நாட்களுக்கு நீடிக்கிறது. இதனால் எங்களுக்குள் இல்லற வாழ்க்கை என்பதே அபூர்வமாகி விட்டது. இந்நிலையில் நான் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டால் குழந்தை உண்டாக வாய்ப்பு உண்டா? - விஜி, சென்னை.

மாதவிலக்கு என்பது இப்படி பத்து, பனிரெண்டு நாட்களுக் கெல்லாம் வரக் கூடாது. அது இரத்த சோகையில் கொண்டு விடும். முதலில் உங்களுக்கு ஏன் இத்தனை நாட்கள் உதிரப் போக்கு தொடர்கிறது என இரத்தப் பரிசோதனை செய்து பாருங்கள். பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் இரத்த இழப்பை ஈடுகட்ட அவர்கள் போஷாக்கான ஆகாரம் உட்கொள்ள வேண்டும். தினம் ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை என ஏதேனும் ஒரு பழம் சாப்பிட வேண்டும். பேரிச்சம் பழம் சாப்பிடலாம். இரண்டு வகை காய், கறிவேப்பிலை, முருங்கைக் கீரை மற்றும் முட்டை அடிக்கடி சாப்பிட வேண்டும். இவை மாத விலக்கின் போது உதிரப் போக்கில் உடல் இழக்கும் இரும்புச் சத்தை ஈடுகட்டி, எதிர்ப்பு சக்தியைத் தரும். முதல் வேலையாக மருத்துவரை சந்தித்து இத்தனை நாட்கள் உதிரப் போக்கு வராமலிருக்க சிகிச்சை மேற்கொள்ளுங்கள். கவனிக்காமல் விட்டால் விரைவில் நோயாளி மாதிரி ஆகி விடுவீர்கள். இப்பிரச்சினையை சரி செய்த பிறகு குழந்தைப் பேற்றைப் பற்றி யோசிக்கலாம். பொதுவாக உதிரப் போக்கு இருக்கிற நாட்களில் இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவது என்பது அசவுகரியமாக இருக்கலாம். தொற்றுக் கிருமிகள் பரவவும் அது காரணமாக அமையும். தாமதிக்காமல் சிகிச்சையைத் தொடங்குங்கள்.

எனக்கு சமீபத்தில் தான் திருமணமானது. என் வயது 21. எடை 61 கிலோ. எனக்கு மார்பகங்கள், தொடைகள் போன்ற இடங்களில் கோடுகள் காணப்படுகின்றன. அவற்றைப் பார்த்து என் கணவர் என் நடத்தையில் சந்தேகப்படுகிறார். நான் திருமணத்துக்கு முன்பு எந்தத் தவறும் செய்ததில்லை. இருந்தும் எனக்கு ஏன் இப்படி இருக்கிறது? எப்படி சரி செய்யலாம்? - பெயர் வெளியிட விரும்பாத வாசகி.

21 வயதில் 61 கிலோ எடை என்பது கொஞ்சம் அதிகம்தான். அளவுக்கதிக எடையின் காரணமாகவே உங்களுக்கு மார்பகங்கள் மற்றும் தொடைகளில் கோடுகள் விழுந்திருக்கின்றன. உடலின் எடை முழுவதையும் உங்கள் குதிகால்கள் தாங்குகின்றன. அதன் விளைவே இந்தக் கோடுகள். வாழைத் தண்டு சாற்றில் சீரகம் சேர்த்துக் கொதிக்க வைத்து அடிக்கடி குடிக்கவும். வாரம் இரண்டு முறை வாழைத் தண்டும், பயத்தம் பருப்பும் சேர்த்து சமைத்து சாப்பிடவும். தினசரி உணவில் கொத்தமல்லி, புதினா, இஞ்சி, பூண்டு, மிளகு அதிகம் உள்ளபடி பார்த்துக் கொள்ளவும். வாரம் இருமுறை கொள்ளு வேக வைத்த தண்ணீரில் சிட்டிகை பெருங்காயம் சேர்த்துக் குடிக்கவும். சாதம் ஒரு கப், காய்கறிகளும், கீரையும் இரண்டு கப் என சாப்பிடவும். தினம் மூன்று முதல் ஐந்து கிலோ மீட்டர் தூரம் நடக்கவும். இதையெல்லாம் செய்து வந்தாலே உங்கள் உடலின் ஊளைச் சதைகள் குறைந்து, வரிகளும் காணாமல் போகும். கணவரிடம் இதை விளக்கமாக எடுத்துச் சொல்லிப் புரிய வையுங்கள். எடையைக் குறைத்து, அதை நிரூபிப்பது இன்னும் சிறந்தது.

என் வயது 27. திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகிறது. மாத விலக்கு நான்கைந்து மாதங்களுக்கொரு முறை தான் வரும். இந்நிலையில் குழந்தையும் இல்லாததால், டி அண்ட் சி செய்தால் மாத விலக்கு சுழற்சியும் சரியாகும், கர்ப்பம் தரிக்கவும் வாய்ப்புண்டு என என் தோழி சொன்னதைக் கேட்டு இரண்டு முறைகள் அதையும் செய்து கொண்டேன். இப்போது எனக்குப் புதிதாக உடலெங்கும் ரோம வளர்ச்சி அதிகமாக ஆரம்பித்திருக்கிறது. டி அண்ட் சி செய்ததுதான் தவறா? ரோம வளர்ச்சி இப்படியே அதிகரிக்குமா? நிறுத்த வழி உண்டா? - பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.

ரொம்பவும் பயந்திருக்கிறீர்கள். மாதவிலக்கை முறைப்படுத்த நீங்கள் உட்கொண்ட மருந்துகள் தான் உங்களுடைய இந்தப் புதிய பிரச்சினைக்குக் காரணம். ஸ்டீராய்டு மருந்துகள் செய்த வேலை தான் எல்லாம். அவற்றைத் தொடர்ந்து உட்கொள்வது கூடாது. கொள்ளு வேக வைத்த தண்ணீரில் சிட்டிகை பெருங்காயம் சேர்த்து மாதவிலக்கான முதல் இரண்டு நாட்களுக்குக் குடியுங்கள். அதற்கடுத்த மாதம் மாதவிலக்காகிற முதல் இரண்டு நாட்களுக்கு வெற்றிலை, பத்து மிளகு, ஐந்து பற்கள் பூண்டு சேர்த்து வெறும் வயிற்றில் காலையில் சாப்பிடவும். அதற்கும் அடுத்த மாதவிலக்கின் போது வேப்பங்கொழுந்து சாப்பிடவும். இதெல்லாம் உங்கள் மாதவிலக்கு சுழற்சியை முறைப்படுத்தும். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் கோரைக் கிழங்கை அரைத்து சோப்புக்குப் பதில் உடலுக்குத் தேய்த்துக் குளிக்கவும். அதிகப்படியான ரோமத்தை நீக்க, வாக்சிங் செய்து கொள்ளலாம். சர்க்கரை, எலுமிச்சை மற்றும் கிளிசரின் கலவை அது என்பதால் சருமத்தையும் பாதிக்காது. மாத விலக்கு சுழற்சி சரியானாலே, ரோம வளர்ச்சி குறையும். கருத்தரிக்கும் வாய்ப்புகளும் கூடும். கவலை வேண்டாம்.

