சிறிய மார்பகமா..?
தாய்மைக்கு உதவும் பெண்ணின் மார்பகங்கள், ஆண்களின் பார்வையில் காம உறுப்பு. ஆண்களுக்கு ஆண் குறியின் அளவைப் பற்றிய வேதனை இருப்பதை மாதிரியே, பெரும்பாலான பெண்களுக்குத் தமது மார்பகங்கள் பற்றிய கவலை இருக்கிறது.
சிறிய மார்பகங்களால் விவாகரத்து வரை போன திருமண உறவுகளும் உண்டு. உண்மையில் உடல் உறவில் இன்பம் அடைய, பெண்ணின் மார்பகங்களுக்கும், ஆணுறுப்பின் நீளத்துக்கும் நேரடியான தொடர்பே இல்லை.
பல ஆராய்ச்சிகளில் பெண்ணின் மார்புகள் சிறியதாக இருந்தால் அவை மிகவும் உணர்ச்சியுடையவை, அதிகக் கிளர்ச்சியைக் கொடுக்கக் கூடியவை என நிரூபிக்கப் பட்டுள்ளன. மற்ற விலங்குகள் எவ்வாறு பால் கொடுக்கும் மார்பகங்கள் பற்றிக் கவலைப்படுவதில்லையோ, அதே போல் பழங்கால மனிதர்களும் அதைப் பற்றிக் கவலைப்பட்டதில்லை. இன்றும்கூட பழங்குடியினர் மார்புகளை ஒரு செக்ஸ் உறுப்பாகக் கருதுவதில்லை.
சிறிய மார்பகங்களில் நரம்புகளின் அடர்த்தி அதிகமாக இருக்கும் என்பதால் உறவின் போதான கிளர்ச்சி அதிகமாக இருக்கும். பெரிய மார்பகங்களில் நரம்புகளின் அடர்த்தி குறைவாக இருக்கும்.
பெண் கர்ப்பமடைகிற போது மார்பகங்கள் பெரியதாக மாறும். இதனாலேயே பல விளம்பர மாடல்கள் கர்ப்பமாகி, மார்புகளைப் பெரிதாக்கிக் கொள்கிறார்கள். ஆண்களைப் பொறுத்தவரை பெரிய அளவிலான மார்பகங்களைத்தான் கவர்ச்சியானதாக நினைக்கிறார்கள். மேலும் இன்றைய பத்திரிகைகள், இணையம், தொலைக்காட்சி மூலமாக இக்கருத்து மக்களிடையே ஆழமாகப் பதிந்து விட்டது.
கர்ப்பம் தரிக்கும் போதும், தாய்ப்பால் கொடுக்கும் போதும் பெருத்துப் போகும் மார்பகங்கள், அதன் பிறகு மீண்டும் அதன் பழைய அளவுக்கே திரும்பும். இதைச் சரியாகப் புரிந்து கொள்ளாத பெண்கள், தனது மார்பகங்கள் பிரசவத்துக்குப் பிறகும், தாய்ப்பாலை நிறுத்திய பிறகும் சிறுத்து விட்டதாக நினைத்துப் புலம்புவார்கள். உண்மையில் அவை அளவில் சுருங்குவதில்லை. பால் சுரப்பின் காரணமாக பெருத்திருந்தவை, அதை நிறுத்திய பிறகு சகஜ நிலைக்கு வருகின்றன. அவ்வளவு தான்.
மார்பகங்களை மூன்று முறைகளில் பெரிதாக்கிக் கொள்ளலாம்.
- வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட எர்டிக்ட் என்ற மாத்திரையைக் குறிப்பிட்ட மாதங்கள் வரை உட்கொண்டால் அளவு பெரிதாகும்.
- மார்பின் அடியில் உள்ள தசைகளைத் தூண்டி, வலுப்படுத்தும் பயிற்சிகள் உள்ளன. மருத்துவரின் ஆலோசனை மற்றும் சில கருவிகளின் உதவியோடு இதைச் செய்யலாம்.
- அறுவை சிகிச்சை செய்து சிலிக்கன் பைகளை உள்ளே நுழைக்கலாம். முதலிரண்டு முறைகளையும் சேர்த்துச் செய்தால் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.
By Dr.ஷர்மிளா
1 Comments:
Mam how to reduce the size of chest.
Post a Comment
<< Home