என் வயது 29. சமீப காலமாக இல்லற வாழ்க்கையில் ஈடுபட்ட அடுத்த சில நாட்களில் எனக்கு பயங்கரமான நீர்க் கடுப்பு உண்டாகிறது. எதனால் இப்படி? சிகிச்சை உண்டா? - சி. ஜானகி, மேட்டூர்.

மண்பானை செய்கிறவர்களிடம் சுத்தமான களிமண் வாங்கி, அதைத் தேங்காய் ஓட்டில் போட்டு சுடுநீரில் குழைத்து இரவு படுக்கும் முன்பாக தொப்புளைச் சுற்றித் தடவிக் கொண்டு, காலையில் குளித்து விடவும். இதை வாரம் மூன்று முறைகள் செய்யலாம். முள்ளங்கி வேக வைத்த தண்ணீரில் சர்க்கரை சேர்த்துக் குடியுங்கள். உணவில் அடிக்கடி பயத்தம் பருப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடலாம். முடிந்தால் மண் சட்டியில் சமைத்து சாப்பிடவும். தினம் காலையில் கைப்பிடியளவு கொத்த மல்லித் தழையை பச்சையாக சாப்பிடவும். நாட்டு அவரைக்காய், பீன்ஸ், முருங்கைக்கீரை, கறிவேப்பிலை, வெந்தயக் கீரை போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளவும்.

என் வயது 24. திருமணமாகி இரண்டு வருடங்களாகிறது. திருமணமான ஆறே மாதங்களில் கருத்தரித்தேன். அப்போது குழந்தை வேண்டாமென அதை அபார்ஷன் செய்துவிட்டேன். அதன் பிறகு எனக்குக் கர்ப்பம் தங்கவே இல்லை. மருத்துவர் ஒருவரின் ஆலோசனையின் பேரில் இப்போது ஹார் மோன் மாத்திரைகள் சாப்பிடுகிறேன். இதனால் கருத்தரிக்குமா? - பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.

முதல் கர்ப்பத்தைக் கலைப்பது மிகப் பெரிய தவறு. குழந்தை வேண்டாம் என நினைத்த நீங்கள் அதற்கேற்ப இல்லற வாழ்வில் ஈடுபடுகிற போது பாதுகாப்பாக இருந்திருக்கலாம். அதைத் தவிர்த்து ஆறே மாதங்களில் உண்டான கர்ப்பத்தைக் கலைத்திருக்கக் கூடாது. உங்களுக்கு சினைப்பைகளில் தொற்றோ, கருக்குழாய் அடைப்போ இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். முதல் வேலையாக நீங்கள் ழளுழு எக்ஸ் ரேவும், பெல்விக் ஸ்கேனும் செய்ய வேண்டும். ஹார்மோன் மாத்திரைகள் சாப்பிடுவதை உடனடியாக நிறுத்துங்கள். அவற்றால் உண்டாகிற பக்க விளைவுகள் பயங்கரமானதாக இருக்கும். தவிர, உங்கள் கணவருக்கும் விந்தணுச் சோதனை செய்ய வேண்டும். எல்லாவற்றையும் பார்த்து தான் உங்களுக்கான சிகிச்சையைப் பரிந்துரைக்க முடியும்.

என் வயது 21. இப்போது நான் இரண்டு மாதக் கர்ப்பம். கர்ப்பமாக இருக்கிறபோது இல்லற வாழ்வில் ஈடுபட்டால் சுகப் பிரசவம் நிகழும் என்று கேள்விப்பட்டேன். அது நிஜமா? எத்தனை நாட்கள் இடைவெளியில் ஈடுபடலாம்? அதனால் குழந்தைக்கு பாதிப்பிருக்குமா? - எல். ராஜகுமாரி, அறந்தாங்கி.

நீங்கள் கேள்விப்பட்ட விஷயம் ரொம்பவும் தவறானது. கர்ப்பம் தரித்த முதல் மூன்று மற்றும் கடைசி மூன்று மாதங்களில் இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவது ஆபத்தானது. இடைப்பட்ட மாதங்களில் கர்ப்பப் பைக்கு அழுத்தம் தராத வகையில் மென்மையாக உறவு கொள்ளலாம். அதுவும் கூட பிரசவமாவதில் எந்தச்சிக்கலும் இருக்காது என சொல்லப்பட்ட பெண்களுக்கு மட்டும்தான். மற்ற பெண்கள் அதைத் தவிர்ப்பது நல்லது. கர்ப்ப காலத்தில் இல்லற வாழ்வில் ஈடுபடுவதால் தொற்றுக் கிருமிகள் அதிகம் தாக்க வாய்ப்புகள் உண்டு. பிறப்புறுப்பு சுகாதாரம் என்பது இந்த நாட்களில் மிக மிக முக்கியம். கர்ப்ப காலம் முழுவதுமே செக்ஸைத் தவிர்ப்பது என்பது ரொம்பவே நல்லது தான். சுகப் பிரசவத்துக்கு ஆரோக்கியமான உணவுதான் அடிப்படை. தினம் ஒரு பெரிய நெல்லிக்காய் சாப்பிடவும். இரவு உணவுக்குப் பிறகு வெற்றிலை, பாக்கு போடலாம். கமலா ஆரஞ்சும், வாழைப் பழமும் தினம் சாப்பிடலாம். முருங்கைக் கீரையும், முட்டையும் சேர்த்து சமைத்து சாப்பிடலாம். தினம் மூன்று வேளை பால் குடிக்க வேண்டியது மிக முக்கியம். குதிகால் உயரமாக வைத்த ஹைஹீல்ஸ் செருப்புகளைத் தவிர்க்கவும். மருத்துவரின் ஆலோசனையை மட்டும் சரியாகப் பின்பற்றுங்கள். மற்றவர்கள் சொல்கிற அனுபவங்கள், கேள்விப்படுகிற விஷயங்களை எல்லாம் காதில் வாங்காமல், பயமின்றி பிரசவத்தை எதிர் நோக்குங்கள்.

எனக்குத் திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. திருமணமான புதிதில் என் மேல் அன்பாக இருந்த கணவர், ஒரு குழந்தை பிறந்த பிறகு என்னை நெருங்குவதே இல்லை. உணர்ச்சிகளை அடக்க நான் சுய இன்பம் செய்ய வேண்டியிருக்கிறது. கணவருக்கு என் மேல் மீண்டும் நாட்டம் வர சிகிச்சை உண்டா? -பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.

பொதுவாகவே திருணமான புதிதில் செக்ஸ் வாழ்க்கையில் இருக்கிற ஈடுபாடு, காலத்துக்கும் அப்படியே இருப்பதில்லை. உங்கள் கணவருக்கு அது ஒரேயடியாகக் குறைய என்ன காரணம் என முதலில் கண்டு பிடியுங்கள். ஒரு குழந்தை பெற்ற பிறகு தன்னை அழகாக, சுத்தமாக வைத்துக் கொள்கிற எண்ணம் பெரும்பாலான பெண்களுக்குப் போய் விடுகிறது. தினம் இரண்டு வேளைகள் குளியுங்கள். கஸ்தூரி மஞ்சள் தேய்த்துக் குளிப்பதால், அது கணவரை இல்லற வாழ்க்கைக்கு ஈர்க்கும். நீங்கள் அணிகிற உடைகள் மற்றும் உள்ளாடைகள் அழுக்கின்றி, வியர்வை நாற்ற மின்றி சுத்தமாக இருக்கட்டும். படுக்கையறையை சுத்தமாக வைத்திருங்கள். தினம் காலையில் கணவருக்குக் கைப்பிடியளவு பச்சைப் புதினாவை சாப்பிடக் கொடுங்கள். கருணைக் கிழங்கு மற்றும் பசலைக் கீரை அதிகம் சமைத்துக் கொடுங்கள். முருங்கைப்வை நெய்யில் வதக்கிக் கொடுங்கள். இரவு படுக்கும் முன்பாக வெற்றிலை, பாக்குடன், சிறிது ஜாதிக்காய் சேர்த்துக் கொடுங்கள். இதெல்லாம் கணவருக்குத் தாம்பத்திய ஈடுபாட்டை அதிகப்படுத்தும். படுக்கையறையில் வீட்டுப் பிரச்சினைகள் பேசாதீர்கள். சுய இன்பம் என்பது எப்போ தாவது ஒரு மாறுதலுக்குச் செய்யலாம். நாளைக்கே உங்கள் கணவர் மீண்டும் உங்களிடம் நெருக்கமா கும்போது உங்களின் அந்தப் பழக்கம் அவருக்கு நெருடலை உண் டாக்கும். ஜாக்கிரதை.

என் வயது 19. எனக்கொரு விசித்திரமான பிரச்சினை. அந்த ரங்க உறுப்பிலிருந்து எப்போதும் துர்வாடை வீசுகிறது. தர்மசங்கடமான இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு சொல்லுங்கள். -எம்.கே., நெல்லை.

மருந்துக் கடைகளில் பொட்டாசியம் பர்மாங்கனேட் என்று கிடைக்கும். அதில் சிட்டிகை எடுத்து வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து, பிறப்புறுப்பை தினம் நான்கைந்து முறைகள் கழுவவும். டாய்லெட் மற்றும் அங்கே வைத்திருக்கிற பக்கெட், மக் போன்ற எல்லாம் சுத்தமாக இருக்க வேண்டும். அவை சுத்தமாக இல்லாமல் பாசிப் பிடித்து இருந்தால் கூட அதன் மூலம் தொற்றுக் கிருமிகள் பரவி, இம் மாதிரி பிரச்சினைகள் வரலாம். வெள்ளைப் படுதல் இருந்தால் வைட்டமின் சி மாத்திரை உட்கொள்ளவும். உணவில் பொன்னாங்கண்ணிக் கீரை, பெரிய நெல்லிக்காய், ஆரஞ்சு அதிகம் சேர்த்துக் கொள்ளவும். காபி மற்றும் டீயைக் குறைத்து, திக்கான பாலில் பாதாம் பருப்பைப் பொடி செய்து கலந்து குடிக்கவும். பழங்கள், பால், முட்டை இந்த மூன்றும் தினசரி சாப்பிட வேண்டியவை. போஷாக்கான ஆகாரம்தான் இப்பிரச்சினைக்கான முதல் தீர்வு. உபயோகிக்கிற உள்ளாடைகள் காட்டனாக, சுத்தமாக இருக்கட்டும். தினம் அவற்றை இரண்டு வேளைகள் மாற்றவும். மாதவிலக்கு நாட்களில் அதிகப் படியான சுத்தத்தைக் கடைப் பிடிக்கவும். குறிப்பிட்ட நேரத்துக்கொரு முறை நாப்கினை மாற்றவும். இவற்றையெல்லாம் செய்தாலே உங்கள் பிரச்சினைகள் சரியாகும்.

எனக்குத் திருமணமாகி குழந்தை பிறந்த பிறகு சிறுநீரை அடக்க முடியாத நிலை உண்டாகி விட்டது. சிரித்தால், தும்மினால், இருமினால் கூட சிறுநீர் கசிகிறது. சிகிச்சை உண்டா? - பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.

நிறைய பெண்களுக்கு இப்பிரச்சினை இருக்கிறது. பிரதான காரணம் இரத்த சோகை. உலக அளவில் இந்தியப் பெண்கள்தான் இரத்த சோகையால் அதிகம் பாதிக்கப் படுகிறார்கள் என்கிறது சமீபத்திய ஆராய்ச்சிக் குறிப்பு ஒன்று. வெளி வேலை, வீட்டுப் பொறுப்பு என இரட்டைச் சுமை சுமக்கிற பெண்கள் பெரும்பாலும் அதற்கேற்ற சரிவிகித உணவை உட்கொள்வதில்லை. மீந்து போன உணவு, முதல் நாள் சமைத்ததை சாப்பிடுவது என உடம்பைப் பாழாக்கிக் கொள்கிறார்கள். இரத்த சோகையைக் குணப்பபடுத்திக் கொண்டாலே இப்பிரச்சினை சரியாகும். ஈஸ்னோஃபிலியா இருந்தாலும் இப்படி இருக்கலாம். அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இவை தவிர சிறுநீரகத் தசை நார்கள் பலவீனமாக இருப்பவர்களுக்கும் இப்படி இருக்கலாம். எனவே உங்களுக்கு எதனால் இப்படியிருக்கிறது என்பதை நேரில் பார்த்துதான் சரியான சிகிச்சையைப் பரிந்துரைக்க முடியும்.

என் வயது 26. திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகிறது. புது மணப் பெண்ணாக வந்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. என் கணவர் என்னை நெருங்குவதே இல்லை. காரணம் எனது சிறுத்த மார்பகங்கள். அவரது கோபம் வேறு விஷயங்களில் வெடிக்கிறது. முதலிரவோடு முடிந்து போன என் தாம்பத்திய வாழ்க்கையை மலர வைக்க முடியுமா? மார்பக வளர்ச்சிக்கு சிகிச்சை ஏதும் உண்டா? - டி.சுஜா, திருச்சி.

மனைவியையே ஒதுக்கும் அளவுக்கு இது அப்படியொன்றும் பெரிய பிரச்சினையில்லை. உங்கள் கணவரின் காட்டுமிராண்டித் தனமான மனப்பான்மையின் வெளிப்பாடே இது. மார்பகங்களின் அளவு என்பது பரம்பரை வாகு, உடலமைப்பு, சாப்பிடுகிற உணவு எனப் பல விஷயங்களைப் பொறுத்து அமைவது. நாட்டு மருந்துக் கடைகளில் அமுக்கராக் கிழங்கு சூரணம் என்று கிடைக்கும். அதை வாங்கி நெய்யில் குழைத்து தினம் சாப்பிடவும். பொட்டுக்கடலையைப் பொடித்து, சர்க்கரையும், சூடான நெய்யும் சேர்த்து தினம் மூன்று வேளைகள் கொஞ்சம் சாப்பிடவும். அதிலுள்ள ஈஸ்ட் மார்பக வளர்ச்சிக்கு உதவும். திராட்சை சாப்பிடுவதை தினசரி பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். பாதாம், அக்ரூட், பேரிச்சம்பழம் மாதிரி உலர் பழங்களை தினம் கொஞ்சம் சாப்பிடவும். நல்ல கெட்டியான தயிர் தினம் ஒரு கப் சாப்பிடவும். இரவில் பால் ஒரு டம்ளர் குடிக்கவும். முட்டையை அதன் மஞ்சள் கருவுடன் சேர்த்து சாப்பிடவும். வைட்டமின் ஈ கிரிம் என மருந்துக் கடைகளில் கேட்டு வாங்கி, மார்பகங்களில் கீழிருந்து மேலாகத் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் ஊறிக் குளிக்கவும். இதெல்லாம் உங்கள் திருப்திக்காக. கணவரிடம் பக்குவமாகப் பேசுங்கள். மார்பக அழகோ, அளவோ காலத்துக்கும் அப்படியே இருக்கப் போவதில்லை. நம் உடலில் உள்ள வியர்வை சுரப்பியை மாதிரி அதுவும் ஒரு வகை சுரப்பி அவ்வளவுதான். அதைப் பெரிது படுத்தி நிகழ் கால சந்தோஷத்தை மறக்க வேண்டாம் எனப் பேசுங்கள்.

எனக்குத் திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிறது. என் வயது 27. என் கணவருக்கு விதைப்பை ஒன்று மட்டும் உள்ளது. முதலில் இரண்டுமே இல்லையாம். பிறகு ஆபரேஷன் செய்து ஒன்று மட்டும் உள்ளது. மற்ற ஒன்று அந்த இடத்தில் இல்லை. மருத்துவர்களோ குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்று சொல்கிறார்கள். சித்த மருத்துவத்தில் எனக்குக் குழந்தை பாக்கியம் உண்டாக்க வழி ஏதேனும் உண்டா? -எஸ். கவிதா, ஊர் வெளியிட விரும்பவில்லை.

உங்கள் கணவருக்கு இரண்டு விதைப் பைகளுமே இருந்து, அவை இரண்டுமே இறங்கியிருந்தால் அல்லது ஒன்று மேலும், ஒன்று கீழும் இருந்திருந்தாலும் கூட குழந்தை பிறக்க வைக்க ஏதேனும் முயற்சிகள் செய்யலாம். ஆனால் அவருக்கு இரண்டுமே இல்லாமலிருந்து, பிறகு ஒன்று இறக்கியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அதனால் அவருக்கு உங்களைக் கருத்தரிக்க வைக்கிற ஆற்றல் இருக்காது. செயற்கை மருத்துவ முறைகளும் பலனளிக்கும் என்று சொல்வதற்கில்லை. மன உளைச்சலும், பண விரயமும்தான் அதில் அதிகம். எனவே நீங்கள் இன்னும் காலம் தாழ்த்தாமல் உடனே ஒரு குழந்தையை தத்தெடுத்துக் கொள்ளும் முயற்சியில் இறங்குங்கள். அதிலும் உறவுக்குள் தத்து எடுக்க வேண்டாம். அது பின்னாளில் உங்களுக்குப் பல பிரச்சினைகளைத் தர வாய்ப்புண்டு. வெளியிலிருந்து ஒரு குழந்தையை தத்தெடுத்து அதற்கு முகவரியும், வாழ்க்கையும் கொடுங்கள்.
என் வயது 29. எனக்கு இரண்டு மார்பகங்களும் பெரியதாக உள்ளன. நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கிற கொடி வேலித் தைலம் உபயோகித்தால் இப்பிரச்சினை சரியாகும் என்கிறார்களே, அது சரியா? மேலும் எனக்குக் கல்யாணமாகி, குழந்தை இல்லை. குழந்தை உண்டானால் இப்பிரச்சினையால் பால் சுரப்புக்கு ஏதேனும் பிரச்சினைகள் வருமா? -பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.

நான் ஏற்கனவே சொன்ன மாதிரி மார்பகங்களின் அமைப்பு என்பது பரம்பரைத் தன்மை, உடல்வாகு போன்றவற்றைப் பொறுத்தது. அதைப் பற்றிய வருத்தம் உங்களுக்கு வேண்டாம். குழந்தை உண்டாகி, அதற்குத் தாய்ப்பால் கொடுத்தாலே, இப்பிரச்சினை ஓரளவு சரியாகும். பல பெண்களும் பயப்படுகிற மாதிரி மார்பக அளவுக்கும், தாய்ப்பால் சுரப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மார்பக அளவைப் பொறுத்து தாய்ப்பாலின் சுரப்பு கூடவோ, குறையவோ செய்யாது. தினம் குளிப்பதற்கு சோப்பைத் தவிர்த்து, பயத்தம் பருப்பு மாவைத் தேய்த்துக் குளித்து வாருங்கள். அதற்கு மார்பக சதைகளை ஓரளவுக் குறைக்கிற சக்தி உண்டு. மற்றபடி உடற்பயிற்சி, யோகா போன்றவை மூலம்தான் இப்படிப்பட்ட பிரச்சினைகளை சரியாக்க முடியும். தகுந்த யோகாசன நிபுணரிடம் கலந்தாலோசித்து சரியான ஆசனங்களைச் செய்ய ஆரம்பியுங்கள். தினம் மூன்று கிலோமீட்டர் தூரம் நடப்பதும் நல்லது.
என் வயது 40. குழந்தை பாக்கியம் இல்லை. மூன்று வருடங்களுக்கு முன் என் கர்ப்பப்பையில் கட்டி வந்து கர்ப்பப்பையை அகற்றிவிட்டோம். என் கணவருக்கு வயது 55. இந்த வயதிலும் என்னுடன் உறவு கொள்ள விரும்புகிறார். அதனால் என் உடல் நிலை பாதிக்குமா? -வி. காளியம்மா, உத்தமசோழபுரம்.

கர்ப்பப்பையை அகற்றி விட்டதால் இனி உங்களுக்குக் குழந்தைப் பேற்றுக்கான வாய்ப்பு இருக்காது. மற்றபடி நீங்கள், உங்கள் கணவருடன் விரும்புகிற வரை உறவு கொள்ளலாம். செக்ஸ் உறவு என்பது தம்பதியருக்குள் உண்டாகிற இயற்கையான எதிர்பார்ப்பு தான். அதற்கு வயதோ, வேறு விஷயங்களோ தடையாக இருக்கத் தேவையில்லை. மனசுதான் முக்கியம். உங்கள் கணவர் மனத்தளவில் இளமையாகவே இருப்பதாகத் தெரிகிறது. எனவே உறவுக்கு நீங்கள் உடன்படுவதில் தவறில்லை. இது உங்கள் இருவரின் உடல் நலத்தையும் எந்த வகையிலும் பாதிக்காது.

என் வயது 24. திருமணமாகி மூன்றரை வருடங்கள் ஆகிறது. மாதவிடாய் முறையாக இல்லை. எல்லா சோதனைகளும் செய்தாகி விட்டது. மருந்துகள் எடுத்துக் கொண்டேன். சில மாதங்களுக்கு முன் இரண்டு மாதங்கள் சரியாக 28 நாட்களில் மாதவிலக்கு வந்தது. மருத்துவர் குழந்தை நிற்க மருந்து கொடுத்தார். அந்த மாதமே கருவுற்றேன். இரண்டு மாதங்களில் அபார்ஷன் ஆகிவிட்டது. ஒரு முறை டி.என்.சியும் செய்து விட்டேன். ஹார்மோன் டெஸ்ட் நார்மல். மீண்டும் நான்கு மாதங்களாக மாதவிலக்கு வரவில்லை. மாத விடாய் சரியாகி, எனக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்குமா? -சரஸ்வதி, பாண்டிச்சேரி.

நீங்கள் குறிப்பிட்டுள்ள விவரங்களை வைத்துப் பார்க்கும் போது உங்களுக்கு சினை முட்டை சினைக்கும் தன்மை குறைவாக இருப்பது தெரிகிறது. மாதவிடாய் முறையாக சில மருந்துகளை உட்கொள்ள வேண்டும். கொள்ளு வேக வைத்த தண்ணீரை வாரம் இரண்டு முறைகள் தவறாமல் குடிக்கவும். வாழைத் தண்டு வேக வைத்த தண்ணீரில் கொஞ்சம் தனியா தூளும், கொஞ்சம் சீரகத் தூளும் சேர்த்துக் குடிக்கலாம். பயத்தம் பருப்பும், வாழைத் தண்டும் சேர்த்து கூட்டு செய்து சாப்பிடவும். சமையலில் புதினா அடிக்கடி சேர்ப்பதுடன், இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், தனியா தினமுமே சேர்த்துக் கொள்ளவும். தினம் ஒரு பெரிய நெல்லிக் காய் சாப்பிடவும். மாதவிலக்கு ஒழுங்காக வந்தால், முதல் மூன்று நாட்கள் கொள்ளு வேக வைத்த தண்ணீரை இரண்டு வேளைகள் கட்டாயம் குடிக்க வேண் டும். சினை முட்டை வந்தால்தான் மாதவிலக்கு வரும். இதற்கிடையில் உங்கள் கணவருக்கும் விந்தணுச் சோதனை செய்யவும். அவருக்கேதும் குறைபாடுகள் இருந்தாலும்கூட அபார்ஷன் ஆகும். மேற்சொன்னவற்றை எல்லாம் தாமதிக்காமல் செய்யவும். பயம் வேண்டாம். சரியாகும்.

என் வயது 18. வயதுக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகிறது. வயதுக்கு வந்த பிறகு மூன்று, நான்கு மாதங்களுக்கு மாதவிலக்கு முறையாக வந்தது. அதன் பிறகு மூன்று முதல் ஆறு மாதங்கள் கழித்து வரும். ஆனால் பதினைந்து நாட்கள் முதல் ஒரு மாதம் வரை இரத்தப் போக்கு இருக்கும். அதன் பிறகு எனக்கு எழுந்திருக்கக் கூட முடியாத அளவுக்கு உடம்பு மோசமாகி விடும். பிறகு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று போக்கை நிறுத்துவார்கள். அதன் பிறகு ஒன்றிரண்டு மாதங்கள் சரியாக வரும். மீண்டும் ஐந்தாறு மாதங்களுக்கு வராது. இப்போதைக்கு எனக்கு விலக்கு வந்து ஏழு, எட்டு மாதங்கள் ஆகிறது. மாத விடாய் வரும் என நினைத்தாலே பயமாக இருக்கிறது. இதற்காக நான் பார்க்காத வைத் தியமில்லை. இது இப்படியேதான் தொடருமா? சிகிச்சையே கிடையாதா? -பெயர் வெளியிட விரும்பாத பெரம்பலூர் வாசகி.

நீங்கள் முதல் வேலையாக பெல்விக் ஸ்கேன் எடுக்க வேண்டும். அதில் எந்தத் தவறும் இல்லை. கர்ப்பப்பையில் கட்டியோ, புண்களோ உள்ளனவா, கர்ப்பப்பை எப்படியிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளவே இந்த ஸ்கேன். மனித உடலிலிருந்து இரத்தமானது எந்த வழியிலும் அளவுக்கதிகமாக வெளியேறக் கூடாது. இது இரத்த சோகையில் கொண்டு போய் விடும். மாதவிடாயின் போதான உதிரப் போக்கும் அப்படித்தான். நீங்கள் உடனடியாக மருத்துவரைப் பாருங்கள். எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் மருத்துவர்களை மாற்றிக் கொண்டே இருக்காதீர்கள். ஒரே மருத்துவரிடம் பொறுமையாக சிகிச்சையைத் தொடருங்கள். கர்ப்பப்பை தொடர்பான பிரச்சினைகள் உடனடியாக சரியாகாது. கொஞ்சம் நாட்கள் ஆகும்.

என் மகளுக்கு வயது எட்டுதான் ஆகிறது. அதற்குள் மார்பகங்கள் டீன் ஏஜ் பெண்ணுக்குள்ள மாதிரியான வளர்ச்சியுடன் காணப்படுகிறது. தர்மசங்கடமாக இருக்கிறது. மற்றவர்கள் பார்வையில் இருந்து அவளைக் காப்பாற்றுவதும், சிலரது கேள்விக்கு பதில் சொல்வதும் எனக்குப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. அவளது மார்பக வளர்ச்சியைக் கட்டுப்படுத்த சித்த மருத்துவத்தில் ஏதேனும் சிகிச்சை உண்டா? -டி. ஆனந்தி, சென்னை.

நீங்கள் கவலைப்படுகிற அளவுக்கு இது பெரிய பிரச்சினை இல்லை. உங்கள் மகளின் உடலில் ஹார்மோன் வளர்ச்சி வேகமாக இருக்கிறது. பெண்கள் பூப்பெய்தும் பருவம் இன்னும் நான்கைந்து ஆண்டுகளில் ஏழு, எட்டு வயதாகக் குறையும் என்று அமெரிக்க ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது. பால்ய பருவம் என்பது குறைந்து வருவதன் அறிகுறியே இது. சாப்பாடு, அவர்களது செயல்பாடுகள் எனப் பல விஷயங்களால் இப்படி நடக்கலாம். உடல் வளர்ச்சியை வைத்துப் பார்க்கும் போது உங்கள் மகளும் சீக்கிரமே வயதுக்கு வரலாம். அவளது மார்பக வளர்ச்சியைக் குறைக்க நினைக்காதீர்கள். அது இயற்கை. அதை ஒரு பெரிய விஷயமாக்கி அவளிடம் பேசாதீர்கள். அதே சமயம் பிறரது பார்வையிலிருந்து தற்காத்துக் கொள்ள நாகரீகமான, உடலை மறைக்கும் உடைகளை அணியக் கற்றுக் கொடுங்கள்.

என் வயது 21. நான் நல்ல நிறமாக இருப்பேன். என் முகத்தில் உதடுகளுக்கு மேல் ரோம வளர்ச்சி அதிகமிருக்கிறது. பார்ப்பவர்கள் எல்லாம் கிண்டல் செய்கிறார்கள். மஞ்சள் உபயோகித்தும் பலனில்லை. வேறு என்ன தீர்வு? -பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.

உங்களுக்கு மாதவிலக்கு சுழற்சி சரியாக இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஹார்மோன் கோளாறுகள் இருந்தாலும் இப்படி ரோம வளர்ச்சி இருக்கும். ஒரு வெற்றிலை, ஐந்து மிளகு, மூன்று பற்கள் பூண்டு சேர்த்து வாரம் ஒரு முறை வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வரவும். இது உங்கள் மாத விலக்கு சுழற்சியைம் சரியாக்கும். ரோம வளர்ச்சியையும் குறைக்கும். சிலருக்குத் திருமணத்துக்கு முன்பு வரை இருக்கிற ரோம வளர்ச்சி, திருமணத்துக்குப் பிறகு உடலில் நிகழ்கிற ஹார் மோன் மாறுதல்களால் குறையும். உங்களுக்கும் அப்படி நடக்கலாம். பயத்தம் பருப்பு மற்றும் கஸ்தூரி மஞ்சளை (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். சாதாரண மஞ்சள் மாதிரி இல்லாமல் மரத் துண்டு மாதிரி இருக்கும்) அரைத்து முகத்தில் தடவி, சிறிது நேரம் காய விட்டுக் கழுவவும். வாரம் மூன்று முறைகள் இப்படிச் செய்யவும். மீதி நாட்களில் தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சம் சாறு கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவவும். கூடவே திரெடிங் செய்து வரலாம். இவையெல்லாம் ரோம வளர்ச்சியைப் படிப் படியாகக் கட்டுப்படுத்தும். கவலை வேண்டாம்.

நான் ரொம்பவும் கட்டுப்பாடான குடும்பத்தில் வளர்ந்தவள். சமீபத்தில்தான் எனக்குத் திருமணமானது. என் கணவர் உறவு கொள்கிற நேரத்தில் ஆபாசமான புத்தகங்களையும், படங்களையும் காட்டி அதிலுள்ளது போல என்னை சம்மதிக்கக் கட்டாயப்படுத்துகிறார். என் மனம் அவற்றுக் கெல்லாம் இடம் தர மறுக்கிறது. இதனால் எங்கள் தாம்பத்திய வாழ்வில் விரிசல் விழுமோ என்று கூட பயப்படுகிறேன். தீர்வு சொல்லுங்கள். -எம்.எஃப்., திருச்சி.

தன் மனைவியைத் திருப்திப்படுத்த முடியுமோ, முடியாதோ என்ற பயத்திலும், தன் ஆண்மையை மனைவிக்கு நிரூபிக்கவும் நினைத்துப் பல ஆண்கள் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுகிறார்கள். இப்படியெல்லாம் செய்தால்தான் அவர்களுக்கு உறவு சாத்தியம் என்று தவறான ஒரு அபிப்ராயம் உண்டு. கணவர் நல்ல மன நிலையில் இருக்கிற போது இது பற்றி அவரிடம் பக்குவமாகப் பேசுங்கள். இப்படிப்பட்ட விஷயங்கள் இல்லாமலும் அவரால் உங்களுடன் உறவில் நல்லபடியாக ஈடுபட முடியும் என்று நம்பிக்கை கொடுங்கள். தேவைப்பட்டால் அவரை கவுன்சலிங் அழைத்துச் செல்லலாம். அவர்கள் உங்கள் கணவரின் அனாவசிய குழப்பங்களையும், பயத்தையும் போக்கி, சகஜமாக மாற்றுவார்கள். பொறுமையாகத்தான் இப்பிரச்சினையைக் கையாளவேண்டும்.

எனக்குத் திருமணமாகி எட்டு மாதங்கள் ஆகிறது. இன்னும் குழந்தை தங்கவில்லை. மாதவிலக்கு நாட்கள் தவிர மற்ற எல்லா நாட்களும் உறவு கொண்டும் கரு தங்குவதில்லை. உறவு முடிந்ததும், விந்தணுக்கள் உடனே வெளியேறி விடுகின்றன. அக்கம் பக்கத்தில் எல்லாரும் துக்கம் விசாரிக்க ஆரம் பித்துவிட்டார்கள். என்ன கோளாறாக இருக்கும்? என்ன சிகிச்சை வேண்டும்? -சி. மங்கையர்க்கரசி, ஆத்தூர்.

பொதுவாகத் திருமணமாகி, ஒன்றி ரண்டு வருடங்கள் வரை குழந்தை இல்லாமல் இருப்பது பெரிய விஷயமில்லை. அதன் பிறகும் கரு தங்கா விட்டால்தான் மருத்துவப் பரிசோதனை அவசியம். அதற்குள் கிளம்புகிற அக்கம் பக்கத்தாரது விமர்சனங்களைப் பொருட்படுத்தாதீர்கள். விஞ்ஞான ரிதியாகப் பார்த்தால் விந்தணு என்பது வெளியேறுவது இயற்கை. மனித உடலின் மிகச் சிறிய செல் ஆணின் விந்தணு. உறவின் போது சிலதுதான் கருக் குழாய் வழியே கருப்பைக்குப் போகும். சிலது போனாலும், போகா விட்டாலும் வெளியேறவே செய்யும். எனவே இதற்கும், நீங்கள் கருத்தரிக்காததற்கும் தொடர்பில்லை. அரைகுறை விஷயங்களைக் கேள்விப்பட்டு அனாவசியமாகக் குழம்பிக் கொண்டிருக்காதீர்கள். கருத்தரிக்க தினசரி உறவு என்பதும் அனாவசியம். மாதத்தின் எல்லா நாட்களிலும் பெண்ணின் உடலில் கருமுட்டை உருவாவதில்லை. மாதவிலக்கானதிலிருந்து முதல் பத்து நாட்களைத் தவிர்த்து, அடுத்த பத்து நாட்களில் உறவு கொள்ளலாம். அதற்கடுத்த பத்து நாட்களையும் தவிர்க்கலாம். இடைப்பட்ட நாட்கள்தான் கருத்தரிக்க உகந்தவை. தினசரி உறவு கொண்டால்தான், அதுவும் பல முறைகள் உறவில் ஈடுபட்டால்தான் கருத்தரிக்கும் போல என்பது பலரது தவறான அபிப்ராயம். நீங்கள் இன்னும் ஆறு மாதங்கள் காத்திருந்து பார்க்கலாம். அதன் பிறகும் கரு தங்கா விட்டால் மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்.

என் வயது 26. இரண்டு வருடங்களுக்கு முன்புதான் குழந்தை பிறந்தது. சுகப்பிரசவம். அதன் பிறகு என் கணவர் என்னை நெருங்குவதே இல்லை. உறவின் போது பிறப்புறுப்பு ரொம்பவும் தளர்ந்து விட்டதாகக் காரணம் சொல்கிறார். எனக்கு மட்டும்தான் இப்படியா? இதை சரிசெய்ய வாய்ப்பே இல்லையா? - எல்.டி., சென்னை.

பெண்ணின் உடம்பு என்பது கர்ப்பம் தரிப்பதற்கும், குழந்தை பெறுவதற்கும் முன்பிருந்த அதே நிலையில் காலத்துக்கும் இருக்காது. பெண்பித்தர்கள்தான் இப்படியெல்லாம் காரணம் சொல்லி மனைவியை விட்டு விலகியிருப்பார்கள். தன் பெண் பித்தை மறைக்க இப்படி மனைவி மேல் குறை சொல்கிற கணவர்களில் உங்களவரும் ஒருவராக இருக்கிறார். அந்தக் காலத்தில் எல்லாம் பெரும் பாலும் சுகப்பிரசவம்தான். எல்லாப் பெண்களுக்கும் இந்தத் தளர்வு இருக்கும். ஆனால் இதையெல்லாம் காரணம் காட்டி மனைவியை விட்டு, விலகியதாக நாம் எந்த ஆணைப் பற்றியும் கேள்விப் பட்டதில்லை. இதற்கெல்லாம் கவலைப்படாதீர்கள். பிரசவித்த பெண்கள் எல்லாரும் சந்திக்கிற பிரச்சினைதான் இது. உங்களுக்குப் பிரசவம் பார்த்த மருத்துவரை அணுகுங்கள். அவர் உங்களுக்கான விவரங்களை விளக்கமாகச் சொல்வார்.

என் மனைவிக்கு பிரபல டாக்டரிடம் சிசேரியன் செய்த பிறகு, காப்பர் டி போடப்பட்டது. அது போட்டு ஒரே மாதத்தில் உள்ளே போய் விட்டது. அது கருப்பையின் ஒரு ஓரத்தில் இருப்பதாகச் சொல்லி மறுமுறை குழந்தை பிறக்கும் போது எடுத்து விடலாம் என்றார்கள். இரண்டு ஆண்டுகள் ஆகிறது. வேறு ஏதேனும் பாதிப்பு உண்டா? இதனால் கருத்தரிக்க ஏதேனும் கால தாமதம் ஆகுமா? -எஸ். கண்ணன், குலமங்கலம்.

முதல் வேலையாக உங்கள் மனைவிக்கு ஸ்கேன் செய்யுங்கள். அதன் மூலம்தான் அது எங்கே இருக்கிறது என சரியாகத் தெரிந்து கொள்ளமுடியும். வெறும் கருவிகளைக் கொண்டே எடுத்து விட முடியுமா அல்லது அறுவை சிகிச்சை தேவைப்படுமா என்பதையும் தெரிந்து கொள்ளலாம். என்ன ஆனாலும் இப்படி காப்பர் டி உள்ளுக்குள் புதைந்திருக்கக் கூடாது. அது எந்த நிலையில், எந்த இடத்தில் இருக்கிறது என்பதைப்பொறுத்துதான் உங்கள் மனைவி கருத்தரித்து, சிசேரியன் செய்கிற போது எடுக்கமுடியுமா என்பதையும் முடிவுசெய்ய முடியும். காப்பர் டி ஏடாகூடமான இடத்தில் இருக்கிற பட்சத்தில்உங்கள் மனைவி கருத்தரிப்பதில் பிரச்சினைகள் வரலாம். அப்படியே கருத்தரித்தாலும், காப்பர்டி இருக்கிற நிலையின் காரண மாக, குழந்தை உருவாகிற வடிவமே மாறிப் போகக் கூடும். குழந்தை வளர்ந்து சுழலும் போது அதைக் குத்தலாம். இப்படிப் பல பிரச்சினைகள் உள்ளதால், உடனடியாக ஸ்கேன் செய்து அதை அகற்றி விடுவது நல்லது.

எனக்குத் திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிறது. கணவர் அன்பானவர். உறவுக்கு என்னை நெருங்கியதுமே அவருக்கு விந்து வெளியேறி விடுகிறது. பிறகு அவ்வளவுதான். திருப்தியில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். குழந்தையும் இல்லை. இந்தப் பிரச்சினை சரியாகி, எனக்கு சராசரி தாம்பத்திய வாழ்க்கை கிடைக்குமா? குழந்தை பாக்கியம் கிடைக்குமா? -விஜயலட்சுமி, நாகர்கோயில்.

நிறைய ஆண்களிடம் காணப்படுகிற பிரச்சினைதான் இது. உடலளவில் அவர்களுக்குக் குறையே இருக்காது. மனத்தளவில் தன் மனைவியைத் தன்னால் திருப்திப்படுத்த முடியுமா என்கிற கவலையின் விளைவாகவே இப்படி இருப்பார்கள். இவர்களுக்குத் தேவை கவுன்சலிங். தாழ்வு மனப்பான்மையை விரட்ட, முதலில் அவரை ஒரு சைக்காலஜிஸ்ட்டிடம் (சைக்யாட்ரிஸ்ட் அல்ல) அழைத்துச் செல்லுங்கள். அவருக்கு என்ன பிரச்சினை எனத் தெரிந்து, அதற்கேற்ப கவுன்சலிங் கொடுப்பார்கள். பிறகு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டால், அதற்கான மருத்துவரையும், மருந்து களையும் பரிந்துரைப்பார்கள். இது முதல் கட்டசிகிச்சை. அடுத்து உங்கள் கணவருக்கு விந்தணுச் சோதனை செய்ய வேண்டும். அதில் உயிரணுக்கள் எப்படியிருக்கின்றன எனத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப சிகிச்சை அளித்தால் கருத்தரிக்க முடியும்.

என் வயது 22. திருமணமாகி 13 மாதங்கள் ஆகின்றன. குழந்தை பிறந்து நான்கு மாதங்கள் ஆகின்றன. ஒரு பக்க மார்பில் குழந்தை சரியாகப் பால் குடிக்காததால், அந்தப் பக்க மார்பகம் சிறியதாகி விட்டது. தாய்ப்பால் சுரப்பும் எனக்குக் குறைவாக இருக்கிறது. சிறியதாகி விட்ட மார்பகத்தை சரி செய்யவும், தாய்ப்பால் அதிகம் சுரக்கவும் ஆலோசனைகள் சொல்வீர்களா? -ஏ. சாந்தி, ஊர் வெளியிட விரும்பவில்லை.

நீங்கள் அசைவம் சாப்பிடுகிறவராக இருந்தால் பால் சுறா அதிகம் சேர்த்துக் கொள்ளவும். வாரம் ஒரு முறை மதியத்தில் ஆட்டுக் கறியும், மீனும் சாப்பிடவும். சைவம் சாப்பிடுகிறவராக இருந்தால், பிஞ்சுக் காய்கறிகள் நிறைய சேர்த்துக் கொள்ளவும். கறிவேப்பிலை பவுடர் கால் டீஸ்ன் தினமும் சாதத்தில் சேர்த்துப் பிசைந்து சாப்பிடவும். தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடவும். மூன்று டம்ளர் பால் குடிக்கவும். மார்பகங்களின் அளவு பெரிதாகவோ, சிறிதாகவோ இருப்பது என்பது இயற்கை. அதை மருந்து, மாத்திரைகளால் நீங்கள் எது வும் செய்ய முடியாது. தாய்ப்பால் ஊட்டும் காலங்களில் இப்படி இருப்பவை, பிறகு ஒரு கட்டத்துக்குப் பிறகு தாய்ப் பாலை நிறுத்திய பிறகு சம அளவுக்கு வரலாம். கவலை வேண்டாம்.

என் வயது 36. காப்பர் டி போட்டு ஐந்து வருடங்கள் ஆகின்றன. சமீபத்தில் வேறு ஒரு பிரச்சினைக்காக மருத்துவரை சந்தித்த போது, காப்பர் டி உள்ளே புதைந்திருக்கிற மாதிரித் தெரிவதாகச் சொன்னார். அதை அறுவை செய்துதான் எடுக்க முடியுமா? வேறு வழி உண்டா? இது ஆபத்தானதா? எத்தனை வருடங்களுக்கொரு முறை காப்பர்டியை மாற்ற வேண்டும்? -சி. ஈஸ்வாp, அந்தியூர்.

காப்பர்டியில் நிறைய வகைகள் உள்ளன. தரத்தைப் பொறுத்து, அவற்றை வருடத் திற்கொரு முறையோ அல்லது இரண்டு, மூன்று வருடங்களுக்கொரு முறையோ மாற்றிக் கொள்ளலாம். காப்பர் டி போட்டுக் கொண்ட சில பெண்களுக்கு இரத்தப் போக்கு திடீரென அதிகமிருக்கும். அப்படியிருந்தால், அதை எடுத்து விட்டு, சில நாட்கள் இடைவெளி விட்டு, மறுபடி போடுவார்கள். நீங்கள் பல வருடங்களாக அதைக் கண்டு கொள்ளாமலேயே விட்டிருக்கிறீர்கள் என்று தெரிகிறது. ஸ்கேன் எடுத்துப் பார்த்தால் அது இருக்கும் இடம் சரியாகத் தெரியும். மேலோட்டமாக இருந்தால், அறுவை சிகிச்சையின்றி, அதை எடுத்து விடுவார்கள். ரொம்பவும் ஆழமாக இருந்தால் அறுவை தேவைப் படலாம். அதை உங்களைப் பரிசோதித்த மருத்துவர்தான் முடிவு செய்ய வேண்டும். மருத்துவரிடம் தாமதிக்காமல் ஆலோசனை பெறுங்கள். இதை எடுத்து விட்டு, மூன்று மாதங்கள் இடைவெளி தரவும். பிறகு உங்கள் உடல்நிலையைப் பொறுத்து மீண்டும் வேறு பொருத்திக் கொள்ளலாம். எல்லாவற்றையும் விட, உங்கள் கணவரை ஆணுறை உபயோகிக்கச் சொல்வது யாருக்கும், எந்த பாதிப்பும் இல்லாத எளிய கருத்தடை முறை.

என் கணவருக்கு வயது 40. அவருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. உறவின் போது முன்பிருந்த ஈடுபாடு அவரிடம் இல்லை. சர்க்கரை நோய் என்பது உறவின் மூலம் பரவ வாய்ப்புண்டா? -கே. நீலா, சென்னை.

உறவின் மூலம் சர்க்கரை பரவாது. பயம் வேண்டாம். சர்க்கரையால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு உறவில் ஈடுபாடு குறைவது சகஜமே. மனம் மற்றும் உணவுக் கட்டுப்பாடு இரண்டும் தான் சர்க்கரை நோய்க்கான சிகிச்சைகள். நீரிழிவுநோய்க்கு நிரந்தரத் தீர்வு கிடையாது. நீரிழிவு நோயாளிகள் தினம் இரண்டு முதல் ஒன்பது கிலோ மீட்டர் வரை நடக்க வேண்டும். கலோரி குறைவான உணவுகளையே சாப்பிட வேண்டும். தினம் ஒரு வேளை கோதுமை உணவு அவசியம். கீரையும், காய்கறிகளும் தினசரி உணவில் கணிசமாக இருக்க வேண்டும். வெளியிடங்களுக்குச் செல்லும் போது வெட்கப் படாமல் சர்க்கரை இல்லாத பானங்களையே கேட்டுக் குடிக்கவும். செயற்கை இனிப்புகூட வேண்டாம். இவை தவிர பிரத்யேகமாக மருந்துகளே தேவையில்லை. சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வென்றே சில யோகாசனங்கள் உள்ளன. அவற்றையும் தினம் செய்யலாம். இப்படியெல்லாம் மனம் மற்றும் உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தால், செக்ஸ் உறவும் இயல்பாக இருக்கும். நூறு வயது வரை ஆரோக்கியமாகவும் வாழலாம்.